கலாத்தியர் 3 : 1 (ECTA)
3.கொள்கைப் பகுதிநம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆதல் அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா?
கலாத்தியர் 3 : 2 (ECTA)
உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்; நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
கலாத்தியர் 3 : 3 (ECTA)
தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?
கலாத்தியர் 3 : 4 (ECTA)
நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத் தான் முடியுமா?
கலாத்தியர் 3 : 5 (ECTA)
உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடயே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
கலாத்தியர் 3 : 6 (ECTA)
ஆபிரகாமைப் பாருங்கள்! “அவர் கடவுள்மீது நம்பிக்கை
கொண்டார்; அதைக் கடவுள்
அவருக்கு நீதியாகக் கருதினார்.” [* தொநூ 15:6; உரோ 4: 3 ]
கலாத்தியர் 3 : 7 (ECTA)
ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். [* உரோ 4: 16 ]
கலாத்தியர் 3 : 8 (ECTA)
நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல், “உன் வழியாக மக்களினங்கள்
அனைத்தும் ஆசி பெறும்”
என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. [* தொநூ 12: 3 ]
கலாத்தியர் 3 : 9 (ECTA)
ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்குபெறுவர்.
கலாத்தியர் 3 : 10 (ECTA)
சட்டத்தின் விளைவு: சாபம் திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், “திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!” என்று எழுதியுள்ளது. [* இச 27: 26 ]
கலாத்தியர் 3 : 11 (ECTA)
சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.” [* அப 2:4; உரோ 1: 17 ]
கலாத்தியர் 3 : 12 (ECTA)
திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, “சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்” என்று எழுதியுள்ளது. [* லேவி 18: 5 ]
கலாத்தியர் 3 : 13 (ECTA)
“மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்” என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். [* இச 21: 23 ]
கலாத்தியர் 3 : 14 (ECTA)
ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக் கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.
கலாத்தியர் 3 : 15 (ECTA)
திருச்சட்டமும் வாக்குறுதியும் சகோதர சகோதரிகளே. உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக் காட்டுத் தருகிறேன். மனிதர் முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை யாரும் செல்லாததாக்கவோ அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது.
கலாத்தியர் 3 : 16 (ECTA)
வாக்குறுதிகள்ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் தரப்பட்டன. பலரைக் குறிக்கும் முறையில் ‘வழி மரபினர்களுக்கு’ என்று இல்லாமல் ஒருவரையே குறிக்கும் முறையில் ‘உன் மரபினருக்கு’ என்று உள்ளது. அந்த மரபினர் கிறிஸ்துவே. [* தொநூ 12: 7 ]
கலாத்தியர் 3 : 17 (ECTA)
என் கருத்து இதுவே; கடவுள் ஏற்கெனவே முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிட முடியாது; அவரது வாக்குறுதியைப் பொருளற்றதாக்கி விடவும் முடியாது. [* விப 12: 40 ]
கலாத்தியர் 3 : 18 (ECTA)
திருச்சட்டம் சார்ந்த செயல்களால் உரிமைப்பேறு கிடைப்பதாய் இருந்தால் அது வாக்குறுதியால் தரப்படுவது இல்லை என்றாகிறது. ஆனால், கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார். [* உரோ 4: 14 ]
கலாத்தியர் 3 : 19 (ECTA)
அப்படியானால் திருச்சட்டத்தின் பயன் என்ன? குற்றங்களை எடுத்துக்காட்ட அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதிக்கு உரியவரான வழிமரபினர் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்கள் மூலம் அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்க் கொடுக்கப்பட்டது.
கலாத்தியர் 3 : 20 (ECTA)
நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார்.
கலாத்தியர் 3 : 21 (ECTA)
அடிமைகளும் உரிமை மக்களும் அப்படியானால், திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருபோதும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் வழியாகவே மனிதர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகியிருக்கலாம்.
கலாத்தியர் 3 : 22 (ECTA)
ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.
கலாத்தியர் 3 : 23 (ECTA)
நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது.
கலாத்தியர் 3 : 24 (ECTA)
இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது.
கலாத்தியர் 3 : 25 (ECTA)
இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை.
கலாத்தியர் 3 : 26 (ECTA)
ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3 : 27 (ECTA)
அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.
கலாத்தியர் 3 : 28 (ECTA)
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3 : 29 (ECTA)
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள். * உரோ 4:13..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29