கலாத்தியர் 1 : 1 (ECTA)
1.முன்னுரைவாழ்த்து (1-2) கலாத்திய மாநிலத்தில் உள்ள திருச்சபைகளுக்கு, எந்த ஒரு தனி மனிதராலோ மனித அதிகாரத்தாலோ ஏற்படுத்தப்படாமல் இயேசு கிறிஸ்துவாலும் இறந்த அவரை உயிர்த்தெழச் செய்த தந்தையாம் கடவுளாலும் திருத்தூதனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும் என்னுடன் இருக்கும் சகோதரர் அனைவரும் எழுதுவது;
கலாத்தியர் 1 : 3 (ECTA)
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கலாத்தியர் 1 : 4 (ECTA)
இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார். [* 1 திமொ 2: 6 ]
கலாத்தியர் 1 : 5 (ECTA)
தந்தையாம் கடவுளுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
கலாத்தியர் 1 : 6 (ECTA)
நற்செய்தி ஒன்றே கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. [* 2 கொரி 11: 4 ]
கலாத்தியர் 1 : 7 (ECTA)
வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.
கலாத்தியர் 1 : 8 (ECTA)
நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
கலாத்தியர் 1 : 9 (ECTA)
ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!
கலாத்தியர் 1 : 10 (ECTA)
இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.
கலாத்தியர் 1 : 11 (ECTA)
2.நிகழ்ச்சிப் பகுதிபவுல் திருத்தூதராக அழைப்புப் பெற்ற வரலாறு சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்; நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.
கலாத்தியர் 1 : 12 (ECTA)
எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.
கலாத்தியர் 1 : 13 (ECTA)
நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். [* திப 8:3; 22:4,5; 26:9- 11 ]
கலாத்தியர் 1 : 14 (ECTA)
மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன். [* திப 22: 3 ]
கலாத்தியர் 1 : 15 (ECTA)
ஆனால், தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், [* திப 9:3-6; 22:6-10; 26:13- 18 ]
கலாத்தியர் 1 : 16 (ECTA)
தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. [* திப 9:3-6; 22:6-10; 26:13- 18 ]
கலாத்தியர் 1 : 17 (ECTA)
எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால், உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.
கலாத்தியர் 1 : 18 (ECTA)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். * திப 9:26-30..
கலாத்தியர் 1 : 19 (ECTA)
ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
கலாத்தியர் 1 : 20 (ECTA)
நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!
கலாத்தியர் 1 : 21 (ECTA)
பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.
கலாத்தியர் 1 : 22 (ECTA)
ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன்.
கலாத்தியர் 1 : 23 (ECTA)
“ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்” என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.
கலாத்தியர் 1 : 24 (ECTA)
அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24