எஸ்றா 7 : 1 (ECTA)
எஸ்ரா எருசலேமுக்கு வருதல் இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.
எஸ்றா 7 : 2 (ECTA)
இந்த எஸ்ரா செராயாவின் மகன்; இவர் அசாரியாவின் மகன்; இவர் இல்கியாவின் மகன்; இவர் சல்லூமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் அகித்தோப்பின் மகன்;
எஸ்றா 7 : 3 (ECTA)
இவர் அமாரியாவின் மகன்; இவர் அசரியாவின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்;
எஸ்றா 7 : 4 (ECTA)
இவர் செரகியாவின் மகன்; இவர் உசீயின் மகன்; இவர் புக்கீயின் மகன்;
எஸ்றா 7 : 5 (ECTA)
இவர் அபிசுவாவன் மகன்; இவர் பினகாசின் மகன்; இவர் எலயாசரின் மகன்; இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.
எஸ்றா 7 : 6 (ECTA)
எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டநூலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார்.
எஸ்றா 7 : 7 (ECTA)
அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர்.
எஸ்றா 7 : 8 (ECTA)
அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஐந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள்.
எஸ்றா 7 : 9 (ECTA)
ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஐந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார்.
எஸ்றா 7 : 10 (ECTA)
எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
எஸ்றா 7 : 11 (ECTA)
அர்த்தக்சஸ்தா எஸ்ராவுக்கு வழங்கிய ஆவணம் ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு;
எஸ்றா 7 : 12 (ECTA)
“மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது;
எஸ்றா 7 : 13 (ECTA)
என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிலும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.
எஸ்றா 7 : 14 (ECTA)
ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவுளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம். [* ஆகா 1:1; செக் 1: 1 ]
எஸ்றா 7 : 15 (ECTA)
மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும்,
எஸ்றா 7 : 16 (ECTA)
மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.
எஸ்றா 7 : 17 (ECTA)
இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும்.
எஸ்றா 7 : 18 (ECTA)
எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.
எஸ்றா 7 : 19 (ECTA)
உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும். * விப 12:1-20..
எஸ்றா 7 : 20 (ECTA)
மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்றா 7 : 21 (ECTA)
மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது; விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும்.
எஸ்றா 7 : 22 (ECTA)
அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம்.
எஸ்றா 7 : 23 (ECTA)
நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும்.
எஸ்றா 7 : 24 (ECTA)
மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.
எஸ்றா 7 : 25 (ECTA)
எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும்.
எஸ்றா 7 : 26 (ECTA)
மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்; மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும்”.
எஸ்றா 7 : 27 (ECTA)
எஸ்ரா இறைவனைப் புகழ்தல் எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!
எஸ்றா 7 : 28 (ECTA)
மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரிகள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28