எஸ்றா 2 : 1 (ECTA)
சிறையிருப்பினின்று திரும்பி வந்தோரின் பட்டியல்
(நெகே 7:4-73) அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தினின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.
எஸ்றா 2 : 2 (ECTA)
செருபாபேலோடு வந்தவர்கள்; ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை;
எஸ்றா 2 : 3 (ECTA)
பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 4 (ECTA)
செபத்தியாவின் மக்கள் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 5 (ECTA)
ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர்.
எஸ்றா 2 : 6 (ECTA)
ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.
எஸ்றா 2 : 7 (ECTA)
ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
எஸ்றா 2 : 8 (ECTA)
சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.
எஸ்றா 2 : 9 (ECTA)
சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர்.
எஸ்றா 2 : 10 (ECTA)
பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 11 (ECTA)
பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 12 (ECTA)
அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 13 (ECTA)
அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர்.
எஸ்றா 2 : 14 (ECTA)
பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்.
எஸ்றா 2 : 15 (ECTA)
அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர்.
எஸ்றா 2 : 16 (ECTA)
எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.
எஸ்றா 2 : 17 (ECTA)
பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 18 (ECTA)
யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர்.
எஸ்றா 2 : 19 (ECTA)
ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 20 (ECTA)
கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.
எஸ்றா 2 : 21 (ECTA)
பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 22 (ECTA)
நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர்.
எஸ்றா 2 : 23 (ECTA)
அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
எஸ்றா 2 : 24 (ECTA)
அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 25 (ECTA)
கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 26 (ECTA)
இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர்.
எஸ்றா 2 : 27 (ECTA)
மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 28 (ECTA)
பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 29 (ECTA)
நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 30 (ECTA)
மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர்.
எஸ்றா 2 : 31 (ECTA)
மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
எஸ்றா 2 : 32 (ECTA)
ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர்.
எஸ்றா 2 : 33 (ECTA)
லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர்.
எஸ்றா 2 : 34 (ECTA)
எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர்.
எஸ்றா 2 : 35 (ECTA)
செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.
எஸ்றா 2 : 36 (ECTA)
குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.
எஸ்றா 2 : 37 (ECTA)
இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 38 (ECTA)
பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்.
எஸ்றா 2 : 39 (ECTA)
ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.
எஸ்றா 2 : 40 (ECTA)
லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.
எஸ்றா 2 : 41 (ECTA)
பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
எஸ்றா 2 : 42 (ECTA)
வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.
எஸ்றா 2 : 43 (ECTA)
கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.
எஸ்றா 2 : 44 (ECTA)
கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,
எஸ்றா 2 : 45 (ECTA)
இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,
எஸ்றா 2 : 46 (ECTA)
காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், அனானின் மக்கள்,
எஸ்றா 2 : 47 (ECTA)
கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,
எஸ்றா 2 : 48 (ECTA)
இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,
எஸ்றா 2 : 49 (ECTA)
ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,
எஸ்றா 2 : 50 (ECTA)
அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,
எஸ்றா 2 : 51 (ECTA)
பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,
எஸ்றா 2 : 52 (ECTA)
பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,
எஸ்றா 2 : 53 (ECTA)
பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,
எஸ்றா 2 : 54 (ECTA)
நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!
எஸ்றா 2 : 56 (ECTA)
சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,
எஸ்றா 2 : 57 (ECTA)
செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.
எஸ்றா 2 : 58 (ECTA)
கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.
எஸ்றா 2 : 59 (ECTA)
மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே;
எஸ்றா 2 : 60 (ECTA)
தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 61 (ECTA)
மற்றும், குருக்களின் புதல்வர்கள்; அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.
எஸ்றா 2 : 62 (ECTA)
இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
எஸ்றா 2 : 63 (ECTA)
அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார். [* எண் 27: 21 ]
எஸ்றா 2 : 64 (ECTA)
மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.
எஸ்றா 2 : 65 (ECTA)
அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.
எஸ்றா 2 : 66 (ECTA)
அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
எஸ்றா 2 : 67 (ECTA)
ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
எஸ்றா 2 : 68 (ECTA)
குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.
எஸ்றா 2 : 69 (ECTA)
அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம்* வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள். * ‘அறுபத்தோராயிரம் திராக்மா’ என்பது எபிரேய பாடம். ; ‘ஐயாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம்..
எஸ்றா 2 : 70 (ECTA)
குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள். [* 1 குறி 9:2; நெகே 11: 3 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70