எசேக்கியேல் 7 : 1 (ECTA)
இஸ்ரயேலை நெருங்கிக் கொண்டிருக்கும் அழிவு ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 7 : 2 (ECTA)
மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ முடிவு வந்துவிட்டது! நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும் முடிவு வந்துவிட்டது!
எசேக்கியேல் 7 : 3 (ECTA)
இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நான் என் சினத்தை உன்மீது அனுப்புவேன்; உன் நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பிடுவேன்; வெறுப்புக்குரிய உன் எல்லாச் செயல்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பேன்.
எசேக்கியேல் 7 : 4 (ECTA)
என் கண்களில் உனக்கு இரக்கம் இராது; நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக, உன் நடத்தைக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
எசேக்கியேல் 7 : 5 (ECTA)
தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்; இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!
எசேக்கியேல் 7 : 6 (ECTA)
முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு! உனக்கெதிராக அது எழுந்து விட்டது; இதோ, அது வருகின்றது.
எசேக்கியேல் 7 : 7 (ECTA)
நாட்டில் வாழ்வோனே! எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது. அந்த வேளை வந்தேவிட்டது. அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல; குழப்பத்தின் நாளே. நெருங்கிவிட்டது அந்நாள்.
எசேக்கியேல் 7 : 8 (ECTA)
இப்போது விரைவில் என் சீற்றத்தை உன்மேல் பாய்ச்சி என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்; உன் வழிகளுக்கேற்ப உனக்குத் தீர்ப்பிட்டு, உன் அருவருப்புகளுக்குத் தக்கபடி உனக்குப் பதிலடி கொடுப்பேன்.
எசேக்கியேல் 7 : 9 (ECTA)
என் கண்களில் உனக்கு இரக்கம் இராது; நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக உன் நடத்தைக்கும் உன் நடுவிலிருக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்றும் நானே தாக்குகிறேன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
எசேக்கியேல் 7 : 10 (ECTA)
இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! கேடுகாலம் நெருங்கி விட்டது; அநீதி துளித்து விட்டது; செருக்கு அரும்பிவிட்டது. [* புல 4: 10 ]
எசேக்கியேல் 7 : 11 (ECTA)
வன்முறை, கொடுமையின் கோலாக வளர்ந்துள்ளது; அவர்களோ அவர்களது செழிப்போ அவர்களது செல்வமோ, எதுவுமே தப்ப முடியாது. அவர்களுக்குள் யாருமே மேன்மையுடன் திகழ முடியாது.
எசேக்கியேல் 7 : 12 (ECTA)
அந்நேரம் வந்துவிட்டது; அந்நாள் நெருங்கிவிட்டது. வாங்குவோர் மகிழ வேண்டாம்; விற்போர் வருந்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.
எசேக்கியேல் 7 : 13 (ECTA)
அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.
எசேக்கியேல் 7 : 14 (ECTA)
அவர்கள் எக்காளம் ஊதி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், போரிடச் செல்வோர் யாருமில்லை. எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது.
எசேக்கியேல் 7 : 15 (ECTA)
இஸ்ரயேலின் பாவங்களுக்கான தண்டனை வெளிப்புறம் வாளும் உட்புறம் பஞ்சமும் கொள்ளை நோயும் உள்ளன. வயலில் இருப்போர் வாளால் மடிவர். நகரில் இருப்போரையோ பஞ்சமும் கொள்ளை நோயும் விழுங்கும்.
எசேக்கியேல் 7 : 16 (ECTA)
அவர்களுள் சிலர் பிழைத்து, தப்பி ஓடினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப் பள்ளத்தாக்குப் புறாக்களைப் போலப் புலம்புவர்.
எசேக்கியேல் 7 : 17 (ECTA)
கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும். * திவெ 6:8..
எசேக்கியேல் 7 : 18 (ECTA)
அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்; திகில் அவர்களை மூடிக்கொள்ளும்; முகங்கள் எல்லாம் வெட்கி நாணும்; அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டை யடிக்கப்படும்.
எசேக்கியேல் 7 : 19 (ECTA)
தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்;. பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்; ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில் அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும் அவர்களை விடுவிக்க இயலாது; அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை; அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை;. ஏனெனில் அவர்களது குற்றப்பழியே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது.
எசேக்கியேல் 7 : 20 (ECTA)
அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்; அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்; எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.
எசேக்கியேல் 7 : 21 (ECTA)
மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.
எசேக்கியேல் 7 : 22 (ECTA)
அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்; அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்; கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.
எசேக்கியேல் 7 : 23 (ECTA)
நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்; நாடு கொலைத் தீர்ப்புகளாலும் நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன.
எசேக்கியேல் 7 : 24 (ECTA)
ஆகையால் வேற்றினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்; அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்; வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்; அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும்.
எசேக்கியேல் 7 : 25 (ECTA)
கடுந்துயர் அடையும்பொழுது, அமைதியை நாடுவர்; ஆனால், அது கிடைக்காது.
எசேக்கியேல் 7 : 26 (ECTA)
அழிவுக்குமேல் அழிவு உண்டாகும், வதந்திக்கு மேல் வதந்தி பரவும்; இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்; ஆனால், குருக்களிடம் திருச்சட்டமும் மூப்பர்களிடம் அறிவுரையும் அற்றுப்போகும்.
எசேக்கியேல் 7 : 27 (ECTA)
அரசன் புலம்புவான்; இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்; நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்; அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்; அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்; அப்போது, நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27