எசேக்கியேல் 40 : 1 (ECTA)
எசேக்கியேலின் காட்சியில் எருசலேம்
(40:1-48:35)
எங்கள் சிறையிருப்பின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் மாதத்தின் பத்தாம் நாளில், எருசலேம் நகர் அழிக்கப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நிறைவுநாளில், ஆண்டவரின் ஆற்றல் என்மீது இறங்கியது. அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
எசேக்கியேல் 40 : 2 (ECTA)
கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார். அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன. [* திவெ 21: 10 ]
எசேக்கியேல் 40 : 3 (ECTA)
அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார். அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன். அவரது தோற்றம் வெண்கலமயமாய் இருந்தது. அவர் நார்ப்பட்டுக் கயிறும் அளவுகோலும் கையில் வைத்துக் கொண்டு, வாயிலில் நின்று கொண்டிருந்தார். [* திவெ 11:1; 21: 15 ]
எசேக்கியேல் 40 : 4 (ECTA)
அந்த மனிதர் என்னை நோக்கி, “மானிடா! உன் கண்களால் பார், அனைத்தையும் உன் இதயத்தில் பதியவை. ஏனெனில், இவற்றைப் பார்க்கும்படியே நீ இங்குக் கூட்டி வரப்பட்டாய். நீ காணும் யாவற்றையும் இஸ்ரயேல் வீட்டாரக்குத் தெரிவி” என்றார்.
எசேக்கியேல் 40 : 5 (ECTA)
கிழக்கு வாயில் கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும்சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன். அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல் ஆறு முழமும் நான்கு விரற்கடை நீளமும் கொண்டிருந்தது. அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்; உயரம் ஒரு கோல். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 6 (ECTA)
பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார். அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 7 (ECTA)
பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன. அறைகளுக்கு இடையே ஐந்து முழ இடைவெளி இருந்தது. கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 8 (ECTA)
பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 9 (ECTA)
பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார். அதன் அளவு எட்டு முழம்; அதன் புடைநிலை இரண்டு முழம்; இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 10 (ECTA)
கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன. மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 11 (ECTA)
பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார். அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 12 (ECTA)
ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 13 (ECTA)
பின்னர் அவர் ஓர் அறையின் பின்பக்கச் சுவர் உச்சிலிருந்து நேர் எதிரே இருந்த அறையின் உச்சிவரை இடைப்பட்ட வாயிலை அளந்தார். ஒரு கதவு இன்னொரு கதவுக்கு நேரெதிராய் இருந்தது. இடைப்பட்ட தூரம் இருபத்தைந்து முழம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 14 (ECTA)
அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 15 (ECTA)
வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஐம்பது முழம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 16 (ECTA)
அறைகளுக்கும் வாயிலின் உள்ளிருந்த புடைநிலைகளுக்கும் குறுகிய பலகணிகள் சுற்றிலும் இருந்தன. புகுமுக மண்டபத்துக்கும் பலகணிகள் இருந்தன. சுற்றிலுமிருந்த பலகணிகள் உள்நோக்கி இருந்தன. புடைநிலைகளில் பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 17 (ECTA)
வெளிமுற்றம் பின்னர் அவர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே முற்றத்தைச் சுற்றி அறைகளும் நடைமேடைகளும் அமைக்கப்பெற்றிருந்தன. நடை மேடைகளைச் சுற்றி முப்பது அறைகள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 18 (ECTA)
வாயிலின் பக்கத்தில் இருந்த நடைமேடை நீளமும் அகலமும் ஒரே அளவை உடையதாய் இருந்தது. இதுவே கீழ்த்தள நடைமேடை. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 19 (ECTA)
பின்னர் அவர் கீழ்வாயிலின் உட்புறமிருந்து உள் முற்றத்தின் வெளிப்புறம்வரை அளந்தார். அது கிழக்கேயும் வடக்கேயும் நூறு முழம் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 20 (ECTA)
வடக்கு வாயில் பின்னர் அவர் வெளிமுற்றத்தை நோக்கிய வடக்கு வாயிலின் நீள அகலங்களை அளந்தார். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 21 (ECTA)
ஒவ்வொரு பக்கமும் மூன்றாக இருந்த அறைகளும், புடைநிலைகளும் புகுமுக மண்டபமும் முந்தைய வாயிலைச் சுற்றியிருந்தவற்றின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதாவது ஐம்பது முழம் நீளம், இருபத்தைந்து முழம் அகலம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 22 (ECTA)
அதன் பலகணிகள், புகுமுக மண்டபம், பேரீச்சமர வடிவங்கள் யாவும் கிழக்கு நோக்கியவாயிலின் அருகிலிருந்தவற்றின் அதே அளவையே கொண்டிருந்தன. அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன. அவற்றின் எதிரில் புகுமுக மண்டபம் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 23 (ECTA)
கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது. ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது நூறு முழம் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 24 (ECTA)
தெற்கு வாயில் பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது. அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்; அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 25 (ECTA)
அதற்கும் முக மண்டபத்திற்கும், மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 26 (ECTA)
அதற்கு ஏறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன. முன்பக்கம் புகுமுக மண்டபம் இருந்தது. அதன் இருபக்கமிருந்த புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 27 (ECTA)
உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது. அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார். அது நூறு முழ நீளம் இருந்தது. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 28 (ECTA)
உள் முற்றம்-தென் வாயில் பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார். அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 29 (ECTA)
அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும் மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 30 (ECTA)
சுற்றிலுமிருந்து புகுமுக மண்டபங்களுக்கு நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 31 (ECTA)
அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது. புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 32 (ECTA)
உள்முற்றம்-கீழைவாயில் பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று, அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 33 (ECTA)
அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் அனைத்திற்கும் மற்றவற்றுக்கான அளவுகளே இருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தையும் சுற்றிப் பலகணிகள் இருந்தன. அவற்றின் நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 34 (ECTA)
அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 35 (ECTA)
உள்முற்றம்-வடவாயில் பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 36 (ECTA)
அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும் ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 37 (ECTA)
அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு ஏறிச்செல்ல எட்டுப் படிகள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 38 (ECTA)
ஒவ்வோர் உள்வாயிலிலும் புகுமுக மண்டபத்தின் அருகில் வாயிலுடன் கூடிய அறை ஒன்று இருந்தது. அங்கே எரிபலிப் பொருள்களைக் கழுவுவர். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 39 (ECTA)
வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தில் ஒவ்வோரு பக்கமும் இரு மேசைகள் இருந்தன. அவற்றின்மேல் எரிபலி, பாவம் போக்கும் பலி, குற்றநீக்கப் பலி ஆகியவற்றிற்கான விலங்குகள் வெட்டப்படும். * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 40 (ECTA)
வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தின் வெளிச் சுவரருகே வடக்கு வாயிலில் உள்ள படிகளின் ஒரு பக்கத்தில் இரு மேசைகளும் மறு பக்கத்தில் இரு மேசைகளும் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 41 (ECTA)
இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும் நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 42 (ECTA)
செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென மேலும் நான்கு மேசைகள் இருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன. அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன. * :20 1 அர 6:1-38; 2 குறி 3:1-9..
எசேக்கியேல் 40 : 43 (ECTA)
சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.
எசேக்கியேல் 40 : 44 (ECTA)
உள் வாயிலின் வெளியே உள்முற்றத்தில் இசைக்குழு அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கு வாயிலின் பக்கத்தில் தெற்கு நோக்கியிருந்தது. இன்னொன்று கிழக்கு வாயிலின் பக்கத்தில வடக்கு நோக்கியிருந்தது.
எசேக்கியேல் 40 : 45 (ECTA)
அவர் என்னிடம், “தெற்கு நோக்கியிருக்கும் அறை கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.
எசேக்கியேல் 40 : 46 (ECTA)
வடக்கு நோக்கி இருக்கும் அறை பீடப்பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது. இவர்கள் சாதோக்கின் மக்கள். லேவியரில் இவர்கள் மட்டுமே ஆண்டவருக்குப் பணிபுரிய அவரருகில் செல்லலாம்” என்றார்.
எசேக்கியேல் 40 : 47 (ECTA)
உள்முற்றமும் கோவில் கட்டடமும் பின்னர் அவர் முற்றத்தை அளந்தார். அது நூறு முழ நீளமும் நூறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது. கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.
எசேக்கியேல் 40 : 48 (ECTA)
அவர் என்னைக் கோவிலின் புகுமுக மண்டபத்திற்கு அழைத்து வந்து, அதன் புடைநிலைகளை அளந்தார். அது ஒரு பக்கம் ஐந்து முழமும் மறுபக்கம் ஐந்து முழமும் இருந்தது. வாயிலின் அகலம் பதினான்கு முழம்; அதன் புடைநிலைகள் ஒரு பக்கம் மூன்று முழம், மறுபக்கம் மூன்று முழம்.
எசேக்கியேல் 40 : 49 (ECTA)
புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது. அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன. புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் தூண்கள் இருந்தன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49