எசேக்கியேல் 31 : 1 (ECTA)
கேதுரு மரத்துக்கு ஒப்பான எகிப்து பதினோராம் ஆண்டில், மூன்றாம் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
எசேக்கியேல் 31 : 2 (ECTA)
மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்:மேன்மையில் உனக்கு நிகர் யார்?
எசேக்கியேல் 31 : 3 (ECTA)
இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்! அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன், மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று; அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று.
எசேக்கியேல் 31 : 4 (ECTA)
தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது; ஆழ் ஊற்றுகள் அதனை உயர்ந்து வளரச் செய்தன; அவை தம் அருவிகளாக அதனைச் சுற்றி ஓடி கால்வாய்களாகக் காட்டின் எல்லா மரங்களுக்கும் நீர் பாய்ச்சின.
எசேக்கியேல் 31 : 5 (ECTA)
காட்டின் எல்லா மரங்களையும் விட அது ஓங்கி வளர்ந்தது; அதன் தளிர்கள் பெருகின; நீர் வளத்தால் கிளைகள் நீண்டன; கொப்புகள் மிகுந்தன.
எசேக்கியேல் 31 : 6 (ECTA)
வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடுகள் கட்டின; காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன; அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன.
எசேக்கியேல் 31 : 7 (ECTA)
மிகுந்த நீரினுள் அதன் வேர்கள் சென்றதால், கிளைகள் தழைத்து அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.
எசேக்கியேல் 31 : 8 (ECTA)
கடவுளின் சோலையிலிருந்த கேதுரு மரங்களுக்கு அதற்குச் சமமான கிளைகள் இல்லை; அர்மோன் மரங்களுக்கு அதற்கு இணையான கொப்புகள் இல்லை; கடவுளின் சோலையிலிருந்த எந்த மரமும் அதைப்போன்று அழகுடன் இருந்ததில்லை. * தொநூ 2:9..
எசேக்கியேல் 31 : 9 (ECTA)
அடர்ந்த கிளைகளால் நான் அதனை அழகுபடுத்தினேன்; கடவுளின் சோலையாகிய ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம் அதன்மேல் பொறாமை கொண்டன.
எசேக்கியேல் 31 : 10 (ECTA)
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அது உயர்ந்து வளர்ந்து தன் உச்சியை மேகங்களுக்குள் நுழைத்து, தன் உயரத்தைப் பற்றித் தன் இதயத்தில் செருக்குற்றது.
எசேக்கியேல் 31 : 11 (ECTA)
எனவே அதனை வேற்றினத்தாருள் வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன். அவன் அதன் தீச்செயலுக்குத் தக்கவாறு அதனை நடத்துவான். நானும் அதனைப் புறம்பாக்குவேன்.
எசேக்கியேல் 31 : 12 (ECTA)
மக்களினங்களில் மிகக் கொடியோரான அன்னியர் அதனை வெட்டி வீழ்த்திவிடுவர். மலைகளிலும் அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும் அதன் கிளைகள் விழுந்து கிடக்கும்; அதன் கொம்புகள் நாடெங்கிலுமுள்ள ஓடைகளில் முறிந்து கிடக்கும். மண்ணின் மக்களெல்லாம் அதன் நிழலை விட்டுப்பிரிந்து அதனைப் புறக்கணிப்பர்.
எசேக்கியேல் 31 : 13 (ECTA)
வீழ்ந்து கிடக்கும் அதன் மேல் வானத்துப் பறவைகள் எல்லாம் வந்து அடையும். அதன் கிளைகளுக்கிடையே காட்டு விலங்குகள் யாவும் உலவும்.
எசேக்கியேல் 31 : 14 (ECTA)
இதனால் நீர்நிலைகளுக்கருகில் இருக்கும் எம்மரமும் மிகுந்த உயரத்திற்கு வளராது; தன் உச்சியை மேகங்களுக்கிடையில் நுழைக்காது; நீர்க்காலை அடுத்த எம்மரமும் அவற்றை எட்டும் அளவுக்கு உயராது. ஏனெனில் அவையெல்லாம் பாதாளப் படுகுழிக்குச் செல்லும் மானிடருடன் அழிவுக்குக் குறிக்கப்பட்டுள்ளன.
எசேக்கியேல் 31 : 15 (ECTA)
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை முன்னிட்டு லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.
எசேக்கியேல் 31 : 16 (ECTA)
கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப் பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும். நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும், லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும் கீழுலகில் ஆறுதல் பெறும்.
எசேக்கியேல் 31 : 17 (ECTA)
அதன் நிழலில் வாழ்ந்த கூட்டுநாடுகள் அதனோடு சேர்ந்து வாளால் மடிந்தவர்களுடன் பாதாளத்தில் போய்ச்சேரும்.
எசேக்கியேல் 31 : 18 (ECTA)
மேன்மையிலும் பெருமையிலும் ஏதேனின் எந்த மரம் உனக்கு ஒப்பாகும்? ஆயினும், ஏதேனின் மரங்களுடன் சேர்ந்து நீயும் கீழுலகுக்குத் தள்ளப்படுவாய். விருத்தசேதனமில்லார் நடுவே, வாளால் மடிந்தாரோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனது மக்கள் திரளுக்கும் நடக்கவிருப்பது இதுவே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18