எசேக்கியேல் 30 : 1 (ECTA)
‘எகிப்தை ஆண்டவர் தண்டிப்பார்’ ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 2 (ECTA)
“மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:‘ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது’ என்று அலறுங்கள்; [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 3 (ECTA)
ஏனெனில், அருகில் உள்ளது அந்த நாள்; ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது; அது மேகத்தின் நாள்; வேற்றினத்தாருக்கு அழிவின் நாள். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 4 (ECTA)
எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்; கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்; எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்; அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 5 (ECTA)
எகிப்துடன் கூசு, பூத்து, லூது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 6 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்; அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்; மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ; எசா 36:6.. ]
எசேக்கியேல் 30 : 7 (ECTA)
அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்; அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 8 (ECTA)
நான் எகிப்துக்குத் தீ வைத்து அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது ‘நானே ஆண்டவர்’என்பதை அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 9 (ECTA)
அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்; எகிப்தின் அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்; ஏனெனில், அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது. [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 10 (ECTA)
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 11 (ECTA)
மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந்த அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்; எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 12 (ECTA)
ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன். அந்நியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் வெறுமையாக்குவேன். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 13 (ECTA)
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் சிலைகளை அழிப்பேன்; நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்; எகிப்தில் இனி மன்னன் இரான்; நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 14 (ECTA)
பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்; சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்; நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 15 (ECTA)
எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்; நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 16 (ECTA)
எகிப்துக்கு நெருப்பிடுவேன்; சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்; புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்; தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 17 (ECTA)
ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்; அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 18 (ECTA)
எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரில் பகல் இரவாகும்; இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்; மேகங்களால் அது மூடப்படும்; சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 19 (ECTA)
இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 20 (ECTA)
‘எகிப்திய மன்னனின் வலிமை முறிந்தது’ பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 21 (ECTA)
“மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை. [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 22 (ECTA)
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும் — நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும் — முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 23 (ECTA)
மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 24 (ECTA)
பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 25 (ECTA)
நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]
எசேக்கியேல் 30 : 26 (ECTA)
எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.” [* எசா 19:1-25; எரே 46:2- 26 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26