எசேக்கியேல் 27 : 1 (ECTA)
தீருக்கான இரங்கற்பா ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 2 (ECTA)
மானிடா! தீர் நகர் குறித்து இரங்கற்பா ஒன்று பாடு. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 3 (ECTA)
கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு பல்வேறு கடற்கரை மக்களுடன் வாணிபம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்; தீர் நகரே! ‘நான் அழகில் சிறந்தவள்’ என நீ சொல்லிக்கொள்கின்றாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 4 (ECTA)
கடலின் தொலைவிடத்தை உன் எல்லைகள் எட்டும். உன்னைக் கட்டினோர் உன் அழகை நிறைவு செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 5 (ECTA)
செனீரிலிருந்து வந்த தேவதாரு மரங்களால் உனக்குப் பலகைகள் செய்தனர்; லெபனோனின் கேதுரு மரத்தால் உனக்குப் பாய்மரம் அமைத்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 6 (ECTA)
பாசானிலிருந்து கொண்டுவந்த கருவாலி மரங்களால் துடுப்புகள் செய்தனர்; கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால் உன் மேல்தளம் கட்டி அதில் தந்தங்களை இழைத்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 7 (ECTA)
எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி உன் பாய்மரக் கொடியாயிற்று; எலிசா தீவின் நீலத்துணியும் சிவப்புத்துணியும் விதானமாயின. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 8 (ECTA)
சீதோன், அர்வாத்து குடிமக்கள் உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்; தீர் நகரே! உன் திறமைமிக்க ஆடவர் உன்னிடம் இருந்தனர்; அவர்களே உன் மாலுமிகள் ஆயினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 9 (ECTA)
கேபால் நகரின் மூத்த கைவினைஞர் பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்; கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் அதன் மாலுமிகளும் உன் வாணிபப் பெருக்கில் ஆர்வம் கொண்டனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 10 (ECTA)
பாரசீகர், லூதியர், பூத்தியர் முதலியோர் உன் படையில் வீரராய்ச் சேவை செய்தனர். உன் மதில்களில் அவர்கள் தங்கள் கேடயங்களையும், தலைச் சீராக்களையும் தொங்கவிட்டு உனக்குப் பெருமை சேர்த்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 11 (ECTA)
அர்வாதியரும், ஏலேக்கியரும் உன் மதில்மேல் எப்பக்கமும் நின்றனர். கம்மாதியர் உன் காவல்மாடங்களில் நின்றனர்; தங்கள் கேடயங்களை உன் மதில்களில் எப்பக்கமும் தொங்கவிட்டு உன் அழகுக்கு அழகு சேர்த்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 12 (ECTA)
உன் பெருஞ்சொத்து காரணமாய் தர்சீசு உன்னோடு வாணிபம் செய்தது. வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம் ஆகியவற்றை உன் வாணிபப் பொருள்களாய்ப் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 13 (ECTA)
யாவானும் தூபாலும் மெசேக்கும் உன்னோடு வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் அடிமைகளையும் வெண்கலத்தையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 14 (ECTA)
உன் வணிகப் பொருள்களுக்காய்ப் பெத்தொகர்மாவினர் குதிரைகளையும் போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 15 (ECTA)
தெதான் மக்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். பல கடற்கரை நகர் மக்கள் உன் வாடிக்கையாளர் ஆயினர். அவர்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் உன் பொருள்களுக்கு ஈடாய்த் தந்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 16 (ECTA)
சிரியர் உன் மிகுதியான பொருள்களை முன்னிட்டு உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் சிவப்புக் கற்கள், சிவப்புப் பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், விலையுயர்ந்த நார்ப்பட்டு ஆடைகள், பவளங்கள், பளிங்குக் கற்கள் யாவற்றையும் உன் சந்தைக்குக் கொண்டு வந்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 17 (ECTA)
யூதாவும், இஸ்ரயேலும் உன்னுடன் வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் மின்னித்து, பன்னாக்கு ஆகிய ஊர்களின் கோதுமை, தைலங்கள், தேன், எண்ணெய், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 18 (ECTA)
தமஸ்கு நகரினர் உன்னுடைய மிகுதியான செல்வத்திற்காகவும் பலவகைப் பொருள்களுக்காகவும் உன்னுடன் வாணிபம் செய்து, எல்போனின் திராட்சை இரசத்தையும் சகாரின் கம்பளியையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 19 (ECTA)
தாணியரும் ஊசாவிலுள்ள கிரேக்கரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். அடித்த இரும்பு, இலவங்கம், வசம்பு ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 20 (ECTA)
தெதான் நாட்டினர் குதிரையில் சவாரி செய்ய உதவும் சேணங்கள் கொண்டு வந்து உன்னிடம் வாணிபம் செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 21 (ECTA)
உன் வாடிக்கையாளரான அரேபியா, கேதார் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆட்டுக்குட்டிகளையும், கிடாய்களையும், வெள்ளாடுகளையும் கொண்டுவந்து உன்னுடன் வாணிபம் செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 22 (ECTA)
சேபா மற்றும் இராமா ஆகிய நகர்களின் வணிகர்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் உன் பலவகைப் பொருள்களுக்காய் விலையுயர்ந்த நறுமணப் பொருள்களையும் இரத்தினக் கற்களையும் தங்கத்தையும் பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 23 (ECTA)
ஆரான், கன்னே, ஏதேன் நகரினரும், சேபா, அசூர், கில்மாது நாட்டினரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 24 (ECTA)
அவர்கள் சிறந்த போர்வைகள், நீலப்பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், பல வண்ணக் கம்பளங்கள், நேர்த்தியாய்ப் பின்னிய கயிறுகள் ஆகியவற்றை உன் சந்தையில் கொண்டுவந்து பண்டம் மாற்றினர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
எசேக்கியேல் 27 : 25 (ECTA)
தர்சீசு நகர்க் கப்பல்கள் உன் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன; கடல் நடுவே மிகுந்த சரக்கால் சுமத்தப்பட்டுள்ளாய்! [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ; திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 26 (ECTA)
தண்டு வலிப்போர் உன்னை ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்; ஆனால் கீழைக்காற்று கடலின் நடுவே உன்னை உடைத்துவிடும். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ; திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 27 (ECTA)
உன் கப்பல் உடையும் நாளில் உன் செல்வமும் வணிகப் பொருள்களும் உன் கடலோடிகளும் மாலுமிகளும் பழுதுபார்ப்போரும் வணிகரும் உன் போர்வீரர் யாவரும், கப்பலில் இருக்கும் எல்லாரும் ஆழ்கடலில் மூழ்கிப் போவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ; திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 28 (ECTA)
உன் மாலுமிகள் ஓலமிடுகையில், கடற்கரை நாடு அதிரும். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ; திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 29 (ECTA)
தண்டு வலிப்போர் அனைவரும் கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்; கடலோடிகளும் எல்லா மாலுமிகளும் கடற்கரையில் வந்து நிற்பர். [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 30 (ECTA)
உரத்த குரலெழுப்பி, உன்னைக் குறித்துக் கசந்தழுவர்; புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர்; சாம்பலில் புரண்டழுவர். [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 31 (ECTA)
உன் பொருட்டுத் தங்கள் தலைகளை மழித்துக்கொள்வர்; சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்; உனக்காக உளம் நொறுங்கி அழுவர்; மனங்கசந்து புலம்புவர். [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 32 (ECTA)
உனக்காக அழுது புலம்புகையில், உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடுவர்; ‘கடல்களால் மூழ்கடிக்கப்பட்ட தீருக்கு நிகரான நகரேது?’ எனப் பாடுவர். [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 33 (ECTA)
உன் வணிகப் பொருள்கள் கடல் கடந்து செல்கையில், பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்; உன் பெரும் செல்வத்தாலும் வணிகப் பொருள்களாலும் மண்ணுலகின் மன்னர்களைச் செல்வர் ஆக்கினாய். [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 34 (ECTA)
இப்போது நீயோ கடலால் நொறுங்கிவிட்டாய்; கடலின் ஆழத்தில் அமிழ்ந்து விட்டாய்; உன் பொருள்களும் உன் நடுவில் இருந்த மாலுமிகளும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 35 (ECTA)
கடற்கரையில் வாழும் அனைவரும் உன்னைக் குறித்துத் திகைத்து நிற்கின்றனர்; அவர்களின் மன்னர்கள் பேரச்சம் கொள்கின்றனர்; அவர்களின் முகமோ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது. [* திவெ 18:11-19.. ]
எசேக்கியேல் 27 : 36 (ECTA)
மக்களினங்களின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கின்றனர்; நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்! இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்! [* திவெ 18:11-19.. ]
❮
❯