எசேக்கியேல் 24 : 1 (ECTA)
அருவருப்பான சமையல் சட்டி ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
எசேக்கியேல் 24 : 2 (ECTA)
“மானிடா! இந்த நாளை — பாபிலோன் மன்னன் எருசலேமை முற்றுகையிட்ட இந்த நாளை — குறித்து வை. * 2 அர 25:1; எரே 52:4..
எசேக்கியேல் 24 : 3 (ECTA)
கலக வீட்டாருக்கு உவமை ஒன்றின் வழியாக எடுத்துக்கூறு; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; கொப்பரை ஒன்றை எடுத்து வை; தண்ணீரை அதில் ஊற்று.
எசேக்கியேல் 24 : 4 (ECTA)
உள்ளே இறைச்சித் துண்டுகளைப் போடு; தொடை, தோள்பகுதி ஆகிய நல்ல பாகங்களைப் போடு; பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.
எசேக்கியேல் 24 : 5 (ECTA)
மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா; விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு; இறைச்சித் துண்டுகளை வேகவை; எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.
எசேக்கியேல் 24 : 6 (ECTA)
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதியைச் சிந்தும் நகருக்கு ஐயோ கேடு! துருப்பிடித்த கொப்பரை இது; இதன் துரு நீங்கவே இல்லை; ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு; தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.
எசேக்கியேல் 24 : 7 (ECTA)
ஏனெனில், அவள் சிந்திய குருதி அவள் நடுவில் உள்ளது; வெறுமையான பாறையில் அதை ஊற்றினாள்; புழுதியில் மறையும்படித் தரையில் அதை ஊற்றவில்லை.
எசேக்கியேல் 24 : 8 (ECTA)
சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே புழுதியில் அதை மறைக்காது வெறுமையான பாறையில் ஊற்றச் செய்தேன்.
எசேக்கியேல் 24 : 9 (ECTA)
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு! விறகுகளை நானும் உயரமாய் அடுக்குவேன்.
எசேக்கியேல் 24 : 10 (ECTA)
எனவே விறகுக் கட்டைகளை மிகுதியாக அடுக்கு; நெருப்பு மூட்டி இறைச்சியை நன்கு வேகவை; நறுமணப் பொருள்களையும் கலந்துவிடு; எலும்புகளும் கரியட்டும்.
எசேக்கியேல் 24 : 11 (ECTA)
பின்னர், வெறுமையான கொப்பரையை நெருப்புக் கட்டைகள் மேல் வை; களிம்பு காய்ந்து உருகும்வரை அது சூடேறட்டும்; அதன் அழுக்கு கரைந்து போகட்டும்; அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
எசேக்கியேல் 24 : 12 (ECTA)
அனைத்து முயற்சிகளையும் அது வீணடித்துவிட்டது. அதன் திண்மையான துரு நெருப்பினாலும் அகலவேயில்லை.
எசேக்கியேல் 24 : 13 (ECTA)
உன்னுடைய துரு காம வெறியாகும். ஏனெனில், நான் உன்னைத் தூய்மைத் படுத்த விழைந்தேன். ஆனால் நீ உன் அழுக்கினின்று தூய்மையாகவில்லை. உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ தூய்மையாகப் போவதில்லை.
எசேக்கியேல் 24 : 14 (ECTA)
ஆண்டவராகிய நானே உரைத்தேன்; நான் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பின்வாங்க மாட்டேன். இரக்கம் காட்ட மாட்டேன்; மனம் மாறமாட்டேன். உன் நடத்தைக்கு ஏற்பவும் நீ தீர்ப்பிடப்படுவாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 24 : 15 (ECTA)
இறைவாக்கினர் மனையாளின் இறப்பு ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 24 : 16 (ECTA)
“மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப்போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது.
எசேக்கியேல் 24 : 17 (ECTA)
மெதுவாய்ப் பெருமூச்சுவிடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணாதே!”
எசேக்கியேல் 24 : 18 (ECTA)
நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.
எசேக்கியேல் 24 : 19 (ECTA)
அப்போது மக்கள் என்னிடம், “நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?” என்று கேட்டனர்.
எசேக்கியேல் 24 : 20 (ECTA)
எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: “ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
எசேக்கியேல் 24 : 21 (ECTA)
இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச்சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர்.
எசேக்கியேல் 24 : 22 (ECTA)
நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.
எசேக்கியேல் 24 : 23 (ECTA)
தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள்.
எசேக்கியேல் 24 : 24 (ECTA)
இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.
எசேக்கியேல் 24 : 25 (ECTA)
“மானிடா! நான் அவர்களிடமிருந்து அவர்களுடைய வலிமை, மகிழ்ச்சி, மாட்சி, கண்களின் இன்பம், இதயத்தின் விருப்பம் ஆகியவற்றையும் அவர்களுடைய ஆண்மக்கள் பெண்மக்கள் யாவரையும் என்று எடுத்துக்கொள்கிறேனோ,
எசேக்கியேல் 24 : 26 (ECTA)
அன்று அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் ஓடிவந்து இச்செய்தியை உனக்குச் சொல்வான்.
எசேக்கியேல் 24 : 27 (ECTA)
அப்போது உன் வாய் திறக்கப்படும். தப்பி வந்தவனிடம் நீ பேசுவாய். மௌனமாய் இருக்கமாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பாய். நானே கடவுள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27