எசேக்கியேல் 19 : 1 (ECTA)
ஓர் இரங்கற்பா “நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,
எசேக்கியேல் 19 : 2 (ECTA)
சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.
எசேக்கியேல் 19 : 3 (ECTA)
அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
எசேக்கியேல் 19 : 4 (ECTA)
வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்; அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
எசேக்கியேல் 19 : 5 (ECTA)
தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்; எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.
எசேக்கியேல் 19 : 6 (ECTA)
அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
எசேக்கியேல் 19 : 7 (ECTA)
அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று; அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.
எசேக்கியேல் 19 : 8 (ECTA)
அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்; தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது.
எசேக்கியேல் 19 : 9 (ECTA)
அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.
எசேக்கியேல் 19 : 10 (ECTA)
திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்; மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.
எசேக்கியேல் 19 : 11 (ECTA)
அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.
எசேக்கியேல் 19 : 12 (ECTA)
ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது; அதன் கனி உதிர்ந்து போயிற்று; தண்டு உலர்ந்து தீக்கிரையாயிற்று. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13..
எசேக்கியேல் 19 : 13 (ECTA)
இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13..
எசேக்கியேல் 19 : 14 (ECTA)
அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்; இதனை இரங்கற்பாவவெனக் கொள்க. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14