எசேக்கியேல் 10 : 1 (ECTA)
ஆண்டவரின் மாட்சி கோவிலை விட்டு விலகல் நான் உற்று நோக்கினேன்: இதோ! கெருபுகளுக்குமேல் அவற்றின் தலைக்கு மேலிருந்த விதானத்தில் நீலமணி இழைத்த அரியணை உருவத்தின் சாயலைப் போன்றதொன்று தெரிந்தது. [* எசே 1:26; திவெ 4: 2 ]
எசேக்கியேல் 10 : 2 (ECTA)
அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரிடம், “கெருபுகளுக்குக் கீழ் இடுக்கு சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபுகளின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கை நிறைய வாரி, நகரின் மீது வீசு” என்றார். என் கண்ணெதிரே அவரும் சென்றார். [* திவெ 8: 5 ]
எசேக்கியேல் 10 : 3 (ECTA)
அந்த மனிதர் உள்ளே சென்றபோது கோவிலின் வலப்புறத்தில் கெருபுகள் நின்றுகொண்டிருந்தன; மேகம் உள்முற்றத்தில் பரவியிருந்தது.
எசேக்கியேல் 10 : 4 (ECTA)
ஆண்டவரது மாட்சி கெருபுகளிடமிருந்து புறப்பட்டு, கோவிலின் வாயிற்படிக்கு வந்தது. மேகம் கோவிலில் பரவியிருந்தது. முற்றம் முழுவதும் ஆண்டவரது மாட்சியின் பேரொளி நிறைந்து இலங்கிற்று.
எசேக்கியேல் 10 : 5 (ECTA)
கெருபுகளின் இறக்கைகள் எழுப்பிய ஒலி வெளி முற்றம் வரை கேட்டது. அது எல்லாம் வல்லவரின் குரலொலிபோன்று இருந்தது.
எசேக்கியேல் 10 : 6 (ECTA)
அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரை நோக்கி, “சக்கரங்களின் இடையே கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடு” என்று கட்டளையிட அவரும் சென்று சக்கரத்தின் அருகில் நின்றார்.
எசேக்கியேல் 10 : 7 (ECTA)
அப்பொழுது, கெருபுகளுள் ஒன்று தன் கையை நீட்டிக் கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடுத்து நார்ப்பட்டு உடுத்தியவரின் உள்ளங்கையில் வைத்தது. அவரும் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
எசேக்கியேல் 10 : 8 (ECTA)
கெருபுகளின் இறக்கைகளின் கீழ் மனிதக் கையின் சாயல் காணப்பட்டது.
எசேக்கியேல் 10 : 9 (ECTA)
இதோ! கெருபுகளின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின. [* எசே 1:15- 21 ]
எசேக்கியேல் 10 : 10 (ECTA)
அவை நான்கும் ஒரே விதத் தோற்றம் கொண்டிருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின. [* எசே 1:15- 21 ]
எசேக்கியேல் 10 : 11 (ECTA)
அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை. முன் சக்கரம் நோக்கும் திசையில் மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் சென்றன. [* எசே 1:15- 21 ]
எசேக்கியேல் 10 : 12 (ECTA)
கெருபுகளின் உடல் முழுவதும் — முதுகு, கைகள், இறக்கைகள், சக்கரங்கள், அதாவது நான்கு சக்கரங்கள் — கண்களால் நிறைந்திருந்தன. [* எசே 1:15- 21 ; திவெ 4: 8. ]
எசேக்கியேல் 10 : 13 (ECTA)
‘சுழல் சக்கரங்கள்’என்று அவை அழைக்கப்பட்டதை நான் கேட்டேன். [* எசே 1:15- 21 ]
எசேக்கியேல் 10 : 14 (ECTA)
ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன; முதலாவது எருது முகம்; இரண்டாவது மனித முகம்; மூன்றாவது சிங்க முகம்; நான்காவது கழுகு முகம். [* எசே 1:10; திவெ 4: 7 ; ‘கெருபு’ என்பது எபிரேய பாடம்.. ]
எசேக்கியேல் 10 : 15 (ECTA)
அப்பொழுது கெருபுகள் மேலெழுந்தன. கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.
எசேக்கியேல் 10 : 16 (ECTA)
கெருபுகள் சென்றபோது சக்கரங்களும் அவற்றோடு சென்றன. கெருபுகள் நிலத்திலிருந்து மேலெழும்பத் தங்கள் இறக்கைகளை விரித்தபோது சக்கரங்கள் திரும்பாமல் அவற்றுடன் இருந்தன.
எசேக்கியேல் 10 : 17 (ECTA)
அவை நின்றபோது இவையும் நின்றன. அவை எழுந்தபோது இவையும் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
எசேக்கியேல் 10 : 18 (ECTA)
ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக் கெருபுகளின்மேல் வந்து நின்றது.
எசேக்கியேல் 10 : 19 (ECTA)
என் கண்ணெதிரே, கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து நிலத்தினின்று மேலெழந்தன. அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன. ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது.
எசேக்கியேல் 10 : 20 (ECTA)
கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.
எசேக்கியேல் 10 : 21 (ECTA)
அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவற்றின் இறக்கைகளின் கீழ் மனிதக் கைகளின் சாயல் இருந்தது.
எசேக்கியேல் 10 : 22 (ECTA)
அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர் முகமாய்ச் சென்றன.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22