யாத்திராகமம் 6 : 1 (ECTA)
[PS] ஆண்டவர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்; என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்; தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்” என்றார்.[PE]
யாத்திராகமம் 6 : 2 (ECTA)
{மோசேயின் அழைப்பு} [PS] கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
யாத்திராகமம் 6 : 3 (ECTA)
“நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ‘ஆண்டவர்’ என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே! [* தொநூ 17:1; 28:3; 35:11; விப 3:13-15 ]
யாத்திராகமம் 6 : 4 (ECTA)
மேலும், அவர்கள் அந்நியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே! [* தொநூ 17:1; 28:3; 35:11; விப 3:13-15 ]
யாத்திராகமம் 6 : 5 (ECTA)
மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.
யாத்திராகமம் 6 : 6 (ECTA)
நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது; நானே ஆண்டவர். எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.
யாத்திராகமம் 6 : 7 (ECTA)
உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
யாத்திராகமம் 6 : 8 (ECTA)
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன். அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். நானே ஆண்டவர்!”
யாத்திராகமம் 6 : 9 (ECTA)
இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.[PE]
யாத்திராகமம் 6 : 10 (ECTA)
[PS] ஆண்டவர் மோசேயை நோக்கி,
யாத்திராகமம் 6 : 11 (ECTA)
“எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்” என்றுரைத்தார்.
யாத்திராகமம் 6 : 12 (ECTA)
மோசே ஆண்டவரிடம் பேசி, “இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்” என்று சொன்னார்.
யாத்திராகமம் 6 : 13 (ECTA)
ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.[PE]
யாத்திராகமம் 6 : 14 (ECTA)
{மோசே, ஆரோனின் மூதாதையர் அட்டவணை} [PS] அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே; இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்; அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி. இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.
யாத்திராகமம் 6 : 15 (ECTA)
சிமியோனின் புதல்வர்; எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
யாத்திராகமம் 6 : 16 (ECTA)
தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்; கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
யாத்திராகமம் 6 : 17 (ECTA)
கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள். [* எண் 3:17-20; 26:57-58; 1 குறி . ]
யாத்திராகமம் 6 : 18 (ECTA)
கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள். [* எண் 3:17-20; 26:57-58; 1 குறி . ]
யாத்திராகமம் 6 : 19 (ECTA)
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள். [* எண் 3:17-20; 26:57-58; 1 குறி . ]
யாத்திராகமம் 6 : 20 (ECTA)
அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள். [* எண் 3:17-20; 26:57-58; 1 குறி . ]
யாத்திராகமம் 6 : 21 (ECTA)
இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.
யாத்திராகமம் 6 : 22 (ECTA)
உசியேலின் புதல்வர்; மீசாவேல், எல்சாபான், சித்ரி.
யாத்திராகமம் 6 : 23 (ECTA)
அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
யாத்திராகமம் 6 : 24 (ECTA)
கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு. இவைகளே கோராகின் குடும்பங்கள்.
யாத்திராகமம் 6 : 25 (ECTA)
ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.[PE]
யாத்திராகமம் 6 : 26 (ECTA)
[PS] “தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள்” என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
யாத்திராகமம் 6 : 27 (ECTA)
இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே![PE]
யாத்திராகமம் 6 : 28 (ECTA)
{மோசே, ஆரோனுக்கு ஆண்டவரின் கட்டளை} [PS] அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.
யாத்திராகமம் 6 : 29 (ECTA)
ஆண்டவர் மோசேயுடன் பேசி, “நானே ஆண்டவர். நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு” என்று அறிவித்தபோது,
யாத்திராகமம் 6 : 30 (ECTA)
மோசே ஆண்டவரிடம், “பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?” என்றார்.[PE]
❮
❯