யாத்திராகமம் 40 : 1 (ECTA)
கூடாரத்தை எழுப்புதலும் அர்ப்பணமும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
யாத்திராகமம் 40 : 2 (ECTA)
“முதல் மாதத்தில், முதல் நாள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய்.
யாத்திராகமம் 40 : 3 (ECTA)
அங்கே உடன்படிக்கைப்பேழையை வைத்து அதனைத் திருத்தூயகத் திரையால் மறைத்துவிடு.
யாத்திராகமம் 40 : 4 (ECTA)
பின்னர், மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும், விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.
யாத்திராகமம் 40 : 5 (ECTA)
உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை. திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
யாத்திராகமம் 40 : 6 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலுக்கு முன்புறம் எரிபலி பீடத்தை வை.
யாத்திராகமம் 40 : 7 (ECTA)
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.
யாத்திராகமம் 40 : 8 (ECTA)
சுற்றிலும் முற்றம் அமைத்து, முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
யாத்திராகமம் 40 : 9 (ECTA)
திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்திற்கும் அதிலுள்ள அனைத்திற்கும் திருப்பொழிவு செய். அதனை அதன் அனைத்துத் துணைக்கலன்களோடுஅர்ப்பணிப்பாய். இவ்வாறு அது புனிதம் பெறும்.
யாத்திராகமம் 40 : 10 (ECTA)
எரிபலி பீடத்திற்கும் அதன் அனைத்துத் துணைக்கலன்களுக்கும் திருப்பொழிவு செய்து, அப்பீடத்தை அர்ப்பணிப்பாய். இவ்வாறு, பலிபீடம் மிகப் புனிதமானதாக விளங்கும்.
யாத்திராகமம் 40 : 11 (ECTA)
தண்ணீர்த் தொட்டிக்கும், அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து, அர்ப்பணிப்பாய்.
யாத்திராகமம் 40 : 12 (ECTA)
சந்திப்புக் கூடார நுழைவாயிலின் அருகில் ஆரோனையும் அவன் புதல்வரையும் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.
யாத்திராகமம் 40 : 13 (ECTA)
ஆரோன் எனக்கு குருத்துவப் பணியாற்றும்படி அவனுக்குத் திருவுடைகள் அணிவித்து, அவனுக்கு அருள்பொழிவு செய்து, அவனைத் திருநிலைப்படுத்து.
யாத்திராகமம் 40 : 14 (ECTA)
அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களுக்கும் உடைகள் உடுத்துவிப்பாய்.
யாத்திராகமம் 40 : 15 (ECTA)
அவர்களின் தந்தைக்கு அருள்பொழிவு செய்தது போலவே, எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி அவர்களுக்கும் அருள்பொழிவு செய். அவர்களின் அருள்பொழிவு தலைமுறைதோறும் நிலைநிற்கும் குருத்துவமாக விளங்கும்.”
யாத்திராகமம் 40 : 16 (ECTA)
மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.
யாத்திராகமம் 40 : 17 (ECTA)
இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது.
யாத்திராகமம் 40 : 18 (ECTA)
மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார். குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார்.
யாத்திராகமம் 40 : 19 (ECTA)
திரு உறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 40 : 20 (ECTA)
உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.
யாத்திராகமம் 40 : 21 (ECTA)
திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
யாத்திராகமம் 40 : 22 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் வடபுறம், திருத்தூயகத் திரைக்கு வெளியே அவர் மேசையை வைத்தார்.
யாத்திராகமம் 40 : 23 (ECTA)
அதன் மேல் ஆண்டவர்முன் திருமுன்னிலை அப்பத்தை அவர் முறைப்படி வைத்தார்; இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 40 : 24 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் தென்புறம், மேசைக்கு எதிரே, விளக்குத் தண்டை நிறுத்தினார்.
யாத்திராகமம் 40 : 25 (ECTA)
ஆண்டவர் திருமுன் அகல்களை ஏற்றினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 40 : 26 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில் திருத்தூயகத் திரைக்கும் முன்னே பொன்பீடத்தை வைத்தார்.
யாத்திராகமம் 40 : 27 (ECTA)
அதில் நறுமணத் தூபம் எரித்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 40 : 28 (ECTA)
திருஉறைவிடத்தின் நுழைவாயிலில் திரை தொங்கவிடப்பட்டது.
யாத்திராகமம் 40 : 29 (ECTA)
அவர் சந்திப்புக் கூடாரத்தின் திரு உறைவிட நுழைவாயிலின் முன் எரிபலிபீடத்தை வைத்தார். அதன்மேல் அவர் எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டப்படியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 40 : 30 (ECTA)
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. கழுவுவதற்காகத் தண்ணீர் அதில் ஊற்றி வைக்கப்பட்டது.
யாத்திராகமம் 40 : 31 (ECTA)
இது மோசேயும், ஆரோனும், அவர் புதல்வரும் கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்வதற்கே.
யாத்திராகமம் 40 : 32 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போதும், பலிபீடத்தை அணுகும்போதும் அவர்கள் கழுவிக் கொள்வர். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 40 : 33 (ECTA)
திருஉறைவிடம், பலிபீடம் இவற்றைச் சுற்றி எங்கும் அவர் முற்றம் அமைத்தார். முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிட்டார். இவ்வாறு, மோசே தம் பணியை முடித்துக்கொண்டார்.
யாத்திராகமம் 40 : 34 (ECTA)
கூடாரத்தின்மேல் ஆண்டவரின் மாட்சி
(எண் 9:15-23)
பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. * 1 அர 8:10-11; எசா 6:4; எசே 43:4-5; திவெ 15:8..
யாத்திராகமம் 40 : 35 (ECTA)
சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
யாத்திராகமம் 40 : 36 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள்.
யாத்திராகமம் 40 : 37 (ECTA)
மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
யாத்திராகமம் 40 : 38 (ECTA)
ஏனெனில், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38