யாத்திராகமம் 38 : 1 (ECTA)
எரிபலிபீடம் செய்தல்
(விப 27:1-8)
சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார். அது நீளம் ஐந்து முழமும் அகலம் ஐந்து முழமுமாகச் சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ மூன்று முழம்.
யாத்திராகமம் 38 : 2 (ECTA)
அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்; கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன; அதை வெண்கலத்தால் மூடினார்.
யாத்திராகமம் 38 : 3 (ECTA)
அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்; சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.
யாத்திராகமம் 38 : 4 (ECTA)
பலிபீடத்தைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து அதன் பாதிப்பகுதியை எட்டும்படி அதன் விளிம்புகளுக்குக்கீழே அவர் பொருத்தினார்.
யாத்திராகமம் 38 : 5 (ECTA)
தண்டுகளைத் தாங்குவதற்காக நான்கு வளையங்களை வார்த்து அதன் வெண்கல வலைப்பின்னலின் நான்கு மூலைகளிலும் அவர் பொருத்தினார்.
யாத்திராகமம் 38 : 6 (ECTA)
அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து வெண்கலத்தால் மூடினார்.
யாத்திராகமம் 38 : 7 (ECTA)
பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் தண்டுகளை வளையங்களில் அவர் செலுத்தினார். பலகைகளைச் சேர்த்து உள்கூடாக அமைத்தார்.
யாத்திராகமம் 38 : 8 (ECTA)
வெண்கல நீர்த்தொட்டி செய்தல்
(விப 30:18)
சந்திப்புக் கூடார நுழைவாயிலில் பணியாற்றும் பெண்கள் கொண்டு வந்த வெண்கலக் கண்ணாடிகளைக் கொண்டு அவர் வெண்கல நீர்த்தொட்டியையும், அதன் வெண்கல ஆதாரத்தையும் செய்தார்.
யாத்திராகமம் 38 : 9 (ECTA)
கூடார முற்றம் செய்தல்
(விப 27:9-19)
அவர் முற்றத்தை உருவாக்கினார்; தெற்குப்பக்கம், தென்திசை நோக்கிய முற்றத்திலுள்ள தொங்குதிரைகள் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டால் ஆனவை; நூறு முழம் நீண்டவை.
யாத்திராகமம் 38 : 10 (ECTA)
அவற்றிற்கான இருபது தூண்களும் இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
யாத்திராகமம் 38 : 11 (ECTA)
அவ்வாறே வட பக்கத்திலும் தொங்குதிரைகள் நூறு முழம் நீண்டவை. அதற்கான இருபது தூண்களும், இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
யாத்திராகமம் 38 : 12 (ECTA)
மேற்குப் பக்கத்தில் ஐம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன. அவற்றிற்காகப் பத்துத் தூண்கள் பத்துப் பாதப்பொருத்துகள் இருந்தன. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
யாத்திராகமம் 38 : 13 (ECTA)
கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கி ஐம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன.
யாத்திராகமம் 38 : 14 (ECTA)
அதன் ஒரு பகுதியில் பதினைந்து முழத் தொங்குதிரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
யாத்திராகமம் 38 : 15 (ECTA)
இதுபோன்றே, முற்றத்தின் நுழைவாயிலுக்கு மறுபகுதியிலும் பதினைந்து முழத் தொங்குதிரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
யாத்திராகமம் 38 : 16 (ECTA)
முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தொங்குதிரைகளும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் ஆனவை.
யாத்திராகமம் 38 : 17 (ECTA)
தூண்களின் பாதப் பொருத்துக்கள் வெண்கலத்தால் ஆனவை. தூண்களின் கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை. அவற்றின் பொதிகைகள் வெள்ளியால் பொதியப்பட்டவை. முற்றத்தின் தூண்கள் அனைத்துமே வெள்ளிப் பூண்கள் கொண்டிருந்தன.
யாத்திராகமம் 38 : 18 (ECTA)
முற்றத்து நுழைவாயிலின் தொங்குதிரை நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நூலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டும், பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது. அதன் நீளம் இருபது முழம்; அதன் அகலமும் உயரமும் முற்றத்தின் தொங்கு திரைகளுக்கு இணையாக ஐந்து முழமாம்.
யாத்திராகமம் 38 : 19 (ECTA)
அதற்காக நான்கு தூண்களுக்கும் நான்கு வெண்கல பாதப்பொருத்துகள் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பொதிகைகளும், பூண்களும் வெள்ளியால் மூடப்பட்டிருந்தன.
யாத்திராகமம் 38 : 20 (ECTA)
திருஉறைவிடத்திலும் சுற்று முற்றத்திலுள்ள முளைகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.
யாத்திராகமம் 38 : 21 (ECTA)
கூடாரத்திற்குப் பயன்பட்ட பொருள்கள் திருஉறைவிடத்தின் அதாவது உடன்படிக்கைத் திருஉறைவிடத்தின் இருப்புக் கணக்கில் இருந்தவை இவையே; மோசேயின் கட்டளைப்படி குரு ஆரோனின் மகன் இத்தாமரின் பொறுப்பில், லேவியர் எடுத்த கணக்கு பின்வருமாறு;
யாத்திராகமம் 38 : 22 (ECTA)
யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகன் ஊரியின் புதல்வரான பெட்சலேல் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டது அனைத்தையும் செய்தார்.
யாத்திராகமம் 38 : 23 (ECTA)
அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.
யாத்திராகமம் 38 : 24 (ECTA)
தூயகத்தின் அனைத்துப் பணிக்கும் பயன்பட்ட தங்கமெல்லாம் ஆரத்திக் காணிக்கைவழி வந்தது. அது தூயகச் செக்கேல் நிறைப்படி ஆயிரத்து நூற்றெழுபது கிலோ கிராம்* ஆகும். * ‘இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது செக்கேலும்’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 38 : 25 (ECTA)
மக்கள் கூட்டமைப்பில் எண்ணப்பட்டவர்களிடமிருந்து வந்த வெள்ளி தூயகச் செக்கேல் நிறைப்படி நாலாயிரத்து இருபது கிலோ கிராம்* ஆகும். [* விப 30:11- 16 ; ‘நூறு தாலந்தும் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேலும்’ என்பது எபிரேய பாடம். ]
யாத்திராகமம் 38 : 26 (ECTA)
இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம்* அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல். இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தனர். [* விப 30:11- 16 ; மத் 17: 24. ; ‘பெக்கா’ என்பது எபிரேய பாடம். ]
யாத்திராகமம் 38 : 27 (ECTA)
தூயகத்திலுள்ள பாதப் பொருத்துகளையும், திருத்தூயகத்திரைக்கான பாதப்பொருத்துகளையும் வார்க்க, நாலாயிரம் கிலோ கிராம்* வெள்ளியாயிற்று. ஒரு பாதப்பொருத்துக்கு நாற்பது கிலோ கிராமாக நூறு பாதப்பொருத்துகளுக்கு நாலாயிரம் கிலோ கிராம் ஆயிற்று. * ‘நூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 38 : 28 (ECTA)
அதிலிருந்து இருபது கிலோ கிராம்*எடுத்து, அவர் தூண்களுக்கான கொக்கிகள் செய்தார்; பொதிகைகளைப் பொதிந்தார்; அவற்றிற்குப் பூண்கள் அமைத்தார். * ‘ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 38 : 29 (ECTA)
ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஐந்து கிலோ கிராம்* ஆகும். * ‘எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு செக்கேலும்’ என்பது எபிரேய பாடம்..
யாத்திராகமம் 38 : 30 (ECTA)
அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதன் வெண்கல வலைப்பின்னலையும், பலிபீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.
யாத்திராகமம் 38 : 31 (ECTA)
மேலும், முற்றத்தைச் சுற்றியுள்ள பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலிலுள்ள பாதப்பொருத்துகள், திருஉறைவிடத்தின் முளைகள், முற்றத்தைச் சுற்றியுள்ள முளைகள் ஆகிய அனைத்தையும் செய்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31