யாத்திராகமம் 37 : 1 (ECTA)
உடன்படிக்கைப் பேழை செய்தல்
(விப 25:10-22) பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.
யாத்திராகமம் 37 : 2 (ECTA)
அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்; அதைச்சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார். * விப 20:8-11; 23:12; 31:15; 34:21; லேவி 23:3; இச 5:12-14..
யாத்திராகமம் 37 : 3 (ECTA)
அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும், இரு வளையங்களை மறு பக்கத்திற்குமாக, அதன் நான்கு கால்களுக்காகவும் நான்கு பொன் வளையங்களை வார்த்தார்.
யாத்திராகமம் 37 : 4 (ECTA)
அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
யாத்திராகமம் 37 : 5 (ECTA)
அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி, தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் செருகிவிட்டார்.
யாத்திராகமம் 37 : 6 (ECTA)
அவர் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கையைச் செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
யாத்திராகமம் 37 : 7 (ECTA)
அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.
யாத்திராகமம் 37 : 8 (ECTA)
ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக, அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.
யாத்திராகமம் 37 : 9 (ECTA)
கெருபுகள் தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன. கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.
யாத்திராகமம் 37 : 10 (ECTA)
அப்ப மேசை செய்தல்
(விப 25:23-30) அவர் சித்திம் மரத்தால் மேசையொன்று செய்தார். அதன் நீளம் இரண்டு முழம்; அகலம் ஒரு முழம்; உயரம் ஒன்றரை முழம்.
யாத்திராகமம் 37 : 11 (ECTA)
அவர் அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைத்தார்.
யாத்திராகமம் 37 : 12 (ECTA)
அவர் கையகல அளவில் அதற்குச் சுற்றுச் சட்டம் அமைத்து அச்சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைத்தார்.
யாத்திராகமம் 37 : 13 (ECTA)
அவர் அதற்கு நான்கு பொன்வளையங்கள் செய்து அவ்வளையங்களை நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் பொருத்தினார்.
யாத்திராகமம் 37 : 14 (ECTA)
மேசையைத் தூக்கிச்செல்லும் தண்டுகள் தாங்கும் இவ்வளையங்கள் சட்டத்தின் அருகில் இருந்தன.
யாத்திராகமம் 37 : 15 (ECTA)
மேசையைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
யாத்திராகமம் 37 : 16 (ECTA)
மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள் ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.
யாத்திராகமம் 37 : 17 (ECTA)
விளக்குத் தண்டு செய்தல்
(விப 25:31-40) பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார். அதை அடிப்பு வேலையாகச் செய்தார். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.
யாத்திராகமம் 37 : 18 (ECTA)
விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.
யாத்திராகமம் 37 : 19 (ECTA)
ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.
யாத்திராகமம் 37 : 20 (ECTA)
விளக்குத் தண்டுக்கு நேர் மேலே, வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.
யாத்திராகமம் 37 : 21 (ECTA)
முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இருகிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று அதிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.
யாத்திராகமம் 37 : 22 (ECTA)
அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தனவாயும், பசும்பொன் அடிப்பு வேலையுடன் செய்யப்பட்டனவாயும் இருந்தன.
யாத்திராகமம் 37 : 23 (ECTA)
அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.
யாத்திராகமம் 37 : 24 (ECTA)
அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.
யாத்திராகமம் 37 : 25 (ECTA)
தூபபீடம் செய்தல்
(விப 30: 1-5) அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார். அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ இரண்டு முழம். அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.
யாத்திராகமம் 37 : 26 (ECTA)
அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.
யாத்திராகமம் 37 : 27 (ECTA)
அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.
யாத்திராகமம் 37 : 28 (ECTA)
சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
யாத்திராகமம் 37 : 29 (ECTA)
திருப்பொழிவு எண்ணெயும் நறுமணத் தூபமும் தயாரித்தல்
(விப 30:22-38) அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும் திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும் கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.
❮
❯