யாத்திராகமம் 36 : 1 (ECTA)
பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்.
யாத்திராகமம் 36 : 2 (ECTA)
மக்களின் தாராள காணிக்கைகள் அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும், ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும் உள்ளார்வம் உடையவருமான கலைஞர் அனைவரையும் வேலையில் ஈடுபடுமாறு அழைத்தார். * விப 20:8-11; 23:12; 31:15; 34:21; லேவி 23:3; இச 5:12-14..
யாத்திராகமம் 36 : 3 (ECTA)
தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.
யாத்திராகமம் 36 : 4 (ECTA)
தூயக வேலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,
யாத்திராகமம் 36 : 5 (ECTA)
மோசேயை நோக்கி, “மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது” என்று அறிவித்தனர்.
யாத்திராகமம் 36 : 6 (ECTA)
அப்போது மோசே, “ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்” என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே, மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.
யாத்திராகமம் 36 : 7 (ECTA)
ஏற்கனவே சேகரித்தது, செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும் தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.
யாத்திராகமம் 36 : 8 (ECTA)
கூடாரம் செய்தல்
(விப 26:1-37)
பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர். அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.
யாத்திராகமம் 36 : 9 (ECTA)
திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.
யாத்திராகமம் 36 : 10 (ECTA)
இவற்றுள் ஐந்து திரைகள் ஒன்றாகவும், ஏனைய ஐந்து திரைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டன.
யாத்திராகமம் 36 : 11 (ECTA)
பின்னர், அவர் முதல் தொகுப்பின் விளிம்பில் நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார். அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.
யாத்திராகமம் 36 : 12 (ECTA)
முதல் திரைத்தொகுப்பில் அவர் அமைத்த வளையங்களை ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் விளிம்பில் அமைத்த வளையங்கள் ஐம்பது. அவ்வளையங்கள் எதிரெதிரே இருந்தன.
யாத்திராகமம் 36 : 13 (ECTA)
பொன்னால் ஐம்பது கொக்கிகள் செய்து, அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை ஒன்றோடொன்று இணைத்தார். இவ்வாறு, ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.
யாத்திராகமம் 36 : 14 (ECTA)
திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார். பதினொரு மூடுதிரைகள் செய்தார்.
யாத்திராகமம் 36 : 15 (ECTA)
ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றேயாம்.
யாத்திராகமம் 36 : 16 (ECTA)
இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்தார்.
யாத்திராகமம் 36 : 17 (ECTA)
முதல் மூடுதிரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைத்தார். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்திலும் அமைத்தார்.
யாத்திராகமம் 36 : 18 (ECTA)
ஒரே கூடாரமாக ஒன்றிணைத்து அமைக்க ஐம்பது வெண்கல கொக்கிகள் செய்தார்.
யாத்திராகமம் 36 : 19 (ECTA)
மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.
யாத்திராகமம் 36 : 20 (ECTA)
திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை அவர் சித்திம் மரத்தால் செய்தார்.
யாத்திராகமம் 36 : 21 (ECTA)
ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
யாத்திராகமம் 36 : 22 (ECTA)
சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.
யாத்திராகமம் 36 : 23 (ECTA)
திருஉறைவிடத்திற்காகச் சட்டங்களை அவர் செய்த முறை; தெற்கே தென்திசை நோக்கி நிற்கச் செய்யப்பட்டவை இருபது சட்டங்கள்.
யாத்திராகமம் 36 : 24 (ECTA)
ஒரு சட்டத்துக்குக் கீழே, இரு கொளுத்துகளுக்கு இருபாதப்பொருத்துகள்; அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள். இவ்வாறு இருபது சட்டங்களுக்கும்கீழே அவர் நாற்பது வெள்ளிப் பாதப்பொருத்துகளை அமைத்தார்.
யாத்திராகமம் 36 : 25 (ECTA)
திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.
யாத்திராகமம் 36 : 26 (ECTA)
ஒரு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருள்கள், மறு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள் என்று நாற்பது வெள்ளி பாதப்பொருத்துகள் செய்யப்பட்டன.
யாத்திராகமம் 36 : 27 (ECTA)
திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக ஆறு சட்டங்கள் செய்தார்.
யாத்திராகமம் 36 : 28 (ECTA)
அத்துடன் திருஉறைவிடத்தின் பின்புற மூலைகளுக்காக இரண்டு சட்டங்களைச் செய்தார்.
யாத்திராகமம் 36 : 29 (ECTA)
அவற்றுள் ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்பட்டன. இவ்வாறே, இரண்டு மூலைகளும் அமைக்கப்பட்டன.
யாத்திராகமம் 36 : 30 (ECTA)
ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும் இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும் அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.
யாத்திராகமம் 36 : 31 (ECTA)
சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்களையும் செய்தார்; திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்களின் மேலே பொருத்த ஐந்து;
யாத்திராகமம் 36 : 32 (ECTA)
திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து; மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து.
யாத்திராகமம் 36 : 33 (ECTA)
நடுவிலுள்ள குறுக்குச்சட்டம் சட்டங்களுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.
யாத்திராகமம் 36 : 34 (ECTA)
அவர் சட்டங்களைப் பொன்னால் பொதிந்தார். அதிலுள்ள குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்கான வளையங்களையும் பொன்னால் செய்தார். குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிந்தார்.
யாத்திராகமம் 36 : 35 (ECTA)
மேலும், அவர் ஒரு தொங்குதிரை செய்தார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும் கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.
யாத்திராகமம் 36 : 36 (ECTA)
அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார். அவற்றைப் பொன்னால் பொதிந்து பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார். அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.
யாத்திராகமம் 36 : 37 (ECTA)
கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்குதிரை செய்தார். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும் பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.
யாத்திராகமம் 36 : 38 (ECTA)
ஐந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார். அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும் பொன்னால் பொதிந்தார். ஐந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38