யாத்திராகமம் 30 : 1 (ECTA)
தூபபீடம்
(விப 37:25-28) நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.
யாத்திராகமம் 30 : 2 (ECTA)
நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்; அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்.
யாத்திராகமம் 30 : 3 (ECTA)
அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து, சுற்றிலும், தங்கத் தோரணம் பொருத்து.
யாத்திராகமம் 30 : 4 (ECTA)
அந்தத் தோரணத்திற்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் பொருத்து. அதைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளுக்கு அவைபிடிப்பாக விளங்கும்.
யாத்திராகமம் 30 : 5 (ECTA)
சித்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து, அவற்றையும் பொன்னால் வேய்ந்திடு.
யாத்திராகமம் 30 : 6 (ECTA)
உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால், திருத்தூயகத் திரையின் முன்னிலையில் தூபபீடத்தை வைப்பாய். உடன்படிக்கைப் பேழை மேலுள்ள இரக்கத்தின் இருக்கையில் நான் உன்னைச் சந்திப்பேன்.
யாத்திராகமம் 30 : 7 (ECTA)
காலைதோறும் ஆரோன் அதன்மேல் நறுமணப்பொருள் எரிப்பானாக! விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போதும் அவன் நறுமணப்பொருள் எரிப்பானாக!
யாத்திராகமம் 30 : 8 (ECTA)
மாலை மங்கும் வேளையில் ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது, உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவர் திருமுன் இடைவிடாமல் நறுமணப்பொருள் எரிப்பானாக!
யாத்திராகமம் 30 : 9 (ECTA)
வேற்று நறுமணப் பொருளையோ, மற்றும் எரிபலியையோ, உணவுப் படையலையோ அதன்மேல் படைத்தலாகாது. அதன் மேல் நீர்மப் படையலையும் ஊற்றக்கூடாது.
யாத்திராகமம் 30 : 10 (ECTA)
ஆண்டுக்கு ஒருமுறை ஆரோன் அதன் கொம்புகள் மேல் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். ஆண்டுக்கு ஒருமுறை பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பாவக்கழுவாயை உங்கள் தலைமுறைதோறும் நிறைவேற்றுவான். ஏனெனில், அது ஆண்டவருக்குப் புனிதமிக்கதாகும்.
யாத்திராகமம் 30 : 11 (ECTA)
தலைக்கட்டு வரி ஆண்டவர் மோசேயை நோக்கி,
யாத்திராகமம் 30 : 12 (ECTA)
“நீ இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்காகக் குடிக்கணக்கு எடுக்கும் போது, எண்ணிக்கைக்குட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்டவேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடையே கொள்ளை நோய் வந்துவிடும்.
யாத்திராகமம் 30 : 13 (ECTA)
எண்ணிக்கைக்குட்படும் யாவரும் திருத்தலச் செக்கேலில் அரைச் செக்கேல் வீதம் கட்டவேண்டும். (ஒரு செக்கேல் என்பது இருபது கேரா என்க). அந்த அரைச் செக்கேல் ஆண்டவருக்குரிய காணிக்கையாகும். [* விப 38:25-26; மத் 17: 24 ; * ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம். ; ** ஒரு கேரா என்பது அறுநூறு மில்லி கிராம்.. ]
யாத்திராகமம் 30 : 14 (ECTA)
எண்ணிக்கைக்கு உட்படும் அனைவரும் — அதாவது இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் யாவரும் — ‘ஆண்டவருக்குரிய காணிக்கை’ அளிப்பார்கள்.
யாத்திராகமம் 30 : 15 (ECTA)
உங்கள் உயிர்களுக்குப் பாவக்கழுவாயாக ‘ஆண்டவருக்குரிய காணிக்கை’ செலுத்தும்போது பணக்காரன் அரைச் செக்கேலுக்கு அதிகமாகவோ, ஏழை அதற்குக் குறைவாகவோ கொடுக்கவேண்டாம்.
யாத்திராகமம் 30 : 16 (ECTA)
இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத்திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்” என்றார்.
யாத்திராகமம் 30 : 17 (ECTA)
வெண்கல நீர்த்தொட்டி பின்னும் ஆண்டவர் மோசேயிடம்,
யாத்திராகமம் 30 : 18 (ECTA)
“கழுவுவதற்காக ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல ஆதாரத்தோடு செய். சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் அதனை வைத்து அதில் தண்ணீர் ஊற்றுவாய். [* விப 38: 8 ]
யாத்திராகமம் 30 : 19 (ECTA)
ஆரோனும் அவன் புதல்வரும் இதிலிருந்து தங்கள் கைகளையும் பாதங்களையும் கழுவ வேண்டும்.
யாத்திராகமம் 30 : 20 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போது அல்லது பலிபீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும்போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள். இல்லையெனில் அவர்கள் செத்துமடிவார்கள்.
யாத்திராகமம் 30 : 21 (ECTA)
அவர்கள் சாகாமல் இருக்கும்படி கைகளையும் பாதங்களையும் கழுவிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு அதாவது அவனுக்கும் தலைமுறைதோறும் அவன் வழிமரபினருக்கும் என்றுமுள்ள நியமமாக இருக்கும்” என்றார்.
யாத்திராகமம் 30 : 22 (ECTA)
திருப்பொழிவு எண்ணெய் மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 23 (ECTA)
“ஐந்நூறு திருத்தல செக்கேல் எடைக்கு உயர்தர வெள்ளைப்போளம், அதன் பாதி நிறையாகிய இருநூற்று ஐம்பத்துக்கு மணங்கமழும் கருவாப்பட்டை, இருநூற்று ஐம்பதுக்கு நறுமண வசம்பு. [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 24 (ECTA)
ஐந்நூறுக்கு இலவங்கப்பட்டை ஆகிய தலைசிறந்த நறுமணப் பொருள்களை எடுத்து, ஒரு கலயம் அளவு ஒலிவ எண்ணெயும் சேர்த்து, [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 25 (ECTA)
திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும், [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 26 (ECTA)
இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை, [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 27 (ECTA)
மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம், [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 28 (ECTA)
எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 29 (ECTA)
நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 30 (ECTA)
ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ அருள்பொழிவு செய்து, அவர்களை எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு திருநிலைப்படுத்துவாய். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 31 (ECTA)
மேலும், நீ இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியது; இது என்னுடைய தூய திருப்பொழிவு எண்ணெயாக உங்கள் தலைமுறைதோறும் இருக்க வேண்டும். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 32 (ECTA)
சாதாரணத் தேவைக்காக மனித உடலில் அது பூசப்படல் ஆகாது. இந்தக் கலவை விகிதப்படி இதைப்போன்ற எண்ணெய் தயாரிக்கப்படலாகாது. இது புனிதமானது. உங்களுக்கும் இது புனிதமானதாக இருக்கட்டும். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 33 (ECTA)
இதைப்போன்று கலவை தயார் செய்பவனும், இதிலிருந்து பிற மக்களுக்குக் கொடுப்பவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்” என்றார். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 34 (ECTA)
நறுமணத் தூபம் ஆண்டவர் மோசேயை நோக்கி, “நறுமணப் பொருள்களான வெள்ளைப்போளம், குங்கிலியம், கெல்பான், பிசின் ஆகியவற்றையும், கலப்பில்லாச் சாம்பிராணியையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 35 (ECTA)
உப்பு சேர்க்கப்பட்ட துப்புரவான புனித நறுமணக்கட்டியை திறமைவாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல நீ தயாரிக்க வேண்டும். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 36 (ECTA)
அதில் ஒரு பகுதியை நன்கு பொடியாக்கி, நான் உனக்குக் காட்சிதரும் சந்திப்புக்கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால் வைக்க வேண்டும். அது உங்களிடையே தூய்மை மிக்கதாகத் திகழும். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 37 (ECTA)
இந்தக் கலவைக்குரிய விகிதப்படி நறுமணக் கட்டியை நீங்கள் உங்களுக்கென்று செய்து கொள்ள வேண்டாம். ஆண்டவர் பொருட்டு இது உங்களிடையே தூயதாகத் திகழும். [* விப 37: 29 ]
யாத்திராகமம் 30 : 38 (ECTA)
நறுமணம் முகர்வதற்காக இதைப்போன்று செய்பவன் எவனும், தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்” என்றார். [* விப 37: 29 ]
❮
❯