யாத்திராகமம் 27 : 1 (ECTA)
பலிபீடம்
(விப 38:1-7)
சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். நீளம் ஐந்து முழம், அகலம் ஐந்து முழமாகப் பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும். அதன் உயரமோ மூன்று முழம்.
யாத்திராகமம் 27 : 2 (ECTA)
அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய். கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும். பின் அதை வெண்கலத்தால் மூடு.
யாத்திராகமம் 27 : 3 (ECTA)
பின்னர், அதைச் சார்ந்த சாம்பல் சட்டிகள், அள்ளுகருவிகள், பலிக் கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்வாய்.
யாத்திராகமம் 27 : 4 (ECTA)
அதைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து, அத்தோடு இணைப்பாய். நான்கு மூலைகளிலும் நான்கு வளையங்களைப் பொருத்துவாய்.
யாத்திராகமம் 27 : 5 (ECTA)
பலிபீடத்தின் பாதிப் பகுதியை எட்டும்படி அதன் விளிம்புக்குக் கீழே வலைப் பின்னலைப் பொருத்து.
யாத்திராகமம் 27 : 6 (ECTA)
பலிபீடத்தின் தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து, அவற்றை வெண்கலத்தால் மூடுவாய்.
யாத்திராகமம் 27 : 7 (ECTA)
பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் இத்தண்டுகள் வளையங்களில் செலுத்தப்படும்.
யாத்திராகமம் 27 : 8 (ECTA)
பலகைகளைச் சேர்த்து உள்கூடாகப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலைமேல் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அது செய்யப்படட்டும்.
யாத்திராகமம் 27 : 9 (ECTA)
திருஉறைவிட முற்றம்
(விப 38:9-20)
திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய். தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை நூறுமுழ நீளத்திற்குப் போடவேண்டும்.
யாத்திராகமம் 27 : 10 (ECTA)
அதற்கு இருபது தூண்களும், வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.
யாத்திராகமம் 27 : 11 (ECTA)
அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும், அவற்றுடன் இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.
யாத்திராகமம் 27 : 12 (ECTA)
மேற்குப் பக்கத்தில் முற்றத்தின் அகலப்பகுதி ஐம்பது முழத் தொங்குதிரைகளாலும், அதற்கான பத்துத் தூண்களாலும் பத்துப் பாதப் பொருத்துகளாலும் அமையும்.
யாத்திராகமம் 27 : 13 (ECTA)
கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கிய முற்றத்தின் அகலம் ஐம்பது முழம்.
யாத்திராகமம் 27 : 14 (ECTA)
அதன் ஒரு பகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும் மூன்று தூண்களாலும், மூன்று பாதப் பொருத்துகளாலும் அமையும்.
யாத்திராகமம் 27 : 15 (ECTA)
மறுபகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும், மூன்று தூண்களாலும், மூன்று பாதப்பொருத்துகளாலும் அமைக்கப்படும்.
யாத்திராகமம் 27 : 16 (ECTA)
நடுப்பகுதியில், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த இருபது முழத்தொங்குதிரை முற்றத்தின் நுழை வாயிலாக விளங்கும். அதற்காக நான்கு தூண்களும், நான்கு பாதப் பொருத்துகளும் அமைக்கப்படட்டும்.
யாத்திராகமம் 27 : 17 (ECTA)
முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தூண்களுமே வெள்ளியால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் கொளுத்துகள் வெள்ளியாலும் பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலும் செய்யப்படும்.
யாத்திராகமம் 27 : 18 (ECTA)
முற்றத்தின் நீளம் நூறு முழம். அகலம் ஐம்பது முழம். உயரம் ஐந்து முழம். திரைகள் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலானவை. பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலானவை.
யாத்திராகமம் 27 : 19 (ECTA)
திருஉறைவிடத் திருப்பணிகளுக்கான அனைத்துப் பொருள்களும் அங்குள்ள கொளுத்துகளும், முற்றத்திலுள்ள எல்லாக் கொளுத்துகளும் வெண்கலமாய் இருக்கும்.
யாத்திராகமம் 27 : 20 (ECTA)
விளக்கைப் பேணுதல்
(லேவி 24:1-4)
விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டு வரப்பட வேண்டுமென்று இஸ்ரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய்.
யாத்திராகமம் 27 : 21 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும். ஆரோனும் அவன் புதல்வரும் இரவிலும் பகலிலும் அதைக் கவனித்துக் கொள்ளட்டும். தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்களுக்கிடையில் மாறாமல் நிற்கும் சட்டம் இது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21