யாத்திராகமம் 25 : 1 (ECTA)
திருத்தலத்திற்கான காணிக்கை
(விப 35:4-9) ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
யாத்திராகமம் 25 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.
யாத்திராகமம் 25 : 3 (ECTA)
நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்;
யாத்திராகமம் 25 : 4 (ECTA)
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்; மெல்லிய நார்ப்பட்டு; வெள்ளாட்டு உரோமம்;
யாத்திராகமம் 25 : 5 (ECTA)
செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்; சித்திம் மரம்;
யாத்திராகமம் 25 : 6 (ECTA)
விளக்குக்கான எண்ணெய்; திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமண வகைகள்;
யாத்திராகமம் 25 : 7 (ECTA)
ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.
யாத்திராகமம் 25 : 8 (ECTA)
நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்.
யாத்திராகமம் 25 : 9 (ECTA)
திருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.
யாத்திராகமம் 25 : 10 (ECTA)
உடன்படிக்கைப் பேழை
(விப 37:1-9) சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
யாத்திராகமம் 25 : 11 (ECTA)
அதன் மேலெங்கும் பசும்பொன்னால் மூடுவாய். உள்ளும்புறமும் வேய்ந்திடுவாய். அதைச் சுற்றிலும் ஒரு பொன் தோரணம் பொருத்திடுவாய்.
யாத்திராகமம் 25 : 12 (ECTA)
நான்கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்,
யாத்திராகமம் 25 : 13 (ECTA)
சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றையும் பொன்னால் மூடுவாய்.
யாத்திராகமம் 25 : 14 (ECTA)
பேழையைத் தூக்கிச்செல்லும்படி பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளை மாட்டிவைப்பாய்.
யாத்திராகமம் 25 : 15 (ECTA)
தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும். அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.
யாத்திராகமம் 25 : 16 (ECTA)
நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளைப் பேழையினுள் வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 17 (ECTA)
மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். [* எபி 9: 5 ]
யாத்திராகமம் 25 : 18 (ECTA)
இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
யாத்திராகமம் 25 : 19 (ECTA)
ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.
யாத்திராகமம் 25 : 20 (ECTA)
அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.
யாத்திராகமம் 25 : 21 (ECTA)
பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 22 (ECTA)
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
யாத்திராகமம் 25 : 23 (ECTA)
அப்ப மேசை
(விப 37:10-16) சித்திம் மரத்தால் ஒரு மேசை செய். அதன் நீளம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
யாத்திராகமம் 25 : 24 (ECTA)
அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன்தோரணம் செய்து வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 25 (ECTA)
மேலும், நான்கு விரல்கடை அளவில் அதற்குச் சுற்றுச்சட்டம் அமைத்து, சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைப்பாய். * ‘தோப்பகு’ என்பது எபிரேய பாடம்..
யாத்திராகமம் 25 : 26 (ECTA)
அதற்கு நான்கு பொன் வளையங்கள் செய்து, நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் இணைத்துவிடு.
யாத்திராகமம் 25 : 27 (ECTA)
மேசையைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்கும் வளையங்கள் சட்டத்தின் அருகில் கிடக்கட்டும்.
யாத்திராகமம் 25 : 28 (ECTA)
சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து, அவற்றையும் பொன்னால் பொதிவாய். இவைகளைக் கொண்டே மேசை தூக்கிச் செல்லப்பட வேண்டும்.
யாத்திராகமம் 25 : 29 (ECTA)
அதற்குரிய தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மபலிக்கான குவளைகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். பசும் பொன்னால் அவற்றைச் செய்க.
யாத்திராகமம் 25 : 30 (ECTA)
என்முன் இம்மேசைமேல் எப்பொழுதும் ‘திருமுன்னிலை அப்பம்’ வைப்பாயாக! [* லேவி 24:5- 8 ]
யாத்திராகமம் 25 : 31 (ECTA)
விளக்குத் தண்டு
(விப 37:17-24) பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.
யாத்திராகமம் 25 : 32 (ECTA)
விளக்குத்தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும், விளக்குத்தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக, அதன் பக்கங்களில் ஆறுகிளைகள் செல்லும்.
யாத்திராகமம் 25 : 33 (ECTA)
ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் சேர்ந்து அமையும். மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் அமையும். இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.
யாத்திராகமம் 25 : 34 (ECTA)
ஆனால், விளக்குத் தண்டுக்கு நேர் மேலே வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் அமையும்.
யாத்திராகமம் 25 : 35 (ECTA)
முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளுக்கும் அமையும்.
யாத்திராகமம் 25 : 36 (ECTA)
அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தவையாயும் பசும்பொன் அடிப்பு வேலையுடன் அமைந்தவையாயும் இருக்கும்.
யாத்திராகமம் 25 : 37 (ECTA)
அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்; முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.
யாத்திராகமம் 25 : 38 (ECTA)
அதன் அணைப்பான்களும், நெருப்புத் தட்டுகளும் பசும்பொன்னாலேயே ஆக்கப்படவேண்டும்.
யாத்திராகமம் 25 : 39 (ECTA)
அதனையும் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்து முடிப்பாய்.
யாத்திராகமம் 25 : 40 (ECTA)
மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றைச் செய்யுமாறு கவனித்துக் கொள். [* திப 7:44; எபி 8: 5 ]
❮
❯