யாத்திராகமம் 23 : 1 (ECTA)
நீதியும் இரக்கமும் பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். [* விப 17:16; லேவி 19:11-12; இச 5: 20 ]
யாத்திராகமம் 23 : 2 (ECTA)
கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்!
யாத்திராகமம் 23 : 3 (ECTA)
எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே. [* லேவி 19: 15 ]
யாத்திராகமம் 23 : 4 (ECTA)
உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு. [* இச 22:1- 4 ]
யாத்திராகமம் 23 : 5 (ECTA)
உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய். [* இச 22:1- 4 ]
யாத்திராகமம் 23 : 6 (ECTA)
உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே. [* லேவி 19:15; இச 16: 9 ]
யாத்திராகமம் 23 : 7 (ECTA)
தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன். [* லேவி 19:15; இச 16: 9 ]
யாத்திராகமம் 23 : 8 (ECTA)
கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும். [* லேவி 19:15; இச 16: 9 ]
யாத்திராகமம் 23 : 9 (ECTA)
அந்நியரை நீ ஒடுக்காதே. அந்நியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில், எகிப்து நாட்டில் நீங்களும் அந்நியராக இருந்தீர்கள். [* விப 22:21; லேவி 19:33-34; இச 24:17-18; 27: 19 ]
யாத்திராகமம் 23 : 10 (ECTA)
ஓய்வு ஆண்டும் ஓய்வு நாளும் ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலை சேமித்து வைப்பாய். [* லேவி 25:1- 7 ]
யாத்திராகமம் 23 : 11 (ECTA)
ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும் தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய். உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும். அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும். உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவ தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய். [* லேவி 25:1- 7 ]
யாத்திராகமம் 23 : 12 (ECTA)
ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்; ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய். இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்; உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியரும் இளைப்பாறுவர். [* விப 20:9-11; 31:15; 34:21; 35:2; லேவி 23:3; இச 5:13- 14 ]
யாத்திராகமம் 23 : 13 (ECTA)
நான் உங்களுக்கு சொன்ன யாவற்றையும் கடைப்பிடியுங்கள். பிற தெய்வங்களின் பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டாம். அது உங்கள் வாயில் ஒலிக்கவும் வேண்டாம்.
யாத்திராகமம் 23 : 14 (ECTA)
முப்பெரும் விழாக்கள்
(விப 34:18-26; இச 16:1-17) ஆண்டில் மூன்று முறை நீ எனக்கு விழா எடுப்பாய்.
யாத்திராகமம் 23 : 15 (ECTA)
புளிப்பற்ற அப்ப விழாவை நீ கொண்டாட வேண்டும். நான் உனக்கு கட்டளையிட்டபடி ஆபிபு மாதத்தில் குறிக்கபட்ட காலத்தில் ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்பாய். ஏனெனில், அப்போது நீ எகிப்திலிருந்து வெளியேறினாய். எவரும் வெறுங்கையராக என் திருமுன் வரவேண்டாம். [* விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:17- 25 ]
யாத்திராகமம் 23 : 16 (ECTA)
வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, ‘அறுவடைவிழா’வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் ‘சேகரிப்பு விழா’வும் எடுக்க வேண்டும். [* லேவி 23:15-21,39-43; எண் 28:26- 31 ]
யாத்திராகமம் 23 : 17 (ECTA)
ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும் தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.
யாத்திராகமம் 23 : 18 (ECTA)
எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. என் விழாவிலுள்ள கொழுப்பு காலைவரைக்கும் இருக்கக்கூடாது.
யாத்திராகமம் 23 : 19 (ECTA)
உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய். குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்காதே. * விப 34:26; இச 14:21; 26:2..
யாத்திராகமம் 23 : 20 (ECTA)
வாக்குறுதிகள், அறிவுரைகள் வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
யாத்திராகமம் 23 : 21 (ECTA)
அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.
யாத்திராகமம் 23 : 22 (ECTA)
நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.
யாத்திராகமம் 23 : 23 (ECTA)
ஏனெனில், என் தூதர் உனக்குமுன் சென்று உன்னை எமோரியர், இத்தியர், பெரிசியர், கானானியர், இவ்வியர், எபூசியர் இவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது நான் அவர்களை அழித்தொழிப்பேன்.
யாத்திராகமம் 23 : 24 (ECTA)
நீ அவர்கள் தெய்வங்களைப் பணிந்து கொள்ளவோ, அவைகளுக்கு வழிபாடு செய்யவோ, அவைகளுக்குரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். மாறாக, அவற்றை அழித்தொழித்து அவற்றின் சிலைத்தூண்களை உடைத்துத் தள்ளுவாய்.
யாத்திராகமம் 23 : 25 (ECTA)
நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும். அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார். அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார்.
யாத்திராகமம் 23 : 26 (ECTA)
குறைகாலப் பிள்ளைப்பேறும் மலடும் உன் நாட்டில் இரா. உன் வாழ்நாள்களின் எண்ணிக்கையை நான் நிறைவு செய்வேன்.
யாத்திராகமம் 23 : 27 (ECTA)
‘என் பேரச்சத்தை’ உனக்கு முன்னர் அனுப்பி, உன்னை எதிர்ப்படும் எல்லா மக்களையும் நான் கதிகலங்கச் செய்வேன். உன் பகைவர் அனைவரும் உனக்குப் புறம்காட்டச் செய்வேன்.
யாத்திராகமம் 23 : 28 (ECTA)
உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன். அவை இவ்வியரையும் கானானியரையும் இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.
யாத்திராகமம் 23 : 29 (ECTA)
ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.
யாத்திராகமம் 23 : 30 (ECTA)
எனவே, நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.
யாத்திராகமம் 23 : 31 (ECTA)
உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும், பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும், விரிந்து கிடக்கச் செய்வேன். ஏனெனில், அந்நாட்டின் குடிமக்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன். நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
யாத்திராகமம் 23 : 32 (ECTA)
நீ அவர்களுடனோ அவர்களுடைய தெய்வங்களுடனோ எந்த உடன்படிக்கையும் செய்யாதே!
யாத்திராகமம் 23 : 33 (ECTA)
அவர்கள் உன் நாட்டில் குடியிருக்க வேண்டாம். இல்லையெனில் நீ எனக்கு எதிராகப் பாவம் செய்ய அவர்கள் காரணமாவர். நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்.
❮
❯