யாத்திராகமம் 20 : 1 (ECTA)
கடவுள் தந்த கட்டளைகள்
(இச 5:1-21)
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
யாத்திராகமம் 20 : 2 (ECTA)
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
யாத்திராகமம் 20 : 3 (ECTA)
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
யாத்திராகமம் 20 : 4 (ECTA)
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். [* விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27: 15 ]
யாத்திராகமம் 20 : 5 (ECTA)
நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். [* விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27: 15 ; விப 34:6-7; எண் 14:18; இச 7:9- 10. ]
யாத்திராகமம் 20 : 6 (ECTA)
மாறாக, என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். [* விப 34:6-7; எண் 14:18; இச 7:9- 10 ]
யாத்திராகமம் 20 : 7 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். [* லேவி 19: 12 ]
யாத்திராகமம் 20 : 8 (ECTA)
ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. [* விப 16:23-30; 31:12- 14 ]
யாத்திராகமம் 20 : 9 (ECTA)
ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். [* விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23: 3 ]
யாத்திராகமம் 20 : 10 (ECTA)
ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அந்நியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். [* விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23: 3 ]
யாத்திராகமம் 20 : 11 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு, ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். [* தொநூ 2:1-3; விப 31: 17 ]
யாத்திராகமம் 20 : 12 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. [* இச 27:16; மத் 15:4; 19:19; மாற் 7:10; 10:19; லூக் 18:20; எபே 6:2- 3 ]
யாத்திராகமம் 20 : 13 (ECTA)
கொலை செய்யாதே. [* தொநூ 9:6; லேவி 24:17; மத் 5:21; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2: 11 ]
யாத்திராகமம் 20 : 14 (ECTA)
விபசாரம் செய்யாதே. [* லேவி 20:10; மத் 5:27; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2: 11 ]
யாத்திராகமம் 20 : 15 (ECTA)
களவு செய்யாதே. [* லேவி 19:11; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13: 9 ]
யாத்திராகமம் 20 : 16 (ECTA)
பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. [* விப 23:1; மத் 19:18; மாற் 10:19; லூக் 18: 20 ]
யாத்திராகமம் 20 : 17 (ECTA)
பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. [* உரோ 7:7; 13: 9 ]
யாத்திராகமம் 20 : 18 (ECTA)
மக்களின் அச்சம்
(இச 5:22-33)
மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும் எக்காள முழக்கத்தையும் புகையையும் மலையையும் கண்டனர்; கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு, [* எபி 12:18- 19 ]
யாத்திராகமம் 20 : 19 (ECTA)
மோசேயை நோக்கி, “நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில், நாங்கள் செத்துப் போவோம்” என்றனர். [* எபி 12:18- 19 ]
யாத்திராகமம் 20 : 20 (ECTA)
மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்; கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்” என்றார்.
யாத்திராகமம் 20 : 21 (ECTA)
மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.
யாத்திராகமம் 20 : 22 (ECTA)
பலிபீடம் பற்றிய சட்டங்கள் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு உரைத்தார்! இவ்வாறு நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்: “நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்பதை நீங்கள் கண்டீர்கள்.
யாத்திராகமம் 20 : 23 (ECTA)
எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.
யாத்திராகமம் 20 : 24 (ECTA)
எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து, உன் ஆடுகளையும் மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும், நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து. நான் என்பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
யாத்திராகமம் 20 : 25 (ECTA)
எனக்காகக் கற்பீடம் அமைத்தால், செதுக்கிய கற்கள்கொண்டு கட்டவேண்டாம். ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய். * இச 27:5-7; யோசு 8:31..
யாத்திராகமம் 20 : 26 (ECTA)
உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி, படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26