யாத்திராகமம் 1 : 1 (ECTA)
எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமைவாழ்க்கை யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: [* தொநூ 46:8- 27 ]
யாத்திராகமம் 1 : 2 (ECTA)
ரூபன், சிமியோன், லேவி, யூதா; [* தொநூ 46:8- 27 ]
யாத்திராகமம் 1 : 3 (ECTA)
இசக்கார், செபுலோன், பென்யமின்; [* தொநூ 46:8- 27 ]
யாத்திராகமம் 1 : 4 (ECTA)
தாண், நப்தலி, காத்து, ஆசேர். [* தொநூ 46:8- 27 ]
யாத்திராகமம் 1 : 5 (ECTA)
யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.*யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார். * ஒரு பழைய மொழிபெயர்ப்பில் ‘எழுபத்தைந்து’ எனக் காணப்படுகிறது (காண்.
யாத்திராகமம் 1 : 6 (ECTA)
பின்னர், யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.
யாத்திராகமம் 1 : 7 (ECTA)
இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்; ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்; இதனால்,அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது. [* திப 7: 17 ]
யாத்திராகமம் 1 : 8 (ECTA)
இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். [* திப 7: 18 ]
யாத்திராகமம் 1 : 9 (ECTA)
அவன் தன் குடிமக்களை நோக்கி, “இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
யாத்திராகமம் 1 : 10 (ECTA)
அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில், போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்” என்று கூறினான். [* திப 7: 19 ]
யாத்திராகமம் 1 : 11 (ECTA)
எனவே, கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
யாத்திராகமம் 1 : 12 (ECTA)
ஆயினும், எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால், எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
யாத்திராகமம் 1 : 13 (ECTA)
எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்;
யாத்திராகமம் 1 : 14 (ECTA)
கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர். * திப )..
யாத்திராகமம் 1 : 15 (ECTA)
எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:
யாத்திராகமம் 1 : 16 (ECTA)
“எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்; பெண்மகவு என்றால் வாழட்டும்”.
யாத்திராகமம் 1 : 17 (ECTA)
ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
யாத்திராகமம் 1 : 18 (ECTA)
எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, “ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?” என்று கேட்டான்.
யாத்திராகமம் 1 : 19 (ECTA)
அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, “எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்; ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்; மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது” என்று காரணம் கூறினர்.
யாத்திராகமம் 1 : 20 (ECTA)
இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.
யாத்திராகமம் 1 : 21 (ECTA)
இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
யாத்திராகமம் 1 : 22 (ECTA)
பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, “பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்” என்று அறிவித்தான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22