எஸ்தர் 10 : 1 (ECTA)
நிறையுரை மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின் மீதும் தீர்வை விதித்தார்.
எஸ்தர் 10 : 2 (ECTA)
அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
எஸ்தர் 10 : 3 (ECTA)
யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.

1 2 3