எபேசியர் 6 : 1 (ECTA)
பெற்றோர் பிள்ளைகள் நடத்தை பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. [* கொலோ 3: 20 ]
எபேசியர் 6 : 2 (ECTA)
“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. [* விப 20:12; இச 5: 16 ]
எபேசியர் 6 : 3 (ECTA)
“இதனால் நீ நலம் பெறுவாய்;
மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்”
என்பதே அவ்வாக்குறுதி. [* விப 20:12; இச 5: 16 ]
எபேசியர் 6 : 4 (ECTA)
தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். [* கொலோ 3: 21 ]
எபேசியர் 6 : 5 (ECTA)
தலைவர்கள் அடிமைகள் நடத்தை அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள். [* கொலோ 3:22- 25 ]
எபேசியர் 6 : 6 (ECTA)
மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். [* கொலோ 3:22- 25 ]
எபேசியர் 6 : 7 (ECTA)
மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வதுபோல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். [* கொலோ 3:22- 25 ]
எபேசியர் 6 : 8 (ECTA)
அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! [* கொலோ 3:22- 25 ]
எபேசியர் 6 : 9 (ECTA)
தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். [* கொலோ 4:1; இச 10:17; கொலோ 3: 25 ]
எபேசியர் 6 : 10 (ECTA)
கிறிஸ்தவ வாழ்வில் போராட்டம் இறுதியாக, நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்.
எபேசியர் 6 : 11 (ECTA)
அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.
எபேசியர் 6 : 12 (ECTA)
ஏனென்றால், நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.
எபேசியர் 6 : 13 (ECTA)
எனவே, பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமைபெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6 : 14 (ECTA)
ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்; [* எசா 11:5; 59: 17 ]
எபேசியர் 6 : 15 (ECTA)
அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். [* எசா 52: 7 ]
எபேசியர் 6 : 16 (ECTA)
எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.
எபேசியர் 6 : 17 (ECTA)
மீட்பைத் தலைச்சீராவாகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். [* எசா 59: 17 ]
எபேசியர் 6 : 18 (ECTA)
எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.
எபேசியர் 6 : 19 (ECTA)
நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள்.
எபேசியர் 6 : 20 (ECTA)
நான் விலங்கிடப்பட்டிருந்தும் இந்த நற்செய்தியின் தூதுவனாக இருக்கிறேன். நான் பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.
எபேசியர் 6 : 21 (ECTA)
4.இறுதி வாழ்த்தும் முடிவுரையும் என்னைப்பற்றிய செய்திகளையும், நான் என்ன செய்கிறேன் என்பதையும் நீங்களும் அறிந்திருக்கும்படி, என் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர். [* திப 20:4; 2 திமொ 4: 12 ; கொலோ 4:7,8.. ]
எபேசியர் 6 : 22 (ECTA)
எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். * கொலோ 4:7,8..
எபேசியர் 6 : 23 (ECTA)
தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் நம்பிக்கையோடு கூடிய அன்பும் அமைதியும் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் உரித்தாகுக!
எபேசியர் 6 : 24 (ECTA)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24