பிரசங்கி 8 : 1 (ECTA)
ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்; அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும். [* நீமொ 22: 1 ]
பிரசங்கி 8 : 2 (ECTA)
அரசனுக்கு அடங்கி நட கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.
பிரசங்கி 8 : 3 (ECTA)
எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே.
பிரசங்கி 8 : 4 (ECTA)
மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, “ஏன் இப்படிச் செய்கிறீர்?” என்று அவனை யார் கேட்க முடியும்?
பிரசங்கி 8 : 5 (ECTA)
அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.
பிரசங்கி 8 : 6 (ECTA)
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு; செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?
பிரசங்கி 8 : 7 (ECTA)
ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது.
பிரசங்கி 8 : 8 (ECTA)
அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது; பணம் கொடுத்தும் தப்ப முடியாது.
பிரசங்கி 8 : 9 (ECTA)
நல்லாரும் பொல்லாரும் உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது * யாக் 1:19..
பிரசங்கி 8 : 10 (ECTA)
பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே.
பிரசங்கி 8 : 11 (ECTA)
மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.
பிரசங்கி 8 : 12 (ECTA)
பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால்,
பிரசங்கி 8 : 13 (ECTA)
தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்; நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.
பிரசங்கி 8 : 14 (ECTA)
வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்.
பிரசங்கி 8 : 15 (ECTA)
எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.
பிரசங்கி 8 : 16 (ECTA)
(16-17) நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை; ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரால் புரிந்துகொள்ள இயலாது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17