பிரசங்கி 7 : 1 (ECTA)
வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை விட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. [* நீமொ 22: 1 ]
பிரசங்கி 7 : 2 (ECTA)
விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் இதுவே முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.
பிரசங்கி 7 : 3 (ECTA)
சிரிப்பைவிடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்; ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்.
பிரசங்கி 7 : 4 (ECTA)
ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும்; மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும்.
பிரசங்கி 7 : 5 (ECTA)
மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று.
பிரசங்கி 7 : 6 (ECTA)
மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப் போன்றது; அதனால் பயன் ஒன்றுமில்லை.
பிரசங்கி 7 : 7 (ECTA)
இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும். கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.
பிரசங்கி 7 : 8 (ECTA)
ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது; உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல்.
பிரசங்கி 7 : 9 (ECTA)
உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே; மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம். * யாக் 1:19..
பிரசங்கி 7 : 10 (ECTA)
“இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?” என்று கேட்காதே; இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.
பிரசங்கி 7 : 11 (ECTA)
மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்; இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது.
பிரசங்கி 7 : 12 (ECTA)
பணம் நிழல் தருவதுபோல ஞானமும் நிழல் தரும்; ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்; அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.
பிரசங்கி 7 : 13 (ECTA)
கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்?
பிரசங்கி 7 : 14 (ECTA)
வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்’.
பிரசங்கி 7 : 15 (ECTA)
என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார்.
பிரசங்கி 7 : 16 (ECTA)
நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?
பிரசங்கி 7 : 17 (ECTA)
தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?
பிரசங்கி 7 : 18 (ECTA)
ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.
பிரசங்கி 7 : 19 (ECTA)
ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.
பிரசங்கி 7 : 20 (ECTA)
குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.
பிரசங்கி 7 : 21 (ECTA)
பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.
பிரசங்கி 7 : 22 (ECTA)
நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.
பிரசங்கி 7 : 23 (ECTA)
இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.
பிரசங்கி 7 : 24 (ECTA)
ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது; மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
பிரசங்கி 7 : 25 (ECTA)
நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும் மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன்.
பிரசங்கி 7 : 26 (ECTA)
சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்; உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.
பிரசங்கி 7 : 27 (ECTA)
“ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்; அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.
பிரசங்கி 7 : 28 (ECTA)
ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.
பிரசங்கி 7 : 29 (ECTA)
நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29