பிரசங்கி 3 : 1 (ECTA)
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச் சிக்கும் ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 2 (ECTA)
பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்;
பிரசங்கி 3 : 3 (ECTA)
கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;
பிரசங்கி 3 : 4 (ECTA)
இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; [* 1 அர 10:23-27; 2 குறி 9:22- 27 ]
பிரசங்கி 3 : 5 (ECTA)
கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; [* 1 அர 10:23-27; 2 குறி 9:22- 27 ]
பிரசங்கி 3 : 6 (ECTA)
தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்; [* 1 அர 10:23-27; 2 குறி 9:22- 27 ]
பிரசங்கி 3 : 7 (ECTA)
கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; [* 1 அர 10:23-27; 2 குறி 9:22- 27 ; 1 அர 4: 23. ]
பிரசங்கி 3 : 8 (ECTA)
அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். [* 1 அர 10:23-27; 2 குறி 9:22- 27 ; 1 அர 10:10, 14- 22. ]
பிரசங்கி 3 : 9 (ECTA)
வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? [* 1 குறி 29: 25 ]
பிரசங்கி 3 : 10 (ECTA)
மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன்.
பிரசங்கி 3 : 11 (ECTA)
கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
பிரசங்கி 3 : 12 (ECTA)
எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.
பிரசங்கி 3 : 13 (ECTA)
உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.
பிரசங்கி 3 : 14 (ECTA)
கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.
பிரசங்கி 3 : 15 (ECTA)
இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.
பிரசங்கி 3 : 16 (ECTA)
உலகில் காணப்படும் அநீதி வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது.
பிரசங்கி 3 : 17 (ECTA)
‘கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
பிரசங்கி 3 : 18 (ECTA)
“மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
பிரசங்கி 3 : 19 (ECTA)
மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது; மனிதரும் மடிகிறார்; விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை; எல்லாம் வீணே.
பிரசங்கி 3 : 20 (ECTA)
எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின; எல்லாம் மண்ணுக்கே மீளும்.
பிரசங்கி 3 : 21 (ECTA)
மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?
பிரசங்கி 3 : 22 (ECTA)
ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22