பிரசங்கி 10 : 1 (ECTA)
மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள் கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடை நாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.
பிரசங்கி 10 : 2 (ECTA)
தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்; தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.
பிரசங்கி 10 : 3 (ECTA)
மூடர் தெருவில் நடந்தாலே போதும்; அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார்.
பிரசங்கி 10 : 4 (ECTA)
மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.
பிரசங்கி 10 : 5 (ECTA)
உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.
பிரசங்கி 10 : 6 (ECTA)
மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது; செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
பிரசங்கி 10 : 7 (ECTA)
அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.
பிரசங்கி 10 : 8 (ECTA)
குழியை வெட்டுவார் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும். [* திபா 7:15; நீமொ 26:7.. ]
பிரசங்கி 10 : 9 (ECTA)
கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார்.
பிரசங்கி 10 : 10 (ECTA)
மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.
பிரசங்கி 10 : 11 (ECTA)
பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை.
பிரசங்கி 10 : 12 (ECTA)
ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார்.
பிரசங்கி 10 : 13 (ECTA)
அவரது பேச்சு மடமையில் தொடங்கும்; முழு பைத்தியத்தில் போய் முடியும்.
பிரசங்கி 10 : 14 (ECTA)
மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்; என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.
பிரசங்கி 10 : 15 (ECTA)
மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார்.
பிரசங்கி 10 : 16 (ECTA)
சிறு பிள்ளையை அரசனாகவும் விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய்.
பிரசங்கி 10 : 17 (ECTA)
உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும் உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.
பிரசங்கி 10 : 18 (ECTA)
சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்; பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும்.
பிரசங்கி 10 : 19 (ECTA)
விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்; திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்; பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.
பிரசங்கி 10 : 20 (ECTA)
தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே; படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே. வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்; பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20