உபாகமம் 33 : 1 (ECTA)
கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது;
உபாகமம் 33 : 2 (ECTA)
ஆண்டவர் சீனாயினின்று வந்தார்; சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்; பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்; பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்; அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார்.
உபாகமம் 33 : 3 (ECTA)
உண்மையாகவே, மக்களினங்களின் அன்பர் அவர்; அவர்தம் புனிதர்கள் அவர் கையில் உள்ளனர். அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்; அனைவரும் அவரது கூற்றுகளை ஏற்றுக்கொள்வர்.
உபாகமம் 33 : 4 (ECTA)
மோசே எங்களுக்குத் திருச்சட்டத்தைக் கட்டளையாக வழங்கினார்; அதுவே யாக்கோபினது திருக்கூட்டத்தின் உடைமை.
உபாகமம் 33 : 5 (ECTA)
மக்கள் தலைவர்களும் இஸ்ரயேலின் குலங்களும் ஒன்று திரட்டப்பட்ட பொழுது அவர் எசுரூன்மீது அரசனாய் இருந்தார்.
உபாகமம் 33 : 6 (ECTA)
ரூபன் வாழட்டும்; அவன் மடிந்து போகாதிருக்கட்டும்; அவன்தன் புதல்வர் குறையாதிருக்கட்டும்!
உபாகமம் 33 : 7 (ECTA)
யூதாவுக்கான ஆசி இதுவே. அவர் கூறியது; ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்; அவனை அவனுடைய மக்களிடம் கொண்டு வாரும்; அவனது கைகள் அவனுக்குப் போதுமானது ஆகட்டும். அவனுக்குத் துணை நின்று அவனுடைய பகைவரிடமிருந்து காத்தருளும்.
உபாகமம் 33 : 8 (ECTA)
லேவியைக் குறித்து அவர் கூறியது; ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம் என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு மெரிபாவின் நீரூற்றருகில் வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம் இருக்கட்டும்.
உபாகமம் 33 : 9 (ECTA)
அவனிடமே அவற்றைக் கொடும்; ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி "நான் உங்களைப் பாரேன்" என்றவன்; தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்; தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்; உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்;
உபாகமம் 33 : 10 (ECTA)
யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ரயேலுக்கு உம் திருச்சட்டத்தையும் கற்றுத்தருபவன்; உமது முன்னிலையில் தூபம் காட்டுபவன்; உமது பீடத்தில் எரிபலிகளைச் செலுத்துபவன்.
உபாகமம் 33 : 11 (ECTA)
ஆண்டவரே, அவனது ஆற்றலை ஆசியால் நிரப்பும்; அவனுடைய கரங்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும்; அவனுக்கு எதிராக எழும்புவோரை அவர்களின் இடுப்பு ஒடிந்துவிழும் வண்ணம் வதையும். அவனைப் பகைப்பவர் மீண்டும் எழாதவாறு செய்யும்.
உபாகமம் 33 : 12 (ECTA)
பென்யமினைக் குறித்து அவர் கூறியது; ஆண்டவரின் அன்புக்கு உரியவன்; அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்; அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான்.
உபாகமம் 33 : 13 (ECTA)
யோசேப்பைக் குறித்து அவர் கூறியது; அவனது நிலம் ஆண்டவரால் ஆசி பெற்றது; அது வானத்தின் செல்வத்தாலும் பனியாலும்,
உபாகமம் 33 : 14 (ECTA)
ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும் கதிரவன் வழங்கும் கனிகளாலும் பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும்
உபாகமம் 33 : 15 (ECTA)
பண்டைய மலைகளின் உயர் செல்வங்களாலும், என்றுமுள குன்றுகளின் அரும் பொருள்களாலும் ஆசிபெற்றது.
உபாகமம் 33 : 16 (ECTA)
நிலம் தரும் பெரும் விளைச்சலும் அதன் நிறைவும், முட்புதரில் வீற்றிருந்தவரின் அருளன்பும், எல்லா ஆசிகளும் யோசேப்பின் தலைமீதும் தன் சகோதரருள் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமீதும் தங்குவதாக!
உபாகமம் 33 : 17 (ECTA)
அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது. அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை; அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான். அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும்.
உபாகமம் 33 : 18 (ECTA)
செபுலோனைக் குறித்து அவர் கூறியது; செபுலோனே. நீ பயணம் செய்கையில் மகிழ்ந்திடு! இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும் போது மகிழ்ந்திடு!
உபாகமம் 33 : 19 (ECTA)
அவர்கள் மக்களினங்களை மலைக்கு அழைத்துச் செல்வர்; அங்கு அவர்கள் ஏற்புடைய பலிகளைச் செலுத்துவர்; அவர்கள் கடலில் பலுகியிருப்பதும் மணலில் புதைந்திருப்பதுமான திரளான செல்வங்களை அனுபவிப்பார்.
உபாகமம் 33 : 20 (ECTA)
காத்தைக் குறித்து அவர் கூறியது; காத்தைப் பெருகச் செய்பவர் போற்றி! போற்றி! காத்து சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் தலையையும் பீறிப் பிளந்திடுவான்.
உபாகமம் 33 : 21 (ECTA)
அவன் தனக்கெனச் சிறந்த இடத்தைத் தேர்ந்து கொண்டான்; தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின் தலைவனாகி, அவன் ஆண்டவரின் நீதியை நிலை நிறுத்தினான்; ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து, அவர்தம் நீதிமுறையை நிலைநாட்டினான்.
உபாகமம் 33 : 22 (ECTA)
தாணைக் குறித்து அவர் கூறியது; தாண் பாசானினின்று பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.
உபாகமம் 33 : 23 (ECTA)
நப்தலியைக் குறித்து அவர் கூறியது; ஆண்டவரின் அருளன்பால் நிறைவு பெற்றவன்; கலிலேயக் கடலையும் தென்திசையையும் உடைமையாக்கிக் கொள்வான்.
உபாகமம் 33 : 24 (ECTA)
ஆசேரைக் குறித்து அவர் கூறியது; ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான்; தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான்; அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான்.
உபாகமம் 33 : 25 (ECTA)
தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை; உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்.
உபாகமம் 33 : 26 (ECTA)
எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை; அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.
உபாகமம் 33 : 27 (ECTA)
என்றுமுள கடவுளே உனக்குப் புகலிடம்; என்றுமுள அவரது புயம் உனக்கு அடித்தளம்; பகைவரை உன் முன்னின்று விரட்டியடித்து, அவர்களை அழித்துவிடு" என்பார் அவர்.
உபாகமம் 33 : 28 (ECTA)
அப்போது, இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழ்ந்திடும்; யாக்கோபின் உறைவிடம், தானியமும், இரசமும் மிகுந்த நிலத்தில் இருக்கும்; அவர்தம் மேகங்கள் பனி மழை பொழியும்.
உபாகமம் 33 : 29 (ECTA)
இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்; ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக்குறுகுவர்! அவர்களின் தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: