உபாகமம் 3 : 1 (ECTA)
மன்னன் ஓகின்மீது இஸ்ரயேல் வெற்றிகொள்ளல்
(எண் 21:31-35) பின்பு, நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான்.
உபாகமம் 3 : 2 (ECTA)
அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, ‘அவனுக்கு நீ அஞ்சாதே. ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவரையும், அவன் நாட்டையும் உன்னிடம் ஒப்படைத்துள்ளேன். எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனுக்கு நீ செய்தது போலவே, அவனுக்கும் செய்’ என்றார்.
உபாகமம் 3 : 3 (ECTA)
அவ்வாறே, நம் கடவுளாகிய ஆண்டவர் பாசானின் மன்னனாகிய ஓகையும் அவன் மக்கள் அனைவரையும் நம்மிடம் ஒப்படைத்தார். அவனுக்குச் சொந்தமான எவனும் எஞ்சியிராதபடி அவர்களைத்தாக்கினோம்.
உபாகமம் 3 : 4 (ECTA)
அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றினோம். அப்பகுதியில் நாம் கைப்பற்றாத நகர் எதுவுமே இல்லை. அர்கோபின் எல்லா பகுதிகளிலும், பாசானிலிருந்த ஓகின் நாட்டிலும் மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினோம்.
உபாகமம் 3 : 5 (ECTA)
அந்த நகர்களெல்லாம் மிக உயர்ந்த மதில்களாலும், இரட்டைக் கதவுகளாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அவை தவிர மதில்கள் இல்லாத நகர்களும் எண்ணிறந்தவை.
உபாகமம் 3 : 6 (ECTA)
அவற்றை அழித்தொழித்தோம். எஸ்போனின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோலவே எல்லா நகர்களையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அழித்தொழித்தோம்.
உபாகமம் 3 : 7 (ECTA)
எல்லாக் கால்நடைகளையும் நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.
உபாகமம் 3 : 8 (ECTA)
அவ்வேளையில் எமோரியரின் இரண்டு மன்னர்களிடமிருந்ததும், யோர்தானுக்கு இக்கரையிலிருக்கும் அர்னோன் ஓடை தொடங்கி எர்மோன் மலை வரையிலும் உள்ள நாட்டைக் கைப்பற்றினோம்.
உபாகமம் 3 : 9 (ECTA)
சீதோனியர் அந்த எர்மோனை ‘சிரியோன்’ என்றழைக்கின்றனர். எமோரியரோ அதைச் ‘செனீர்’ என்றழைக்கின்றனர்-
உபாகமம் 3 : 10 (ECTA)
சமவெளியில் உள்ள எல்லா நகர்களையும், கிலயாது முழுவதையும், பாசான் முழுவதையும், சல்கா, எதிரேயிவரை உள்ள, பாசானிலிருந்த ஓகின் அரச நகர்களையும் கைப்பற்றினோம்.
உபாகமம் 3 : 11 (ECTA)
அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஓகு மட்டுமே எஞ்சியிருந்தான். அவனது கட்டில் இரும்பினால் ஆனது. அதுமனிதரின் கைமுழத்தின்படி, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது அம்மோனியரின் இரப்பா நகரில் உள்ளதன்றோ!
உபாகமம் 3 : 12 (ECTA)
யோர்தானுக்குக் கிழக்கே குடியேறிய குலங்கள்
(எண் 32:1-42) அக்காலத்தில் நாம் உடைமையாக்கிக் கொண்ட இந்த நாட்டில், அர்னோன் ஓடைக் கரையிலுள்ள அரோயேர் முதல் கிலயாது மலை நாட்டின் ஒரு பகுதியையும், அதன் நகர்களையும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் நான் கொடுத்தேன்.
உபாகமம் 3 : 13 (ECTA)
கிலயாதின் மறு பகுதியையும், ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் குலத்திற்குக் கொடுத்தேன். மேலும், அரக்கர்களின் நாடு எனப்பட்ட பாசானைச் சார்ந்த அர்கோபுப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.-
உபாகமம் 3 : 14 (ECTA)
மனாசேயின் மகன் யாயிர்* அர்கோபுப் பகுதி முழுவதையும், கெசூரியர், மாகாத்தியர் என்பவர்களது எல்லை வரை உடைமையாக்கிக் கொண்டு, பாசான் என்னும் அப்பகுதியைத் தனது பெயராலேயே, ‘அவ்வோத்து யாயீர்’* என்றழைத்தான். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. * எபிரேயத்தில், ‘யாயீரின் குடியிருப்பு’ என்பது பொருள்..
உபாகமம் 3 : 15 (ECTA)
மாக்கிருக்குக் கிலயாதைக் கொடுத்தேன்.
உபாகமம் 3 : 16 (ECTA)
அர்னோன் ஓடைவரை உள்ள கிலயாதின் பகுதியையும், அர்னோன் நடு ஓடையும் அதன் எல்லைப்புற நாடும் தொடங்கி, அம்மோனியரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுவரைக்கும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் கொடுத்தேன்.
உபாகமம் 3 : 17 (ECTA)
மற்றும், கினரேத்து முதல் பிஸ்காவுக்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அராபாவின் உப்புக் கடல் வரை, யோர்தானை எல்லையாகக் கொண்ட சமவெளியையும் அவர்களுக்குக் கொடுத்தேன்.
உபாகமம் 3 : 18 (ECTA)
அப்பொழுது நான் உங்களை நோக்கிக் கட்டளையிட்டது: ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு தந்துள்ளார், உங்களுள் போர்வீரர் அனைவரும், போர்க்கலன் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் மக்களுக்கு முன்னே செல்லுங்கள். [* யோசு 1:12- 15 ]
உபாகமம் 3 : 19 (ECTA)
உங்கள் மனைவியரும், பிள்ளைகளும், மந்தைகளும் மட்டும்- உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று நான் அறிவேன். நான் உங்களுக்குத் தந்துள்ள நகர்களில் தங்கட்டும். [* யோசு 1:12- 15 ]
உபாகமம் 3 : 20 (ECTA)
ஆண்டவர் உங்களுக்கு அமைதி அளித்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் அமைதி அளிப்பர். உங்கள் கடவுளாகிய ஆண்டவர், யோர்தானுக்கு மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரையிலும் நீங்கள் இருங்கள். பின்னர், நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள உரிமைப் பகுதிக்குத் திரும்பலாம்.’ [* யோசு 1:12- 15 ]
உபாகமம் 3 : 21 (ECTA)
மேலும், நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டது: ‘உன் கடவுளாகிய ஆண்டவர், அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ கண்ணால் கண்டாயே! நீ செல்கின்ற எல்லா நாடுகளுக்கும் ஆண்டவர் அதுபோலவே செய்வார்.
உபாகமம் 3 : 22 (ECTA)
நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.’
உபாகமம் 3 : 23 (ECTA)
கானான் நாட்டிற்குள் நுழைய மோசேக்குத் தடை அந்நாளில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடிச் சொன்னது: [* எண் 27:12-14; இச 32:48- 52 ]
உபாகமம் 3 : 24 (ECTA)
‘என் தலைவராகிய ஆண்டவரே, நீர் உம் ஊழியனுக்கு உமது கைவன்மையையும் மாண்பையும் காட்டியுள்ளீர். உம் ஆற்றல்மிகு செயல்களுக்கு ஒப்பானவற்றைச் செய்யக்கூடிய கடவுள் எவராவது விண்ணிலோ மண்ணிலோ உண்டா? [* எண் 27:12-14; இச 32:48- 52 ]
உபாகமம் 3 : 25 (ECTA)
நான் கடந்து சென்று, யோர்தானுக்கு மேற்கிலுள்ள நல்ல நாட்டையும், அழகிய மலைப்பகுதியையும், லெபனோனையும் கண்டிட எனக்கு அனுமதி அளியும்.’ [* எண் 27:12-14; இச 32:48- 52 ]
உபாகமம் 3 : 26 (ECTA)
ஆண்டவரோ, உங்கள் பொருட்டு என்மேல் சினம் கொண்டவராய், எனக்குச் செவி கொடுக்கவில்லை. அவர் என்னை நோக்கிக் கூறியது: ‘போதும்; இது குறித்து இனி நீ என்னிடம் எதுவும் பேச வேண்டாம். [* எண் 27:12-14; இச 32:48- 52 ]
உபாகமம் 3 : 27 (ECTA)
பிஸ்கா மலை முகட்டுக்கு ஏறிப்போ; மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் உன் பார்வையைச் செலுத்து. கண்குளிரப் பார்த்துக்கொள். ஏனெனில், நீ இந்த யோர்தானைக் கடந்து செல்லமாட்டாய். [* எண் 27:12-14; இச 32:48- 52 ]
உபாகமம் 3 : 28 (ECTA)
நீ யோசுவாவுக்குப் பொறுப்பளித்து, அவனைத் திடப்படுத்தி, உறுதிப்படுத்து. ஏனெனில், அவனே இந்த மக்கள் முன்னால் செல்வான்; நீ காணும் நாட்டை அவர்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்வான்.’
உபாகமம் 3 : 29 (ECTA)
பின்னர், நாங்கள் பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29