தானியேல் 10 : 1 (ECTA)
இ. மாபெரும் காட்சி - வானதூதர் பாரசீக அரசராகிய சைரசின் மூன்றாம் ஆட்சியாண்டில் பெல்தசாச்சர் என்று பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு ஒரு வாக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது உண்மையான வாக்கு; அது ஒரு பெரும் தொல்லையைப் பற்றியது. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். அதைப் பற்றிய தெளிவு, காட்சி வாயிலாகக் கிடைத்தது.
தானியேல் 10 : 2 (ECTA)
அந்நாளில் தானியேல் ஆகிய நான் மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன்.
தானியேல் 10 : 3 (ECTA)
அந்த மூன்று வாரம் முழுவதும் நான் சுவையான உணவு அருந்தவில்லை. இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை; என் தலையில் எண்ணெய்கூடத் தடவிக் கொள்ளவில்லை.
தானியேல் 10 : 4 (ECTA)
முதல் மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று நான் திக்ரீசு என்னும் பெரிய ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன்.
தானியேல் 10 : 5 (ECTA)
என் கண்களை உயர்த்திப் பார்க்கையில், மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு தம் இடையில் ஊபாசு நாட்டுத் தங்கக்கச்சை கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன். [* திவெ 1:13-15; 2:18; 19: 12 ]
தானியேல் 10 : 6 (ECTA)
அவரது உடல் பளிங்கு போல் இருந்தது; அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது; அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் வெண்கலம் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன. [* திவெ 1:13-15; 2:18; 19: 12 ]
தானியேல் 10 : 7 (ECTA)
தானியேல் ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன். என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை; ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஒளிந்துகொள்ள ஓடிவிட்டார்கள்.
தானியேல் 10 : 8 (ECTA)
தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்; என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
தானியேல் 10 : 9 (ECTA)
அப்போது அவரது பேச்சொலி என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.
தானியேல் 10 : 10 (ECTA)
அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது; கைகளையும் முழங்கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும் படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன்.
தானியேல் 10 : 11 (ECTA)
அவர் என்னை நோக்கி, “மிகவும் அன்புக்குரிய தானியேல்! நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்; நிமிர்ந்து நில். ஏனெனில், உன்னிடம்தான் நான் அனுப்பப்பட்டேன்” என்றார். இவ்வாறு அவர் சொன்னவுடன் நடுங்கிக் கொண்டே நான் எழுந்து நின்றேன்.
தானியேல் 10 : 12 (ECTA)
அப்பொழுது அவர் என்னைப் பார்த்துக் கூறியது: “தானியேல்! அஞ்ச வேண்டாம், உய்த்துணர வேண்டும் என்னும் உள்ளத்தோடு என் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக் கொண்ட முதல் நாள் தொடங்கி உன் மன்றாட்டுக் கேட்கப்பட்டுவருகிறது. உன் மன்றாட்டுக்கேற்ப இதோ! நான் வந்துள்ளேன்.
தானியேல் 10 : 13 (ECTA)
பாரசீக நாட்டின் காவலனாகிய தூதன் இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான். அங்கே பாரசீக அரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால், தலைமைக் காவலர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணைசெய்ய வந்தார். * திவெ 12:7..
தானியேல் 10 : 14 (ECTA)
உன் இனத்தார்க்கு இறுதி நாள்களில் நடக்கவிருப்பதை உனக்கு உணர்த்துவதற்காக நான் உன்னிடம் வந்தேன். இந்த காட்சி நிறைவேற இன்னும் நாள்கள் பல ஆகும்.” * திவெ 12:7..
தானியேல் 10 : 15 (ECTA)
அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேசாதிருந்தேன். * திவெ 12:7..
தானியேல் 10 : 16 (ECTA)
அப்போது, மானிட மகனின் தோற்றம் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். நானும் வாய் திறந்து பேசி, எனக்கு எதிரில் நின்றவரை நோக்க, “என் தலைவரே! இந்தக் காட்சியின் காரணமாய் நான் வேதனையுற்றேன். என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று. * திவெ 12:7..
தானியேல் 10 : 17 (ECTA)
என் தலைவருடைய ஊழியனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு உரையாடுவது எப்படி? ஏனெனில் நான் வலிமை இழந்துவிட்டேன்; என் மூச்சும் அடைத்துக்கொண்டது” என்றேன். * திவெ 12:7..
தானியேல் 10 : 18 (ECTA)
அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார். * திவெ 12:7..
தானியேல் 10 : 19 (ECTA)
மேலும் அவர், “மிகுந்த அன்புக்குரியவனே! அஞ்சாதே; உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு துணிவாயிரு” என்றார். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி, “என் தலைவர் பேசட்டும்; ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர்” என்றேன். * திவெ 12:7..
தானியேல் 10 : 20 (ECTA)
அப்பொழுது அவர் கூறியது: “உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா? இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன். நான் அவனை முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான். * திவெ 12:7..
தானியேல் 10 : 21 (ECTA)
ஆனால் அதற்கு முன் ‘உண்மை நூலில்’ எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன். இவர்களை எதிர்த்துப் போராடுவதில் உங்கள் காவலராகிய மிக்கேலைத் தவிர எனக்குத் துணை நிற்பார் யாருமில்லை.” * திவெ 12:7..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21