ஆமோஸ் 5 : 1 (ECTA)
மனம் மாறிட அழைப்பு இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்;
ஆமோஸ் 5 : 2 (ECTA)
“இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண் விழுந்துகிடக்கிறாள், இனி எழவேமாட்டாள்; தரையில் தன்னந்தனியளாய்க் கிடக்கின்றாள்; அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை.”
ஆமோஸ் 5 : 3 (ECTA)
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் நூறு பேரே எஞ்சியிருப்பர்; நூறு பேரை அனுப்பிய நகரில் பத்துப் பேரே எஞ்சியிருப்பர்; இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே.”
ஆமோஸ் 5 : 4 (ECTA)
இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
ஆமோஸ் 5 : 5 (ECTA)
ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலில் காலெடுத்து வைக்காதீர்கள்; பெயேர்செபாவுக்குக் கடந்து போகவேண்டாம்; ஏனெனில் கில்கால் உண்மையாகவே நாடுகடத்தப்படும்; பெத்தேல் பாழாக்கப்படும்.
ஆமோஸ் 5 : 6 (ECTA)
ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்; இல்லையேல் அவர் யோசேப்பின் வீட்டின்மேல் தீ மூளச் செய்வார். அந்நெருப்பு அதை விழுங்கிவிடும், பெத்தேலில் அந்நெருப்பை அணைக்கக்கூடியவர் எவருமிரார்.
ஆமோஸ் 5 : 7 (ECTA)
அவர்கள் நீதியை எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்; நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.
ஆமோஸ் 5 : 8 (ECTA)
ஆனால், அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்; காரிருளைக் காலைப்பொழுது ஆகச் செய்பவர்; பகற்பொழுதை இரவு வேளையாய் மாற்றுபவர்; கடல் நீரை அழைத்து நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்; அவரது பெயர் “ஆண்டவர்”. [* யோபு 9:1; 38: 31 ]
ஆமோஸ் 5 : 9 (ECTA)
வலிமை மிக்க தளங்கள்மேல் அவர் அழிவை அனுப்புவதால் அவை அழிவைக் காண்கின்றன.
ஆமோஸ் 5 : 10 (ECTA)
அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு தங்களைக் கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள்; உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.
ஆமோஸ் 5 : 11 (ECTA)
நீங்கள் ஏழைகளை நசுக்கி, அவர்களிடம் தானிய வரியாக வாங்கியதைக் கொண்டு நன்கு செதுக்கிய கற்களால் வீடு கட்டினீர்கள்; அந்த வீடுகளில் நீங்கள் வாழப் போவதில்லை; அருமையான திராட்சைத் தோட்டங்களை அமைத்தீர்கள்; அவை தரும் திராட்சை இரசத்தை நீங்கள் குடிக்கப் போவதில்லை.
ஆமோஸ் 5 : 12 (ECTA)
உங்கள் குற்றங்கள் எவ்வளவு மிகுதியானவை என்றும் உங்கள் பாவங்கள் எத்துணைக் கொடியவை என்றும் நான் அறிவேன்; நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், நகர் வாயிலில் வறியோருக்கு நீதி வழங்க மறுக்கிறீர்கள்.
ஆமோஸ் 5 : 13 (ECTA)
அது கெட்ட காலம் என்பதால், அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.
ஆமோஸ் 5 : 14 (ECTA)
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
ஆமோஸ் 5 : 15 (ECTA)
தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.
ஆமோஸ் 5 : 16 (ECTA)
ஆகையால், படைகளின் கடவுளும் தலைவருமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; “பொதுவிடங்கள் எங்கும் அழுகுரல் கேட்கும், எல்லா வீதிகளிலும், “ஐயோ! ஐயோ!” என்ற புலம்பல் எழும்பும்; வயலில் வேலை செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர்; ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.
ஆமோஸ் 5 : 17 (ECTA)
திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்; ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென்”, என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 5 : 18 (ECTA)
ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புவோரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்? அது ஒளிமிக்க நாளன்று; இருள் சூழ்ந்த நாளாகத் தான் இருக்கும்.
ஆமோஸ் 5 : 19 (ECTA)
அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்!
ஆமோஸ் 5 : 20 (ECTA)
ஆண்டவரின் நாள் ஒளியின் நாள் அன்று; அது இருள் கவிந்தது அல்லவா? வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?
ஆமோஸ் 5 : 21 (ECTA)
“உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. * எசா 1:11-14..
ஆமோஸ் 5 : 22 (ECTA)
எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். * எசா 1:11-14..
ஆமோஸ் 5 : 23 (ECTA)
என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.
ஆமோஸ் 5 : 24 (ECTA)
மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
ஆமோஸ் 5 : 25 (ECTA)
“இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?
ஆமோஸ் 5 : 26 (ECTA)
நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்; அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்; அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.
ஆமோஸ் 5 : 27 (ECTA)
உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்”, என்கிறார் ஆண்டவர்; அவரது பெயர் “படைகளின் கடவுள்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27