ஆமோஸ் 2 : 1 (ECTA)
மோவாபு நாடு ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாக்கினான். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8- 11 ]
ஆமோஸ் 2 : 2 (ECTA)
ஆதலால், மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்; இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில் மோவாபு மடிந்திடுவான். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8- 11 ]
ஆமோஸ் 2 : 3 (ECTA)
அந்நாட்டின் ஆட்சியாளனை அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்; அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்” என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8- 11 ]
ஆமோஸ் 2 : 4 (ECTA)
யூதா நாடு ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவேமாட்டேன்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை புறக்கணித்தார்கள்; அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை; அவர்களுடைய தந்தையர் பின்பற்றிய பொய்த் தெய்வங்கள் அவர்களையும் வஞ்சித்துவிட்டன.
ஆமோஸ் 2 : 5 (ECTA)
ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்; அது எருசலேமின் கோட்டைகளை விழுங்கிவிடும்.”
ஆமோஸ் 2 : 6 (ECTA)
இஸ்ரயேல் நாட்டின்மீது தீர்ப்பு ஆண்டவர் கூறுவது இதுவே: “இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள்.
ஆமோஸ் 2 : 7 (ECTA)
ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்; மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகின்றார்கள்.
ஆமோஸ் 2 : 8 (ECTA)
கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.
ஆமோஸ் 2 : 9 (ECTA)
நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்; மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்துவிட்டேன்; [* இச 3:8- 11 ]
ஆமோஸ் 2 : 10 (ECTA)
மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன்.
ஆமோஸ் 2 : 11 (ECTA)
உங்கள் புதல்வர்களுள் சிலரை இறைவாக்கினராய் உயர்த்தினேன்; உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்; இஸ்ரயேல் மக்களே, இது உண்மையன்றோ?” என்கிறார் ஆண்டவர். [* எண் 6:1-8.. ]
ஆமோஸ் 2 : 12 (ECTA)
ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்; இறைவாக்கினருக்கு “இறைவாக்கு உரைக்கக்கூடாது” என்று கட்டளையிட்டீர்கள்.
ஆமோஸ் 2 : 13 (ECTA)
வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன்.
ஆமோஸ் 2 : 14 (ECTA)
விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது; வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்; வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது.
ஆமோஸ் 2 : 15 (ECTA)
வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான். விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது.
ஆமோஸ் 2 : 16 (ECTA)
அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன்கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16