அப்போஸ்தலர்கள் 24 : 1 (ECTA)
பவுலுக்கு எதிரான வழக்கு ஐந்து நாட்களுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளுநரிடம் முறையிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 24 : 2 (ECTA)
(2-3) தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது: “மாண்புமிகு பெலிக்சு அவர்களே! உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது. உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 24 : 3 (ECTA)
அப்போஸ்தலர்கள் 24 : 4 (ECTA)
இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்; நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 5 (ECTA)
தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்; நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.
அப்போஸ்தலர்கள் 24 : 6 (ECTA)
(6a) திருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம். * 6ஆ ‘நாங்கள் எங்கள் திருச் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். . 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக் கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார்
அப்போஸ்தலர்கள் 24 : 7 (ECTA)
* 6ஆ ‘நாங்கள் எங்கள் திருச் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். . 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக் கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார்
அப்போஸ்தலர்கள் 24 : 8 (ECTA)
8 (8b) நீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும் உண்மை என அறிய முடியும்.” * 6ஆ ‘நாங்கள் எங்கள் திருச் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். . 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக் கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார்; நாங்கள்… பிறப்பித்தார் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது..
அப்போஸ்தலர்கள் 24 : 9 (ECTA)
யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.
அப்போஸ்தலர்கள் 24 : 10 (ECTA)
பெலிக்சின் முன்னிலையில் பவுல் தம் நிலையை விளக்குதல் பவுல் பேசுமாறு ஆளுநர் சைகை காட்ட, அவர் கூறியது: “பல ஆண்டுகளாக நீர் இந்த நாட்டின் நடுவராக இருந்து வருகிறீர் என்பதை நான் அறிந்து நம்பிக்கையோடு என் நிலையை விளக்குகிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 11 (ECTA)
நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
அப்போஸ்தலர்கள் 24 : 12 (ECTA)
நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ, நகரிலோ தொழுகைக்கூடத்திலோ மக்களிடையே கலக மூட்டியதையோ, இவர்கள் யாருமே கண்டதில்லை.
அப்போஸ்தலர்கள் 24 : 13 (ECTA)
இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது.
அப்போஸ்தலர்கள் 24 : 14 (ECTA)
ஆனால், இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன். இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்; திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 15 (ECTA)
நேர்மையாளரும் நேர்மையற்றோரும் உயிர்த்தெழுவர் என்று அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். அதே எதிர்நோக்கைக் கடவுள் எனக்கும் கொடுத்துள்ளார்.
அப்போஸ்தலர்கள் 24 : 16 (ECTA)
அவர்களைப் போல நானும் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 17 (ECTA)
பல ஆண்டுகளுக்குப் பின் என் இனத்தார்க்குப் பண உதவி செய்யவும் பலி செலுத்தவும் நான் இங்கு வந்தேன். [* திப 21:17- 28 ]
அப்போஸ்தலர்கள் 24 : 18 (ECTA)
நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை. [* திப 21:17- 28 ]
அப்போஸ்தலர்கள் 24 : 19 (ECTA)
ஆனால், ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
அப்போஸ்தலர்கள் 24 : 20 (ECTA)
அல்லது நான் தலைமைச் சங்கத்தரால் விசாரிக்கப்பட்டபோது என்னிடம் என்ன குற்றம் கண்டார்களென இங்கிருப்பவர்களாவது எடுத்துச் சொல்லட்டும்.
அப்போஸ்தலர்கள் 24 : 21 (ECTA)
சங்கத்தார் நடுவில் நின்று, ‘இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்’ என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்.” [* திப 23: 6 ]
அப்போஸ்தலர்கள் 24 : 22 (ECTA)
கிறிஸ்தவ நெறியைப் பற்றி மிகத் திட்டவட்டமாக அறிந்திருந்த பெலிக்சு, “ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
அப்போஸ்தலர்கள் 24 : 23 (ECTA)
அதோடு அவர், “பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால், கடுங்காவல் வேண்டாம்; பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்” என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.
அப்போஸ்தலர்கள் 24 : 24 (ECTA)
பவுல் காவலில் வைக்கப்படுதல் சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 24 : 25 (ECTA)
நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, “இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்” என்று கூறினார்.
அப்போஸ்தலர்கள் 24 : 26 (ECTA)
அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்; ஆகையால், அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார்.
அப்போஸ்தலர்கள் 24 : 27 (ECTA)
இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார். பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.
❮
❯