அப்போஸ்தலர்கள் 19 : 1 (ECTA)
எபேசில் பவுல் அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு,
அப்போஸ்தலர்கள் 19 : 2 (ECTA)
அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 19 : 3 (ECTA)
“அவ்வாறெனில், நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” எனப் பவுல் கேட்க, அவர்கள், “நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 19 : 4 (ECTA)
அப்பொழுது பவுல், “யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்” என்றார். [* மத் 3:11; மாற் 1:4,7,8; லூக் 3:4,16; யோவா 1:26, 27 ]
அப்போஸ்தலர்கள் 19 : 5 (ECTA)
இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 6 (ECTA)
பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 7 (ECTA)
அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 8 (ECTA)
பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சிபற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 19 : 9 (ECTA)
சிலர் கடின உள்ளத்தோராய் நம்ப மறுத்து, திரண்டிருந்த மக்கள்முன்னால் இந்நெறியை இகழ்ந்து பேசினர். அவர் அவர்களைவிட்டு விலகித் தம் சீடரைத் தனியே அழைத்துக்கொண்டு 'திரன்னு' மன்றத்தில் நாள்தோறும் விவாதித்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 19 : 10 (ECTA)
இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு நிகழ்ந்தது. ஆசியாவில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் அனைவரும் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 11 (ECTA)
ஸ்கேவாவின் மக்கள் பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 19 : 12 (ECTA)
அவரது உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்; பொல்லாத ஆவிகளும் வெளியேறும். * லூக் 8:44-47; திப 5:15..
அப்போஸ்தலர்கள் 19 : 13 (ECTA)
சுற்றித் திரிந்து பேயோட்டும் யூதர் சிலர் பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள்மீது ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முயன்றனர். “பவுல் அறிவிக்கின்ற இயேசுவின் பெயரால் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்” என்று அவர்கள் கூறிவந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 19 : 14 (ECTA)
ஸ்கேவா என்னும் யூதத் தலைமைக் குருவுக்கு ஏழு மைந்தர்கள் இருந்தார்கள். அவர்கள் இவ்வாறு கூறியபோது
அப்போஸ்தலர்கள் 19 : 15 (ECTA)
பொல்லாத ஆவி அவர்களிடம் மறுமொழியாக, “இயேசுவை எனக்குத் தெரியும்; பவுலையும் எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.
அப்போஸ்தலர்கள் 19 : 16 (ECTA)
பொல்லாத ஆவி பிடித்தவர் அவர்கள்மீது துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாக்கி அனைவரையும் திணறடிக்கவே, அவர்கள் அந்த வீட்டைவிட்டுக் காயமுற்றவராய் ஆடையின்றித் தப்பியோடினர்.
அப்போஸ்தலர்கள் 19 : 17 (ECTA)
எபேசில் குடியிருந்த யூதர், கிரேக்கர் அனைவருக்கும் இது தெரியவந்தது. யாவரையும் அச்சம் ஆட்கொண்டது. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரைப் போற்றிப் பெருமைப்படுத்தினார்கள்.
அப்போஸ்தலர்கள் 19 : 18 (ECTA)
நம்பிக்கை கொண்டோர் பலரும் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 19 (ECTA)
மாயவித்தைகளைச் செய்துவந்த பலரும் தங்கள் நூல்களைக் கொண்டு வந்து அனைவர் முன்பாகவும் அவற்றைச் சுட்டெரித்தனர்; அவற்றின் விலை ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என்று கணக்கிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 20 (ECTA)
இவ்வாறு ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய்ப் பரவி வல்லமையுடன் செயல்பட்டது.
அப்போஸ்தலர்கள் 19 : 21 (ECTA)
எபேசில் கலகம் இவை நடந்தபின்பு பவுல் மாசிதோனியா, அக்காயா வழியாக எருசலேமுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தார்; அதன்பின் உரோமையையும் பார்க்கவேண்டும் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 19 : 22 (ECTA)
எனவே, தம் தொண்டர்களுள் திமொத்தேயு, எரஸ்து என்னும் இருவரையும் மாசிதோனியாவுக்கு அனுப்பிவிட்டு அவர் ஆசியாவில் சிறிது காலம் தங்கினார்.
அப்போஸ்தலர்கள் 19 : 23 (ECTA)
அக்காலத்தில் கிறிஸ்தவ நெறியைக் குறித்து எபேசில் பெருங்கலகம் ஏற்பட்டது.
அப்போஸ்தலர்கள் 19 : 24 (ECTA)
தெமேத்திரியு என்னும் பெயருடைய தட்டான் ஒருவர் அங்கே இருந்தார். அவர் அர்த்தமி கோவிலின் வடிவத்தை வெள்ளியில் செய்வித்து அதனால் கைவினைஞர்களுக்கு மிகுந்த வருவாய் கிடைக்கச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 19 : 25 (ECTA)
இதே தொழில் செய்யும் அனைவரையும் அவர் ஒருங்கிணைத்து, “தோழர்களே, இந்தத் தொழில் நமக்கு நல்ல வருவாயைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
அப்போஸ்தலர்கள் 19 : 26 (ECTA)
எபேசில் மட்டுமின்றி ஏறக்குறைய ஆசியா முழுவதிலுமே, “மனித கையால் செய்யப்பட்டவை தெய்வங்களல்ல” என்று தவறாகக் கூறித் திரளான மக்களை இந்தப் பவுல் நம்பச் செய்து வருகிறார் என்பதை நீங்கள் கேட்கவில்லையா? பார்க்கவில்லையா?
அப்போஸ்தலர்கள் 19 : 27 (ECTA)
இது நமக்கு ஆபத்து விளைவிக்கும்; நம் தொழிலும் மதிப்பற்றுப்போகும். அதோடு பெருந்தேவதையான அர்த்தமியின் கோவில் கூடத் தன் பெயரை இழந்துவிடும். அதுமட்டுமின்றி, ஆசியா முழுவதும், ஏன் உலகமுழுவதுமே, வழிபடுகின்ற நம் தேவதையின் மாண்பும் மங்கிப் போகுமே!” என்றார்.
அப்போஸ்தலர்கள் 19 : 28 (ECTA)
இதைக் கேட்டவர்கள் சீற்றம் நிறைந்தவர்களாய், “எபேசின் அர்த்தமி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.
அப்போஸ்தலர்கள் 19 : 29 (ECTA)
நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் பவுலின் வழித்துணைவர்களாகிய காயு, அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரைப் பிடித்திழுத்துக்கொண்டு ஒருமிக்க அரங்கத்தை நோக்கிப் பாய்ந்தோடிச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 30 (ECTA)
பவுல் மக்கள் கூட்டத்துக்கள் செல்ல விரும்பியும், சீடர்கள் அவரைப் போகவிடவில்லை.
அப்போஸ்தலர்கள் 19 : 31 (ECTA)
அவருக்கு நண்பராயிருந்த ஆசிய ஆட்சியாளருள் சிலர் அவரிடம் ஆள் அனுப்பி அரங்கத்திற்குள் செல்லத் துணிய வேண்டாமெனக்கேட்டுக் கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 19 : 32 (ECTA)
சபையில் குழப்பம் ஏற்பட்டிருந்ததால் சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கத்திக் கொண்டிருந்தனர். எதற்காகக் கூடி வந்திருக்கிறோம் என்றே பலருக்குத் தெரியவில்லை.
அப்போஸ்தலர்கள் 19 : 33 (ECTA)
கூடியிருந்தவர்கள் அலக்சாந்தரிடம் இது பற்றிப் பேசினர். யூதர்கள் அவரை முன்னுக்குத் தள்ள, அலக்சாந்தர் கையால் சைகை காட்டி மக்களிடம் நிலைமையை விளக்க விரும்பினார்.
அப்போஸ்தலர்கள் 19 : 34 (ECTA)
அவர் ஒரு யூதர் என்பதை அறிந்து மக்கள் அனைவரும் ஒரே குரலில் இரண்டு மணி நேரம் “எபேசின் அர்த்தமி வாழ்க” எனக் கத்தினர்.
அப்போஸ்தலர்கள் 19 : 35 (ECTA)
நகர ஆணையர் மக்கள் கூட்டத்தினரை அமைதிப்படுத்தி, “எபேசியரே! பெருந்தேவதையான அர்த்தமியின் கோவிலும் வானிலிருந்து விழுந்த அதன் சிலையும் எபேசு நகரில்தான் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறியாதோர் யார்?
அப்போஸ்தலர்கள் 19 : 36 (ECTA)
இதை எவரும் மறுக்க முடியாது. எனவே, நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும், கண்மூடித்தனமாக எதையும் செய்து விடாதீர்கள்.
அப்போஸ்தலர்கள் 19 : 37 (ECTA)
ஏனென்றால், நீங்கள் இழுத்து வந்திருக்கும் இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களோ நம்முடைய தேவதையைப் பழித்துரைப்பவர்களோ அல்ல.
அப்போஸ்தலர்கள் 19 : 38 (ECTA)
எனவே, தெமேத்திரியுக்கும் அவரோடுள்ள கைவினைஞர்களுக்கும் யார் மீதாவது வழக்கு உண்டானால் அவர்கள் நீதிமன்றம் கூடும் நாள்களில் ஆட்சியாளரிடம் அவர்களை அழைத்துச்சென்று, அவர்களைப்பற்றி முறையிடட்டும்.
அப்போஸ்தலர்கள் 19 : 39 (ECTA)
இதற்கு மேல் எதாவது நீங்கள் விரும்பினால் சட்டத்தின் அடிபடையில் கூடுகின்ற சபையில் அதற்கான விளக்கம் பெறலாம்.
அப்போஸ்தலர்கள் 19 : 40 (ECTA)
(40-41) இன்று நடந்ததைப் பார்த்தால் இக்கலகத்தை நாம் செய்ததாக நம்மீது குற்றம் சுமத்தப்படும் ஆபத்து உள்ளது. மேலும், இந்த கலகத்துக்குக் காரணம் எதுவுமில்லை; காரணம் காட்டவும் நம்மால் முடியாது” என்று கூறி சபையைக் கலைத்து விட்டார்.
அப்போஸ்தலர்கள் 19 : 41 (ECTA)
❮
❯