அப்போஸ்தலர்கள் 14 : 1 (ECTA)
இக்கோனியாவில் பவுலும் பர்னபாவும் இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது. பவுலும் பர்னபாவும் யூதருடைய தொழுகைக் கூடத்திற்குச் சென்று இவ்வாறே பேசியபோது, யூதரிலும், கிரேக்கரிலும் பெருந் திரளானோர் நம்பிக்கை கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 2 (ECTA)
ஆனால், நம்பாத யூதர், சகோதரருக்கு எதிராகப் பிற இனத்தவரைத் தூண்டிவிட்டு அவர்கள் உள்ளத்தைக் கெடுத்தனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 3 (ECTA)
ஆயினும், அவர்கள் அங்குப் பல நாள் தங்கி ஆண்டவரைப்பற்றித் துணிவுடன் பேசினார்கள். ஆண்டவரும் தம் அருள் செய்திக்குச் சான்றாகப் பல அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர்கள் வழியாகச் செய்தார். [* 1 தெச 2:14; மாற் 16:17- 20 ]
அப்போஸ்தலர்கள் 14 : 4 (ECTA)
திரண்டிருந்த நகரமக்கள் இரண்டாகப் பிரித்தனர். ஒரு பிரிவினர் யூதரோடும், மற்றப் பிரிவினர் திருத்தூதரோடும், சேர்ந்துகொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 5 (ECTA)
பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். [* 2 திமொ 3: 11 ]
அப்போஸ்தலர்கள் 14 : 6 (ECTA)
இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 7 (ECTA)
அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 8 (ECTA)
லிஸ்திராவில் பவுலும் பர்னபாவும் லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து
அப்போஸ்தலர்கள் 14 : 9 (ECTA)
பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து
அப்போஸ்தலர்கள் 14 : 10 (ECTA)
உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.
அப்போஸ்தலர்கள் 14 : 11 (ECTA)
பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர்.
அப்போஸ்தலர்கள் 14 : 12 (ECTA)
அவர்கள் பர்னபாவைச் “சேயுசு” என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை “எர்மசு” என்றும் அழைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 13 (ECTA)
நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார்.
அப்போஸ்தலர்கள் 14 : 14 (ECTA)
இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது:
அப்போஸ்தலர்கள் 14 : 15 (ECTA)
“மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 14 : 16 (ECTA)
கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்; [* திபா 147: 20 ]
அப்போஸ்தலர்கள் 14 : 17 (ECTA)
என்றாலும், அவர் தம்மைப் பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில், அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.”
அப்போஸ்தலர்கள் 14 : 18 (ECTA)
இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.
அப்போஸ்தலர்கள் 14 : 19 (ECTA)
அப்போது அந்தியோக்கியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்து விட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்போட்டார்கள். * 2 கொரி 11:25; 2 திமொ 3:11..
அப்போஸ்தலர்கள் 14 : 20 (ECTA)
சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போஸ்தலர்கள் 14 : 21 (ECTA)
சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்குத் திரும்ப வருதல் அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 22 (ECTA)
அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 23 (ECTA)
அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்;
அப்போஸ்தலர்கள் 14 : 24 (ECTA)
பின்பு, பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 25 (ECTA)
பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்;
அப்போஸ்தலர்கள் 14 : 26 (ECTA)
அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 27 (ECTA)
அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 28 (ECTA)
அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28