அப்போஸ்தலர்கள் 13 : 1 (ECTA)
4.உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல்— முதல் தூதுரைப் பயணம் —
பர்னபாவும், சவுலும் பணிக்கென அனுப்பப்படுதல் அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 2 (ECTA)
அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 3 (ECTA)
அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 4 (ECTA)
சைப்பிரசில் திருத்தூதர் இவ்வாறு, தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 5 (ECTA)
அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 6 (ECTA)
அவர்கள் பாப்போவரை அந்தத்தீவு முழுவதும் சென்றார்கள்; அங்குப் பாரேசு எனும் பெயருடைய போலி இறைவாக்கினனான யூத மந்திரவாதி ஒருவனைக் கண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 7 (ECTA)
அவன் அத்தீவின் ஆட்சியாளரான செர்கியு பவுலைப் சேர்ந்தவன். அறிஞரான அந்த ஆட்சியாளர் கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்பிப் பர்னபாவையும் சவுலையும் தம்மிடம் வரவழைத்தார்.
அப்போஸ்தலர்கள் 13 : 8 (ECTA)
எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். — எலிமா என்றாலே மந்திரவாதி என்பது தான் பொருள். —
அப்போஸ்தலர்கள் 13 : 9 (ECTA)
அப்போது பவுல் என்னும் சவுல் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவனை உற்றுப் பார்த்து,
அப்போஸ்தலர்கள் 13 : 10 (ECTA)
“அனைத்து வஞ்சகத்துக்கும் உறைவிடமானவனே, பழிபாவம் எதற்கும் அஞ்சாதவனே, அலகையின் மகனே, நீதி நேர்மை அனைத்துக்கும் பகைவனே, ஆண்டவரின் நேரிய வழியிலிருந்து திசைதிருப்புவதை நிறுத்தமாட்டாயோ! [* யோவா 8: 44 ]
அப்போஸ்தலர்கள் 13 : 11 (ECTA)
இதோ, இப்போதே ஆண்டவரது தண்டனை உன்மேல் வரப்போகிறது. குறிப்பிட்ட காலம்வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்; கதிரவனைக் காணமாட்டாய்" என்றார். உடனே அவன் பார்வை மங்கியது; இருள் சூழ்ந்தது. அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான்.
அப்போஸ்தலர்கள் 13 : 12 (ECTA)
நடந்ததைக் கண்ட ஆட்சியாளர் ஆண்டவரின் போதனையைப் பற்றி வியப்பில் ஆழ்ந்தவராய் அவர் மீது நம்பிக்கை கொண்டார். [* மத் 22:33; லூக் 4: 32 ]
அப்போஸ்தலர்கள் 13 : 13 (ECTA)
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா நகரில் பவுலும் பர்னபாவும் பின்பு, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 14 (ECTA)
அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 15 (ECTA)
திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக் கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆளனுப்பி, “சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 16 (ECTA)
அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 17 (ECTA)
இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அந்நியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்; [* விப 1:7; 12: 51 ]
அப்போஸ்தலர்கள் 13 : 18 (ECTA)
நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். [* எண் 14:34; இச 1: 31 ]
அப்போஸ்தலர்கள் 13 : 19 (ECTA)
(19-20) அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார். [* இச 7:1; யோசு 14: 1 ]
அப்போஸ்தலர்கள் 13 : 20 (ECTA)
[* நீதி 2:16; 1 சாமு 3: 20 ]
அப்போஸ்தலர்கள் 13 : 21 (ECTA)
பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். [* 1 சாமு 8:5; 10: 21 ]
அப்போஸ்தலர்கள் 13 : 22 (ECTA)
பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து “ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்” என்று சான்று பகர்ந்தார். [* 1 சாமு 13:14; 16:12; திபா 89: 20 ]
அப்போஸ்தலர்கள் 13 : 23 (ECTA)
தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 13 : 24 (ECTA)
அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். [* மாற் 1:4; லூக் 3: 3 ]
அப்போஸ்தலர்கள் 13 : 25 (ECTA)
யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் “நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை” என்று கூறினார். [* மத் 3:11; மாற் 1:7; லூக் 3:10; யோவா 1:20, 27 ]
அப்போஸ்தலர்கள் 13 : 26 (ECTA)
சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர்கள் 13 : 27 (ECTA)
எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின.
அப்போஸ்தலர்கள் 13 : 28 (ECTA)
சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். [* மத் 27:22,23; மாற் 15:13,14; லூக் 23:21-23; யோவா 19: 15 ]
அப்போஸ்தலர்கள் 13 : 29 (ECTA)
மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். [* மத் 27:57-61; மாற் 15:42-47; லூக் 23:50-56; யோவா 19:38- 42 ]
அப்போஸ்தலர்கள் 13 : 30 (ECTA)
ஆனால், இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 31 (ECTA)
அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள்தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். [* திப 1: 2 ]
அப்போஸ்தலர்கள் 13 : 32 (ECTA)
இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி.
அப்போஸ்தலர்கள் 13 : 33 (ECTA)
இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், “நீரே என் மகன், இன்று
நான் உம்மை ஈன்றெடுத்தேன்” என்று எழுதப்பட்டுள்ளது. [* திபா 2: 7 ]
அப்போஸ்தலர்கள் 13 : 34 (ECTA)
மேலும், இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதுபற்றித்தான் “நான் தாவீதுக்கு அருளிய தூய, மாறாத வாக்குறுதிகளை உங்களுக்கும் தருவேன்” என்றும் கூறியிருக்கிறார். [* எசா 55: 3 ]
அப்போஸ்தலர்கள் 13 : 35 (ECTA)
எனவே, இன்னோர் இடத்தில் அவர், “உம் தூயவரை
படுகுழியைக் காணவிடமாட்டீர்” என்றும் சொல்லியிருக்கிறார். [* திபா 16: 10 ]
அப்போஸ்தலர்கள் 13 : 36 (ECTA)
ஏனென்றால், தாவீது தம் காலத்து மக்களிடையே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி இறந்தார். அவர் தம் மூதாதையருடன் சேர்க்கப்பட்டார்; இவ்வாறு அழிவுக்குள்ளானார்.
அப்போஸ்தலர்கள் 13 : 37 (ECTA)
ஆனால், கடவுளால் எழுப்பப்பட்டவரோ அழிவுக்குட்படவில்லை.
அப்போஸ்தலர்கள் 13 : 38 (ECTA)
எனவே, சகோதரரே, இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்; இவர் வழியாகவே உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடியாது.
அப்போஸ்தலர்கள் 13 : 39 (ECTA)
ஆனால், நம்பிக்கை கொள்ளும் அனைவரும் இவர்வழியாக விடுவிக்கப்படுகின்றனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 40 (ECTA)
(40-41) ஆகவே, ‘இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள், வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்; ஏனெனில், உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன். யார் விளக்கிச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!’ என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.” [* அப 1: 5 ]
அப்போஸ்தலர்கள் 13 : 41 (ECTA)
அப்போஸ்தலர்கள் 13 : 42 (ECTA)
அவர்கள் வெளியே சென்றபோது, அடுத்த ஓய்வு நாளிலும் இவை பற்றித் தங்களோடு பேசும்படி மக்கள் அவர்களை வேண்டினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 43 (ECTA)
தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 44 (ECTA)
அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 45 (ECTA)
மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 46 (ECTA)
பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே, நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம்.
அப்போஸ்தலர்கள் 13 : 47 (ECTA)
ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள். [* எசா 42: 6 ]
அப்போஸ்தலர்கள் 13 : 48 (ECTA)
இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 49 (ECTA)
அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது.
அப்போஸ்தலர்கள் 13 : 50 (ECTA)
ஆனால், யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 51 (ECTA)
அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். * லேவி 12:34..
அப்போஸ்தலர்கள் 13 : 52 (ECTA)
சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
❮
❯