2 தீமோத்தேயு 2 : 1 (ECTA)
கிறிஸ்துவின் நல்லதொரு படைவீரன் என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு.
2 தீமோத்தேயு 2 : 2 (ECTA)
சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.
2 தீமோத்தேயு 2 : 3 (ECTA)
கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள்.
2 தீமோத்தேயு 2 : 4 (ECTA)
படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபடமாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!
2 தீமோத்தேயு 2 : 5 (ECTA)
விளையாட்டு வீரர் எவரும் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும்.
2 தீமோத்தேயு 2 : 6 (ECTA)
நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளரே விளைச்சலில் முதல் பங்கு பெற வேண்டும்.
2 தீமோத்தேயு 2 : 7 (ECTA)
நான் கூறுபவற்றைக் கருத்தில் கொள். ஆண்டவர் உனக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறமையைத் தருவாராக.
2 தீமோத்தேயு 2 : 8 (ECTA)
தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள்.
2 தீமோத்தேயு 2 : 9 (ECTA)
இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால், கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.
2 தீமோத்தேயு 2 : 10 (ECTA)
தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
2 தீமோத்தேயு 2 : 11 (ECTA)
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;
2 தீமோத்தேயு 2 : 12 (ECTA)
அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். * மத் 10:33; லூக் 12:9..
2 தீமோத்தேயு 2 : 13 (ECTA)
நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.’ இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
2 தீமோத்தேயு 2 : 14 (ECTA)
3.தவறான போதனை குறித்து அறிவுரைகடவுளுக்கு ஏற்புடைய பணியாளர் வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு.
2 தீமோத்தேயு 2 : 15 (ECTA)
நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.
2 தீமோத்தேயு 2 : 16 (ECTA)
உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு; ஏனெனில், அதனால் அவர்கள் மேன்மேலும் இறைப்பற்று அற்றவர்களாவார்கள்.
2 தீமோத்தேயு 2 : 17 (ECTA)
அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.
2 தீமோத்தேயு 2 : 18 (ECTA)
உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்; சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள்.
2 தீமோத்தேயு 2 : 19 (ECTA)
கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் ‘ஆண்டவர் தம்முடையோரை அறிவார்’ என்றும், ‘ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
2 தீமோத்தேயு 2 : 20 (ECTA)
ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை; சில மதிப்பற்றவை.
2 தீமோத்தேயு 2 : 21 (ECTA)
ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்; தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.
2 தீமோத்தேயு 2 : 22 (ECTA)
எனவே, நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.
2 தீமோத்தேயு 2 : 23 (ECTA)
மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து, அவற்றை விட்டுவிடு.
2 தீமோத்தேயு 2 : 24 (ECTA)
ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்; அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும்,
2 தீமோத்தேயு 2 : 25 (ECTA)
மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து மனம் மாறக் கடவுள் அருள்கூரலாம்.
2 தீமோத்தேயு 2 : 26 (ECTA)
அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26