2 தெசலோனிக்கேயர் 1 : 1 (ECTA)
1.முன்னுரைவாழ்த்து நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்க திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: * திப 17:1..
2 தெசலோனிக்கேயர் 1 : 2 (ECTA)
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
2 தெசலோனிக்கேயர் 1 : 3 (ECTA)
2.புகழாரம்தீர்ப்பு நாள் சகோதர சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது; நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது.
2 தெசலோனிக்கேயர் 1 : 4 (ECTA)
ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்; உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 1 : 5 (ECTA)
இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவையனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்.
2 தெசலோனிக்கேயர் 1 : 6 (ECTA)
(6-7) ஏனெனில் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும் துன்புறுத்தப்படும் உங்களுக்குத் துயர் நீக்கி அமைதியையும் எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றோ! நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது இப்படி நிகழும்.
2 தெசலோனிக்கேயர் 1 : 7 (ECTA)
2 தெசலோனிக்கேயர் 1 : 8 (ECTA)
அப்பொழுது அவர் தீப்பிழம்பின் நடுவே தோன்றி, கடவுளை அறியாதவர்களையும் நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார்.
2 தெசலோனிக்கேயர் 1 : 9 (ECTA)
இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது, அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.
2 தெசலோனிக்கேயர் 1 : 10 (ECTA)
அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப்புகழ்வர்; நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதினால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்.
2 தெசலோனிக்கேயர் 1 : 11 (ECTA)
இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக!
2 தெசலோனிக்கேயர் 1 : 12 (ECTA)
இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12