2 சாமுவேல் 1 : 1 (ECTA)
{சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்} [PS] சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார்.
2 சாமுவேல் 1 : 2 (ECTA)
மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
2 சாமுவேல் 1 : 3 (ECTA)
“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான்.[PE]
2 சாமுவேல் 1 : 4 (ECTA)
[PS] “என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான்.
2 சாமுவேல் 1 : 5 (ECTA)
“சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?” என்று தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.[PE]
2 சாமுவேல் 1 : 6 (ECTA)
[PS] அதற்கு அந்த இளைஞன், “நான் தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
2 சாமுவேல் 1 : 7 (ECTA)
அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். ‘இதோ இருக்கிறேன்’ என்று நான் கூறினேன். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6 ]
2 சாமுவேல் 1 : 8 (ECTA)
‘யார் நீ?’ என்று அவர் என்னை வினவ, ‘நான் ஓர் அமலேக்கியன்’ என்று பதிலளித்தேன். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6 ]
2 சாமுவேல் 1 : 9 (ECTA)
‘என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில், மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால், என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் என்னிடம் கூறினார். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6 ]
2 சாமுவேல் 1 : 10 (ECTA)
நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில், விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினார். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6 ]
2 சாமுவேல் 1 : 11 (ECTA)
தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6 ]
2 சாமுவேல் 1 : 12 (ECTA)
சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.[PE]
2 சாமுவேல் 1 : 13 (ECTA)
[PS] தாவீது தமக்குச் செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழி கூறினான்.[PE]
2 சாமுவேல் 1 : 14 (ECTA)
[PS] “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?” என்று தாவீது அவனைக் கேட்டார்.
2 சாமுவேல் 1 : 15 (ECTA)
பின்பு, தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டு” என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.
2 சாமுவேல் 1 : 16 (ECTA)
“உன் இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என்று உன் வாயே உனக்கு எதிராகச் சான்று சொல்லிவிட்டது” என்று தாவீது அவனை நோக்கிக் கூறினார்.[PE]
2 சாமுவேல் 1 : 17 (ECTA)
{சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்} [PS] பிறகு, தாவீது சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார்.
2 சாமுவேல் 1 : 18 (ECTA)
“யூதாவின் மக்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்று யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள ‘வில்லின் பாடல்’:
2 சாமுவேல் 1 : 19 (ECTA)
[QS][SS] ‘இஸ்ரயேல்! உனது மாட்சி[SE][SS] உன் மலைகளிலே மாண்டு[SE][SS] கிடக்கின்றது![SE][SS] மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! [* யோசு 10:13.[QE] ] [SE][QE]
2 சாமுவேல் 1 : 20 (ECTA)
[QS][SS] காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்;[SE][SS] அஸ்கலோன் வீதிகளில் இதை[SE][SS] அறிவிக்க வேண்டாம்;[SE][SS] ஏனெனில், பெலிஸ்தியரின்[SE][SS] புதல்வியர் அகமகிழக்கூடாது;[SE][SS] விருத்தசேதனமற்றோரின்[SE][SS] புதல்வியர் ஆர்ப்பரிக்கக் கூடாது.[SE][QE]
2 சாமுவேல் 1 : 21 (ECTA)
[QS][SS] கில்போவா மலைகளே![SE][SS] பனியோ மழையோ[SE][SS] உம்மீது பொழியாதிருப்பதாக![SE][SS] வயல்கள் முதற்கனிகளைத்[SE][SS] தராதிருப்பனவாக![SE][SS] ஏனெனில், வீரர்களின் கேடயங்கள்[SE][SS] தீட்டுப்பட்டனவே![SE][SS] சவுலின் கேடயமும் எண்ணெயால்[SE][SS] இனி மெருகு பெறாதே![SE][QE]
2 சாமுவேல் 1 : 22 (ECTA)
[QS][SS] வீழ்த்தப்பட்டோரின்[SE][SS] இரத்தத்தினின்றும்[SE][SS] வீரர்களின் கொழுப்பினின்றும்[SE][SS] யோனத்தானின் அம்பு[SE][SS] பின்வாங்கியது இல்லை![SE][SS] சவுலின் வாள் வெறுமையாய்த்[SE][SS] திரும்பியதும் இல்லை![SE][QE]
2 சாமுவேல் 1 : 23 (ECTA)
[QS][SS] சவுல்! யோனத்தான்![SE][SS] அன்புடையார், அருளுடையார்![SE][SS] வாழ்விலும் சாவிலும்[SE][SS] இணைபிரியார்! கழுகினும்[SE][SS] அவர்கள் விரைந்து செல்வர்![SE][SS] அரியினும் அவர்கள்[SE][SS] வலிமைமிக்கோர்![SE][QE]
2 சாமுவேல் 1 : 24 (ECTA)
[QS][SS] இஸ்ரயேல் புதல்வியரே![SE][SS] சவுலுக்காக அழுங்கள்![SE][SS] செந்நிற மென்துகிலால் உங்களை[SE][SS] உடுத்தியவர் அவரே![SE][SS] பொன்னின் நகைகளினால் உம்[SE][SS] உடைகளை ஒளிரச் செய்தாரே![SE][QE]
2 சாமுவேல் 1 : 25 (ECTA)
[QS][SS] போர் முனையில் வீரர் எங்ஙனம்[SE][SS] வீழ்ந்துபட்டனர்![SE][SS] உன் மலைகளிலே யோனத்தான்[SE][SS] மாண்டு கிடக்கின்றான்![SE][QE]
2 சாமுவேல் 1 : 26 (ECTA)
[QS][SS] சகோதரன் யோனத்தான்! உனக்காக[SE][SS] என் உளம் உடைந்து போனது![SE][SS] எனக்கு உவகை அளித்தவன் நீ![SE][SS] என் மீது நீ பொழிந்த பேரன்பை[SE][SS] என்னென்பேன்![SE][SS] அது மகளிரின் காதலையும்[SE][SS] மிஞ்சியது அன்றோ![SE][QE]
2 சாமுவேல் 1 : 27 (ECTA)
[QS][SS] மாவீரர் எவ்வாறு மடிந்தனர்![SE][SS] போர்க்கலன்கள் எங்ஙனம்[SE][SS] அழிந்தன!”[SE][PE]
❮
❯