2 இராஜாக்கள் 24 : 1 (ECTA)
அவனது ஆட்சிக் காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடிபணிந்திருந்தான்; பின்பு, மனத்தை மாற்றிக்கொண்டு அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். [* எரே 25:1-38; தானி 1:1- 2 ]
2 இராஜாக்கள் 24 : 2 (ECTA)
ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாபு, அம்மோன் ஆகிய மக்களினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன்மீது ஏவிவிட்டார். அவர்தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்கின்படி யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.
2 இராஜாக்கள் 24 : 3 (ECTA)
உண்மையாகவே ஆண்டவரின் கட்டளைப்படி மனாசேயின் பாவங்களை முன்னிட்டும், அவன் செய்த எல்லாக் காரியங்களை முன்னிட்டும், அவர் அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளவிடுமாறு, இவையெல்லாம் யூதாவுக்கு நிகழ்ந்தன.
2 இராஜாக்கள் 24 : 4 (ECTA)
மேலும், அவன் குற்றமற்றவர்களின் குருதியைச் சிந்தியதாலும், எருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதாலும், ஆண்டவர் அவனை மன்னிக்க மறுத்துவிட்டார்.
2 இராஜாக்கள் 24 : 5 (ECTA)
யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
2 இராஜாக்கள் 24 : 6 (ECTA)
யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.
2 இராஜாக்கள் 24 : 7 (ECTA)
எகிப்திய மன்னன் மீண்டும் தன் நாட்டை விட்டுப் போருக்கென வெளிவரவில்லை. ஏனெனில், எகிப்திய நதிமுதல் யூப்பரத்தீசு ஆறுவரை எகிப்திய மன்னன் கைவசம் இருந்த அனைத்தையும் பாபிலோனிய மன்னன் கைப்பற்றிக்கொண்டான்.
2 இராஜாக்கள் 24 : 8 (ECTA)
யூதா அரசன் யோயாக்கின்
(2 குறி 36:9-10) யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.
2 இராஜாக்கள் 24 : 9 (ECTA)
யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
2 இராஜாக்கள் 24 : 10 (ECTA)
அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.
2 இராஜாக்கள் 24 : 11 (ECTA)
அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான்.
2 இராஜாக்கள் 24 : 12 (ECTA)
எனவே, யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான். [* எரே 22:24-30; 24:1-10; 29:1- 2 ]
2 இராஜாக்கள் 24 : 13 (ECTA)
பின்பு, அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டுதுண்டாக்கினான்.
2 இராஜாக்கள் 24 : 14 (ECTA)
மேலும், அவன் எருசலேம் முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை.
2 இராஜாக்கள் 24 : 15 (ECTA)
மேலும், அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான். [* எசே 17: 12 ]
2 இராஜாக்கள் 24 : 16 (ECTA)
மேலும், வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும் போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
2 இராஜாக்கள் 24 : 17 (ECTA)
யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் “செதேக்கியா” என்று மாற்றினான். [* எரே 37:1; எசே 17: 13 ]
2 இராஜாக்கள் 24 : 18 (ECTA)
யூதாவின் அரசன் செதேக்கியா
(2 குறி 36:11-12; எரே 52:1-3) செதேக்கியா அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோராண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவன் தாய். [* எரே 27:1-22; 28:1- 17 ]
2 இராஜாக்கள் 24 : 19 (ECTA)
யோயாக்கிம் செய்ததுபோல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.
2 இராஜாக்கள் 24 : 20 (ECTA)
ஆண்டவர், எருசலேமையும் யூதாவையும் தம்முன்னின்று தள்ளிவிடும் அளவுக்கு, அவற்றின் மீது சினம் கொண்டார். மேலும், செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். * எசே 17:15..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20