2 இராஜாக்கள் 17 : 1 (ECTA)
இஸ்ரயேல் அரசன் ஓசேயா யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 இராஜாக்கள் 17 : 2 (ECTA)
அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான். ஆயினும், முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்களைப்போல் அவ்வளவு தீயவனாக இல்லை.
2 இராஜாக்கள் 17 : 3 (ECTA)
அசீரிய மன்னன் சல்மனேசர் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வரவே, ஓசேயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தான்.
2 இராஜாக்கள் 17 : 4 (ECTA)
ஆனால், இடையில் ஓசேயா எகிப்திய மன்னனான சோவிடம் உதவி கேட்டுத் தூதனுப்பியதோடு, அசீரியாவுக்கு ஆண்டுதோறும் செலுத்தி வந்த கப்பத்தையும் நிறுத்திக்கொண்டான். இதை அறிந்த சல்மனேசர் ஓசேயாவைப் பிடித்துச் சிறையிலிட்டான்.
2 இராஜாக்கள் 17 : 5 (ECTA)
சமாரியாவின் வீழ்ச்சி பின்னர் அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான்.
2 இராஜாக்கள் 17 : 6 (ECTA)
ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
2 இராஜாக்கள் 17 : 7 (ECTA)
ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 8 (ECTA)
மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 9 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்; மேலும், காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்;
2 இராஜாக்கள் 17 : 10 (ECTA)
உயர் குன்றுகளிலும், பசுமையான மரங்களின் அடியிலும், நடுகற்களையும், அசேராக் கம்பங்களையும் அமைத்துக் கொண்டனர். [* 1 அர 14: 23 ]
2 இராஜாக்கள் 17 : 11 (ECTA)
அங்கு அவர்கள் தூபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
2 இராஜாக்கள் 17 : 12 (ECTA)
‘இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது’ என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 13 (ECTA)
ஆயினும், ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.”
2 இராஜாக்கள் 17 : 14 (ECTA)
ஆனால், அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்;
2 இராஜாக்கள் 17 : 15 (ECTA)
ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; ‘வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது’ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 16 (ECTA)
தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்; இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்; [* 1 அர 12: 28 ]
2 இராஜாக்கள் 17 : 17 (ECTA)
தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர். [* இச 18: 10 ]
2 இராஜாக்கள் 17 : 18 (ECTA)
எனவே, ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 19 (ECTA)
யூதா குலத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, இஸ்ரயேலின் விதிமுறைகளைப் பின்பற்றி வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 20 (ECTA)
எனவே, ஆண்டவர் இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரையும் கைவிட்டு, அவர்களை ஒடுக்கி, கொள்ளைக்காரரின் கையில் ஒப்புவித்து, தமது திருமுன்னின்று தள்ளிவிட்டார்.
2 இராஜாக்கள் 17 : 21 (ECTA)
அவர் இஸ்ரயேலைத் தாவீதின் மரபினின்று வெட்டிப் பிரித்தபோது நெபாற்றின் மகன் எரொபவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டனர். எரொபவாம் இஸ்ரயேலர் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து, அவர்களைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.
2 இராஜாக்கள் 17 : 22 (ECTA)
இவ்வாறு, எரொபவாம் நடந்த பாவ வழிகள் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.
2 இராஜாக்கள் 17 : 23 (ECTA)
ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே, இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
2 இராஜாக்கள் 17 : 24 (ECTA)
அசீரியர் இஸ்ரயேலில் குடியேறுதல் பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் ஆகியவற்றினின்று அசீரிய மன்னன் ஆள்களைக் கொண்டு வந்து, இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியா நகர்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியாவை உரிமையாகக் கொண்டு அதன் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 25 (ECTA)
அவர்கள் அங்கு வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன.
2 இராஜாக்கள் 17 : 26 (ECTA)
எனவே, அசீரிய மன்னனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: “நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே, அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில், அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது.
2 இராஜாக்கள் 17 : 27 (ECTA)
எனவே, அசீரியா மன்னன், “நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
2 இராஜாக்கள் 17 : 28 (ECTA)
அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான்
2 இராஜாக்கள் 17 : 29 (ECTA)
ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.
2 இராஜாக்கள் 17 : 30 (ECTA)
பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,
2 இராஜாக்கள் 17 : 31 (ECTA)
அவ்வியர் நிபுகசு, தர்த்தாக்குச் சிலைகளையும் செய்து வைத்துக் கொண்டனர். மேலும், செபர்வயர் தம் நாட்டுத் தெய்வங்களான அதிரம் மெலக்கு, அனம் மெலக்கிற்குத் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டு பலி கொடுத்தனர்.
2 இராஜாக்கள் 17 : 32 (ECTA)
அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். ஆயினும், தொழுகை மேடுகளில் பணிபுரியத் தங்களுக்குள் அர்ச்சகர்களை நியமித்துக்கொண்டனர்.
2 இராஜாக்கள் 17 : 33 (ECTA)
அவர்கள், ஆண்டவரை வழிபட்டுவந்த போதிலும், எங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்களோ அங்கிருந்த வழக்கப்படியே தம்தம் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 34 (ECTA)
இன்றுவரை அவர்கள் தங்கள் முன்னைய வழக்கத்தையே கைக்கொண்டுள்ளனர். ஆண்டவரிடம் அவர்கள் அச்சம் கொள்வதில்லை; மேலும், ஆண்டவரால் ‘இஸ்ரயேல்’ என்று பெயரிடப்பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை. [* தொநூ 32:28; 35: 10 ]
2 இராஜாக்கள் 17 : 35 (ECTA)
ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: “வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்; அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்; அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம். [* விப 20:5; இச 5: 9 ]
2 இராஜாக்கள் 17 : 36 (ECTA)
ஆனால், உங்களைப் பேராற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த ஆண்டவருக்கு மட்டுமே நீங்கள் அஞ்ச வேண்டும். அவரையே வணங்கி வழிபட வேண்டும். அவருக்கே பலி செலுத்த வேண்டும். * இச 6:30..
2 இராஜாக்கள் 17 : 37 (ECTA)
அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
2 இராஜாக்கள் 17 : 38 (ECTA)
நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறவாதீர்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
2 இராஜாக்கள் 17 : 39 (ECTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.”
2 இராஜாக்கள் 17 : 40 (ECTA)
ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர்.
2 இராஜாக்கள் 17 : 41 (ECTA)
அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்தபோதிலும், தங்கள் தெய்வச் சிலைகளையும் வணங்கி வந்தனர். இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவர்கள் மூதாதையரைப் போலவே செய்து வருகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41