2 நாளாகமம் 4 : 1 (ECTA)
திருக்கோவிலுக்கான பொருள்கள்
(1 அர 7:23-51) சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம். [* விப 27:1- 2 ]
2 நாளாகமம் 4 : 2 (ECTA)
மேலும், கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.
2 நாளாகமம் 4 : 3 (ECTA)
அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.
2 நாளாகமம் 4 : 4 (ECTA)
அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது.
2 நாளாகமம் 4 : 5 (ECTA)
தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.
2 நாளாகமம் 4 : 6 (ECTA)
கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச்செய்து, ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றில் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் ‘கடல்’ பயன்படுத்தப்பட்டது. [* விப 30:17- 21 ]
2 நாளாகமம் 4 : 7 (ECTA)
மேலும், அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; [* விப 25:31- 40 ]
2 நாளாகமம் 4 : 8 (ECTA)
பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்; * விப 25:23-30..
2 நாளாகமம் 4 : 9 (ECTA)
குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்; முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்;
2 நாளாகமம் 4 : 10 (ECTA)
‘கடலை’ வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார்.
2 நாளாகமம் 4 : 11 (ECTA)
ஈராம் பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார்.
2 நாளாகமம் 4 : 12 (ECTA)
அவையாவன: இரு தூண்கள், இரு தூண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், தூண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள்,
2 நாளாகமம் 4 : 13 (ECTA)
அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன.
2 நாளாகமம் 4 : 14 (ECTA)
மேலும், அவன் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள்,
2 நாளாகமம் 4 : 15 (ECTA)
ஒரு ‘கடல்’. அதன்கீழ்ப் பன்னிரு காளைகள்,
2 நாளாகமம் 4 : 16 (ECTA)
பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள். ஈராம்-அபி ஆண்டவரின் இல்லத்திக்கு வேண்டிய பாத்திரங்ளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.
2 நாளாகமம் 4 : 17 (ECTA)
அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார்.
2 நாளாகமம் 4 : 18 (ECTA)
சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா; அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது.
2 நாளாகமம் 4 : 19 (ECTA)
சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும்,
2 நாளாகமம் 4 : 20 (ECTA)
திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்;
2 நாளாகமம் 4 : 21 (ECTA)
அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்;
2 நாளாகமம் 4 : 22 (ECTA)
கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபக்கலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும், கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22