2 நாளாகமம் 29 : 1 (ECTA)
யூதாவின் அரசர் எசேக்கியா
(2 அர 18:1-3)
எசேக்கியா அரசரானபோது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியா மகளான அபியா என்பவளே அவர் தாய்.
2 நாளாகமம் 29 : 2 (ECTA)
அவர் தம் மூதாதையான தாவீதைப் போல் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்தார்.
2 நாளாகமம் 29 : 3 (ECTA)
திருக்கோவில் தூய்மைப் படுத்தப்படல் அவர் தம் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரின் இல்லக் கதவுகளைத் திறந்து, அவற்றைப் பழுதுபார்த்தார்.
2 நாளாகமம் 29 : 4 (ECTA)
குருக்களையும் லேவியரையும் வரவழைத்து கீழை மண்டபத்தில் ஒன்று கூட்டினார்.
2 நாளாகமம் 29 : 5 (ECTA)
அவர் அவர்களை நோக்கி, “லேவியரே, கேளுங்கள்; இப்பொழுது நீங்கள் உங்களையே தூய்மைப்படுத்திக்கொண்டு, உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்துங்கள், திருத்தலத்தின் எல்லாத் தீட்டுகளையும் அகற்றுங்கள். [* எசா 7: 1 ]
2 நாளாகமம் 29 : 6 (ECTA)
ஏனெனில், நம் தந்தையர் துரோகம் செய்து, நம் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தனர்; அவரைப் புறக்கணித்து, ஆண்டவரின் திருஉறைவிடத்திலிருந்து தங்கள் முகங்களைத் திருப்பி, முதுகைக் காட்டினர். [* எசா 7: 1 ]
2 நாளாகமம் 29 : 7 (ECTA)
அவர்கள், திருத்தலத்தில், இஸ்ரயேலின் கடவுளுக்குத் தூபமிடாமலும் எரிபலி செலுத்தாமலும் விளக்குகளை அணைத்து விட்டு, மண்டபக் கதவுகளைப் பூட்டி வைத்தனர்.
2 நாளாகமம் 29 : 8 (ECTA)
அதனால், யூதாவின் மீதும், எருசலேமின்மீதும் ஆண்டவர் சினம் கொண்டார்; அவர் அவர்களை நடுக்கத்திற்கும் அச்சத்துக்கும், பழிப்பிற்கும் கையளித்தார். இதை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள்!
2 நாளாகமம் 29 : 9 (ECTA)
இதன் பொருட்டே இதோ நம் தந்தையர் வாளால் வெட்டுண்டனர்; நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் நாடு கடத்தப்பட்டனர்.
2 நாளாகமம் 29 : 10 (ECTA)
இப்பொழுது இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய என் மனம் முடிவு செய்துள்ளது; அப்பொழுதுதான் அவரது வெஞ்சினம் நம்மைவிட்டு நீங்கும்.
2 நாளாகமம் 29 : 11 (ECTA)
ஆதலால், எம் புதல்வர்களே, நீங்கள் வாளாவிருக்க வேண்டாம்; ஏனெனில், நீங்கள் ஆண்டவர் திருமுன் நின்று திருப்பணி புரியவும், வழிபாடு நிறைவேற்றவும், தூபமிடவும் அவர் உங்களைத் தேர்ந்து கொண்டுள்ளார்” என்றார்.
2 நாளாகமம் 29 : 12 (ECTA)
அதைக் கேட்ட கோகாத்து புதல்வரில் அமாசாயின் மகன் மகாத்து. அசரியாவின் மகன் யோவேல், மெராரி புதல்வரில் அப்தியின் மகன் கீசு, எகல்லேலின் மகன் அசரியா, கெர்சோனியரில் சிமமாவின் மகன் யோவாகு, யோவாகின் மகன் ஏதேன்,
2 நாளாகமம் 29 : 13 (ECTA)
எலிசாப்பான் புதல்வரில் சிம்ரியும் எயூயேலும், ஆசாபு புதல்வரில் செக்கரியாவும் மத்தனியாவும்,
2 நாளாகமம் 29 : 14 (ECTA)
ஏமான் புதல்வரில் எகுவேலும் சிமயியும், எதுத்தூன் புதல்வரில் செமாயாவும், உசியேலும் ஆகிய லேவியர் எழுந்து,
2 நாளாகமம் 29 : 15 (ECTA)
தங்கள் சகோதரர்களை ஒன்றுதிரட்டி, தங்களையே தூய்மைப்படுத்தியபின், அரச கட்டளைக்கும் ஆண்டவரின் வாக்குக்கும் ஏற்ப ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்த நுழைந்தனர்.
2 நாளாகமம் 29 : 16 (ECTA)
ஆண்டவரின் இல்லத்தின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்த குருக்கள் உள்ளே சென்று, திருக்கோவிலில் கண்ட தீட்டான எல்லாவற்றையும் அதன் மண்டபத்திற்குக் கொண்டு வந்தனர். லேவியர் அவற்றை எடுத்துக் கிதரோன் பள்ளத்தாக்கில் கொட்டினர். * எபிரேயத்தில், ‘அரசர்களுக்கு’ என்பது பாடம் (காண்க 2 அர 16:17)..
2 நாளாகமம் 29 : 17 (ECTA)
முதல் மாதத்தின் முதல் நாளில் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். மாதத்தின் எட்டாம் நாள் ஆண்டவரின் மண்டபத்திற்கு வந்து, ஆண்டவரின் இல்லத்தை எட்டு நாளில் தூய்மைப்படுத்தினர். ஆக, முதல் மாதத்தின் பதினாறாம் நாளில் இப்பணியை முடித்தனர்.
2 நாளாகமம் 29 : 18 (ECTA)
திருக்கோவிலின் மறு அர்ப்பணம் அரசர் எசேக்கியாவிடம் அவர்கள் வந்து, “ஆண்டவரின் இல்லத்தை முழுமையாக நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்; எரிபலி பீடத்தையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும், திருமுன்னிலை அப்ப மேசையையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும்,
2 நாளாகமம் 29 : 19 (ECTA)
ஆகாசு தனது ஆட்சிக் காலத்தில் துரோகம் செய்து புறக்கணித்திருந்த எல்லாக் கலன்களையும் தூய்மைப்படுத்தி, ஆண்டவரின் பலிபீடத்துக்கு முன்பாக அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறோம்” என்றனர்.
2 நாளாகமம் 29 : 20 (ECTA)
அரசர் எசேக்கியா அதிகாலையில் எழுந்து, நகரத் தலைவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார்.
2 நாளாகமம் 29 : 21 (ECTA)
அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார்.
2 நாளாகமம் 29 : 22 (ECTA)
அவர்கள் காளைகளை வெட்ட, குருக்கள் அவற்றின் குருதியைப் பிடித்துப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்; ஆட்டுக்கிடாய்களை வெட்டி, அவற்றின் குருதியையும் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்; ஆட்டுக்குட்டிகளையும் வெட்டி அவற்றின் குருதியையும் பலிபீடத்தின்மேல் தெளித்தனர்;
2 நாளாகமம் 29 : 23 (ECTA)
அடுத்து, பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக் கிடாய்களை அரசனுக்கும் மக்கள் சபைக்கும் முன்பாகக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் கைகளை விரித்தனர்.
2 நாளாகமம் 29 : 24 (ECTA)
“இஸ்ரயேலர் அனைவருக்காகவும் எரிபலியும் பாவம்போக்கும் பலியும் செலுத்தவேண்டும்” என்று அரசர் கூறியிருந்ததால், குருக்கள் அவற்றை வெட்டி அவற்றின் குருதியைப் பலிபீடத்தில் தெளித்து, இஸ்ரயேலர் அனைவருக்காகவும் பாவம்போக்கும் பலியை நிறைவேற்றினர்.
2 நாளாகமம் 29 : 25 (ECTA)
தாவீதின் கட்டளைப்படியும், அரசரின் காட்சியாளர் காத்து, இறைவாக்கினர் நாத்தான் ஆகியோரின் கட்டளைப்படியும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைக்கும் லேவியரை ஆண்டவரின் இல்லத்தில் எசேக்கியா நியமித்திருந்தார். ஏனெனில், ஆண்டவரே இக்கட்டளையைத் தமது இறைவாக்கினர்கள் வாயிலாக அளித்திருந்தார்.
2 நாளாகமம் 29 : 26 (ECTA)
அதனால், தாவீதின் இசைக்கருவிகளுடன் லேவியரும், எக்காளத்துடன் குருக்களும் அங்கே நின்றிருந்தனர்.
2 நாளாகமம் 29 : 27 (ECTA)
பின்னர், எரிபலியைப் பீடத்தின்மேல் நிறைவேற்றுமாறு எசேக்கியா கட்டளையிட்டார்; அப்பலியைச் செலுத்தத் தொடங்கியபோது, இஸ்ரயேலரின் அரசர் தாவீதின் இசைக்கருவிகளுடனும் எக்காளத்துடனும் ஆண்டவருக்கான புகழ்ப்பாடல் தொடங்கியது. [* எசா 14: 28 ]
2 நாளாகமம் 29 : 28 (ECTA)
எரிபலி நிறைவேறு மட்டும் பாடகர்கள்பாட எக்காளம் முழங்க, எல்லா மக்களும் வணங்கி நின்றனர்.
2 நாளாகமம் 29 : 29 (ECTA)
அப்பலி நிறைவுற்றபோது அரசரும் அவரோடு இருந்த அனைவரும் தலைவணங்கி வழிபட்டனர்.
2 நாளாகமம் 29 : 30 (ECTA)
தாவீதின் வார்த்தைகளிலும், திருக்காட்சியாளர் ஆசாபின் மொழிகளிலும் ஆண்டவரைப் புகழுமாறு அரசர் எசேக்கியாவும் தலைவர்களும் லேவியர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆண்டவரைப் புகழ்ந்து தலைவணங்கி வழிபட்டனர்.
2 நாளாகமம் 29 : 31 (ECTA)
அப்பொழுது எசேக்கியா அவர்களை நோக்கி, “இதோ நீங்கள் ஆண்டவருக்கென உங்களையே அர்ப்பணித்துள்ளீர்கள்; ஆதலால், அணுகி வாருங்கள், ஆண்டவரின் இல்லத்துக்குப் பலிகளையும் நன்றிப்பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அப்பொழுது மக்கள் சபையார் பலிகளையும், நன்றிப்பலிகளையும் கொண்டு வந்தனர், விரும்பியோர் பலர் எரிபலிகளையும் கொண்டுவந்தனர்.
2 நாளாகமம் 29 : 32 (ECTA)
மக்கள் சபையார் கொண்டுவந்த எரிபலிகளின் மொத்த எண்ணிக்கை; எழுபது காளைகள், நூறு ஆட்டுக் கிடாய்கள், இருநூறு ஆட்டுக்குட்டிகள், இவையாவும் ஆண்டவருக்கான எரிபலி.
2 நாளாகமம் 29 : 33 (ECTA)
இவற்றுடன் அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் அர்ப்பணித்தனர்.
2 நாளாகமம் 29 : 34 (ECTA)
குருக்கள் சிலரே இருந்ததால், எரிபலிகளுக்கான எல்லாவற்றையும் தோலுரிக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவ்வேலையை முடித்துத் தங்களைத் தூய்மைப்படுத்தும்வரை அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களான லேவியர் உதவி செய்தனர். ஏனெனில், குருக்களைவிட லேவியர் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதில் அதிக நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
2 நாளாகமம் 29 : 35 (ECTA)
ஏராளமான எரிபலிகளுடன், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பும், எரிபலிக்கான நீர்மப் படையல்களும் இருந்தன. இவ்வாறு, ஆண்டவரின் இல்ல வழிபாடு மறுமலர்ச்சி அடைந்தது.
2 நாளாகமம் 29 : 36 (ECTA)
தன் மக்களுக்காகக் கடவுள் ஆற்றியது குறித்து எசேக்கியாவும், எல்லா மக்களும் மகிழ்ந்தனர். ஏனெனில், இவையாவும் மிக விரைவாய் நடந்தேறின.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36