2 நாளாகமம் 20 : 1 (ECTA)
பின்னர் மோவாபியரும் அம்மோனியரும் அவர்களுடன் மெயோனியருள் சிலரும் ஒன்றுசேர்ந்து யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.
2 நாளாகமம் 20 : 2 (ECTA)
சிலர் வந்து யோசபாத்திடம், "பெருந்திரளானோர் கடலின் அக்கரையிலிருந்தும் ஏதோமிலிருந்தும் உம்மை எதிர்த்து வந்து ஏங்கேதி என்ற அச்சோன்தாமாரில் இருக்கின்றனர்" என்றனர்.
2 நாளாகமம் 20 : 3 (ECTA)
அப்பொழுது யோசபாத்து அச்சமுற்று, ஆண்டவரை நாடுவதில் உறுதிபூண்டு, யூதா மக்கள் யாவரும் நோன்பிருக்குமாறு கட்டளையிட்டார்.
2 நாளாகமம் 20 : 4 (ECTA)
அப்படியே யூதா மக்கள் ஆண்டவரிடமிருந்து உதவி பெற ஒன்றுகூடினர்; யூதாவின் எல்லா நகர்களிலிருந்தும் அதற்கென வந்திருந்தனர்.
2 நாளாகமம் 20 : 5 (ECTA)
அப்பொழுது யோசபாத்து யூதா, எருசலேம் சபையாருடன் ஆண்டவரின் இல்லத்துப் புது மண்டபத்தின்மேல் நின்று கொண்டு,
2 நாளாகமம் 20 : 6 (ECTA)
"எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே! விண்ணகக் கடவுள் நீரே அன்றோ! நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர்; நீரே வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவர்! உம்மை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது.
2 நாளாகமம் 20 : 7 (ECTA)
எங்கள் கடவுளே, உம் மக்கள் இஸ்ரயேலருக்காக இந்த நாட்டு மக்கள் அனைவரையும் வெளியேற்றி, இதனை உம் நண்பர் ஆபிரகாமின் வழிமரபினருக்கு என்றென்றுமாகக் கொடுத்தவர் நீரே அன்றோ!
2 நாளாகமம் 20 : 8 (ECTA)
ஆகவே, அவர்கள் இந்நாட்டில் குடியேறி உமது திருப்பெயர் விளங்குமாறு இத்திருத்தலத்தை எழுப்பினார்கள்.
2 நாளாகமம் 20 : 9 (ECTA)
வாள், தண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய எவ்விதத் தீங்கும் எங்களுக்கு நேர்ந்தால், உமது திருப்பெயர் விளங்கும் இக்கோவிலுக்கு நாங்கள் வந்து, உமது திருமுன் நின்று, எங்கள் வேதனைகளில் உம்மை நோக்கி மன்றாடுவோம், நீரும் அதனைக் கேட்டு எங்களை மீட்பீர்.
2 நாளாகமம் 20 : 10 (ECTA)
இதோ! அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைநாட்டவரும் எங்களுக்கு எதிராக வருகிறார்கள்; எகிப்திலிருந்து இஸ்ரயேலர் வெளியேறிய காலத்தில் இவர்கள் நாட்டின் வழியே போக நீர் அவர்களை அனுமதிக்கவில்லை; எனவே, இஸ்ரயேலர் அவர்களை அழிக்காது விலகிச் சென்றனர்.
2 நாளாகமம் 20 : 11 (ECTA)
இதோ, அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடைமையாகத் தந்த இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்களே!
2 நாளாகமம் 20 : 12 (ECTA)
எங்கள் கடவுளே, அவர்களுக்கு நீர் நீதி வழங்க மாட்டீரோ? எங்களுக்கு எதிராக வருகிற இப்பெரும் படையை எதிர்த்து நிற்க எங்களுக்கு வலிமை இல்லை. எங்கள் கண்கள் உம்மை நோக்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் செய்ய வேண்டியது வேறு எதுவெனத் தெரியவில்லை" என்று மன்றாடினார்.
2 நாளாகமம் 20 : 13 (ECTA)
யூதா குலத்தார் அனைவரும் தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர்களுடன் ஆண்டவர்திருமுன் நின்று கொண்டிருந்தனர்.
2 நாளாகமம் 20 : 14 (ECTA)
அவ்வேளையில் அச்சபை நடுவில் இருந்த யாகசியேலின்மேல் ஆண்டவரின் ஆவி இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர்; இவர் மத்தனியா, எயியேல், பெனாயா ஆகியோரின் வழிவந்த சக்கரியாவின் புதல்வர்.
2 நாளாகமம் 20 : 15 (ECTA)
யாகசியேல் மக்களை நோக்கி, "யூதா, எருசலேம் வாழ்மக்களே, அரசே யோசபாத்து! கவனமாய்க் கேளுங்கள். ஆண்டவர் உங்களுக்குக் கூறுவது இதுவே; இப்பெரும் படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும் வேண்டாம். இப்போர் உங்களுடையது அல்ல, கடவுளுடையது.
2 நாளாகமம் 20 : 16 (ECTA)
நீங்கள் அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள்.
2 நாளாகமம் 20 : 17 (ECTA)
அங்கே நீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே! எருசலேமே! உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள்! எனவே? அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களை நோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்" என்றார்.
2 நாளாகமம் 20 : 18 (ECTA)
இதைக் கேட்டவுடன் யோசபாத்தும், அவருடன் யூதா, எருசலேம் வாழ்மக்கள் யாவரும் முகங்குப்புறத் தரையில் வீழ்ந்து ஆண்டவரை வணங்கினர்.
2 நாளாகமம் 20 : 19 (ECTA)
கோகாத்தியரையும் கோராகியரையும் சார்ந்த லேவியர் எழுந்து நின்று இஸ்ரயேலின் கடவுளை உரத்த குரலிலும் உயர்ந்த தொனியிலும் வாழ்த்தினர்.
2 நாளாகமம் 20 : 20 (ECTA)
அவர்கள் அதிகாலையில் எழுந்து, தெக்கோவாப் பாலைநிலம் நோக்கிப் புறப்படுகையில், யோசபாத்து அவர்களிடம், யூதா, எருசலேம் வாழ்மக்களே! எனக்குச் செவி கொடுங்கள்! உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்புங்கள்! உங்களுக்குத் தீங்கு ஏதும் நேராது. அவர்தம் இறைவாக்கினர்களை நம்புங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்றார்.
2 நாளாகமம் 20 : 21 (ECTA)
அவர் மக்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்தபின், ஆண்டவரைப் புகழ்ந்து பாடப் பாடகர்களை நியமித்தார். அவர்கள் விழாச் சீருடை அணிந்து படைகளுக்கு முன்னே பாட வேண்டியது; "ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர்தம் பேரன்பு என்றுமுளது."
2 நாளாகமம் 20 : 22 (ECTA)
அவர்கள் அவ்வாறே ஆண்டவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிய போது, யூதாவை எதிர்த்து வந்தவர்களான அம்மோனியரையும் மோவாபியரையும் சேயீர் மலைநாட்டவரையும் ஒருவருக்கொருவர் பகைவராக்கி முறியடித்தார் ஆண்டவர்.
2 நாளாகமம் 20 : 23 (ECTA)
முதலில் அம்மோனியரும் மோவாபியரும் சேர்ந்து சேயீர் மலைநாட்டவரை அடியோடு அழித்தனர். இவ்வாறு சேயீர் மக்களைத் தீர்த்துக் கட்டியபின் தங்களுக்குள் ஒருவர் மற்ற வரை வீழ்த்தி அழித்துக் கொள்வதில் உதவினர்.
2 நாளாகமம் 20 : 24 (ECTA)
யூதா மக்கள் பாலைநிலக் காவல் மேட்டுக்கு வந்து, படைத்திரளைப் பார்த்தபோது, நிலத்தில் பிணங்களே கிடப்பதையும், யாருமே உயிர் தப்பவில்லை என்பதையும் கண்டு கொண்டனர்.
2 நாளாகமம் 20 : 25 (ECTA)
உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.
2 நாளாகமம் 20 : 26 (ECTA)
நான்காம் நாள் பெராக்கா பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி, ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர். எனவே இந்நாள் வரை அவ்விடம் 'புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.
2 நாளாகமம் 20 : 27 (ECTA)
பின்னர் யூதா, எருசலேம் ஆள்கள் அனைவரும் யோசபாத்தின் தலைமையில் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினர்; ஏனெனில் ஆண்டவர் அவர்களின் பகைவர்களை முன்னிட்டு, அவர்களை மகிழ்வுறச் செய்தார்.
2 நாளாகமம் 20 : 28 (ECTA)
அவர்கள், தம்புரு, சுரமண்டலம், எக்காளம் இசைத்து எருசலேமுக்கு வந்து, ஆண்டவரது இல்லத்தினுள் நுழைந்தனர்.
2 நாளாகமம் 20 : 29 (ECTA)
ஆண்டவர் இஸ்ரயேலின் பகைவர்களுக்கு எதிராகப் போரிட்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற எல்லா நாட்டு அரசுகளும் ஆண்டவர்மீது அச்சம் கொண்டன.
2 நாளாகமம் 20 : 30 (ECTA)
யோசபாத்தின் அரசு அமைதி கண்டது. அவர் கடவுளும் அவருக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்.
2 நாளாகமம் 20 : 31 (ECTA)
இவ்வாறு யூதா நாட்டை யோசபாத்து ஆண்டு வந்தார். அவர் தம் முப்பதாவது வயதில் அரசர் ஆனார். அவர் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேம் ஆட்சி செய்தார். சில்கியின் மகள் அசுபா என்பவளே அவர் தாய்.
2 நாளாகமம் 20 : 32 (ECTA)
அவர் தம் தந்தை ஆசாவின் வழிகளைவிட்டு விலகாது ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.
2 நாளாகமம் 20 : 33 (ECTA)
ஆயினும், தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. தங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரை மக்களின் மனம் உறுதியாகப் பற்றிக்கொள்ளவில்லை.
2 நாளாகமம் 20 : 34 (ECTA)
யோசபாத்தின் பிறசெயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் அனானீயின் மகன் ஏகூவின் சொற்களில் எழுதப்பட்டுள்ளன.
2 நாளாகமம் 20 : 35 (ECTA)
பின்னர், யூதாவின் அரசன் யோசபாத்து, தீய வழியில் நடந்த இஸ்ரயேலின் அரசன் அகசியாவுடன் சேர்ந்துகொண்டார்.
2 நாளாகமம் 20 : 36 (ECTA)
தர்சீசுக்குப் போகுமாறு எட்சியோன்-கெபேரில் அவர்கள் கப்பல்களைக் கட்டினர்.
2 நாளாகமம் 20 : 37 (ECTA)
ஆனால் மாரேசாவைச் சார்ந்த தோதவாவின் மகன் எலியேசர் யோசபாத்திற்கு எதிராக இறைவாக்குரைத்து "நீர் அகசியாவோடு சேர்ந்து கொண்டமையால் ஆண்டவர் உம் திட்டங்களை அழித்து விடுவார்" என்றார். அவ்வாறே அக்கப்பல்கள் உடைந்துபோக, தர்சீசு பயணம் தடைப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: