2 நாளாகமம் 17 : 1 (ECTA)
யோசபாத்து அரசன் ஆதல் ஆசாவின் மகன் யோசபாத்து அவனுக்குப்பின் ஆட்சியேற்று, இஸ்ரயேலுக்கு எதிராகத் தம்மை வலுப்படுத்திக் கொண்டார்.
2 நாளாகமம் 17 : 2 (ECTA)
யூதாவின் அனைத்து அரண்சூழ் நகர்களில் போர்ப்படைகளையும், பிற பகுதிகளிலும் தம் தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்ராயிம் நகர்களிலும் காவற்படைகளையும் நிறுத்தி வைத்தார்.
2 நாளாகமம் 17 : 3 (ECTA)
ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல் தம் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார்.
2 நாளாகமம் 17 : 4 (ECTA)
மேலும், அவர் இஸ்ரயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே நடந்து வந்தார்.
2 நாளாகமம் 17 : 5 (ECTA)
ஆதலால், ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். யூதா மக்கள் அனைவரும் யோசபாத்துக்குக் காணிக்கைகள் கொண்டு வந்தனர்; அவர் செல்வமும் புகழும் பெருகியது.
2 நாளாகமம் 17 : 6 (ECTA)
மேலும், ஆண்டவரது வழியில் அவர் உள்ளம் உறுதியடைந்து, யூதாவிலிருந்த தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் அகற்றினார்.
2 நாளாகமம் 17 : 7 (ECTA)
அவர் தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு தலைவர்களான பென்கயில், ஒபதியா, செக்கரியா, நெத்தனியேல், மீக்காயா ஆகியோரையும்,
2 நாளாகமம் 17 : 8 (ECTA)
லேவியரான செமாயா, நெத்தனியா, செபதியா, அசாவேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தோபியா, தோபு-அதோனியா ஆகியோரையும் குருக்கள் எலிசாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பி வைத்தார். * ‘இறைவாக்கினர் ஓதேது’ என்பது எபிரேய பாடம்..
2 நாளாகமம் 17 : 9 (ECTA)
இவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று யூதாவில் போதித்தனர்; யூதாவின் எல்லா நகர்களிலும் சுற்றி அலைந்து மக்களுக்குப் போதித்தனர்.
2 நாளாகமம் 17 : 10 (ECTA)
யோசபாத்தின் சிறப்பு யூதாவைச் சூழ்ந்த நாடுகள் எல்லாம், ஆண்டவர்மீது அச்சம் கொண்டதால், அவை யோசபாத்தை எதிர்த்துப் போரிடவில்லை.
2 நாளாகமம் 17 : 11 (ECTA)
பெலிஸ்தியர் யோசபாத்துக்கு அன்பளிப்பும் கப்பமுமாக வெள்ளிப் பணமும் கொடுத்தனர். அரேபியரும் அவருக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கிடாய்களையும் ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக் கிடாய்களையும் அளித்தனர்.
2 நாளாகமம் 17 : 12 (ECTA)
யோசபாத்து மென்மேலும் வலிமையடைந்து வந்தார்; யூதாவில் கோட்டைகளையும் சேமிப்பு நகர்களையும் கட்டினார்.
2 நாளாகமம் 17 : 13 (ECTA)
யூதாவின் நகர்களில் சேமிப்பு மிகுதியாய் இருந்தது; வலிமைமிகு போர்வீரர் எருசலேமில் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 14 (ECTA)
தங்கள் மூதாதையரின் குடும்பத்தின்படி அவர்களது எண்ணிக்கை: யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா;
2 நாளாகமம் 17 : 15 (ECTA)
அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான்.
2 நாளாகமம் 17 : 16 (ECTA)
அவனை அடுத்து, ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவனும் சிக்ரியின் மகனுமான அமசியா; இவனுக்குக்கீழ் வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 17 (ECTA)
பென்யமினிலிருந்து வலிமைமிகு போர் வீரர் எலியாதா. இவனுக்குக்கீழ் வில்லும் பரிசையும் தாங்கிய வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 18 (ECTA)
அவனை அடுத்து, யோசபாத்து, இவனுக்குக்கீழ் போர்க்கோலம் பூண்ட இலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 19 (ECTA)
இவர்கள் அரசருக்குப் பாதுகாப்புப் பணி புரிந்து வந்தனர். மேலும், யூதாவின் அரண்சூழ் நகர்களில் அரசரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் இருந்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19