2 நாளாகமம் 11 : 1 (ECTA)
செமாயாவின் இறைவாக்கு
(1 அர 12:21-24)
ரெகபெயாம் எருசலேமுக்குத் திரும்பியவுடன் யூதா, பென்யமின் குலத்தாரில் ஓர் இலட்சத்து எண்பதாயிரம் போர்வீரர்களைத் திரட்டினான்; ஏனெனில், இஸ்ரயேலுடன் போர்தொடுத்து அரசை மீண்டும் கைப்பற்ற விரும்பினான்.
2 நாளாகமம் 11 : 2 (ECTA)
அப்போது கடவுளின் மனிதரான செமாயாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
2 நாளாகமம் 11 : 3 (ECTA)
“யூதா அரசனும் சாலமோனின் மகனுமான ரெகபெயாமிடமும், யூதாவிலும் பென்யமினிலும் வாழும் இஸ்ரயேலர் அனைவரிடமும் நீ சொல்ல வேண்டியது:
2 நாளாகமம் 11 : 4 (ECTA)
‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; ஏனெனில், என்னாலேயே இச்செயல் நிகழ்ந்தது.” ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள், எரொபவாமுக்கு எதிராகச் செல்வதைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
2 நாளாகமம் 11 : 5 (ECTA)
ரெகபெயாம் நகர்களை வலுப்படுத்தல் ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன:
2 நாளாகமம் 11 : 6 (ECTA)
பெத்லகேம், ஏத்தாம், தெக்கோவா,
2 நாளாகமம் 11 : 7 (ECTA)
பெத்சூர், சோக்கோ, அதுல்லாம்,
2 நாளாகமம் 11 : 8 (ECTA)
காத்து, மாரேசா, சீபு,
2 நாளாகமம் 11 : 9 (ECTA)
அதோரயிம், இலாக்கிசு, அசேக்கா,
2 நாளாகமம் 11 : 10 (ECTA)
சோரா, அய்யலோன், எபிரோன்; இவையே யூதாவிலும் பென்யமினிலும் கட்டப்பட்ட அரண்சூழ் நகர்கள்.
2 நாளாகமம் 11 : 11 (ECTA)
அவன் நகர்க்கோட்டைகளை வலுப்படுத்தி, அவற்றுக்குத் தளபதிகளை நியமித்தான்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சை இரசம் போன்றவற்றுக்கான கிடங்குகளையும் ஏற்படுத்தினான்.
2 நாளாகமம் 11 : 12 (ECTA)
அவன் ஈட்டிகளாலும் கேடயங்களாலும் ஒவ்வொரு நகரையும் மிகவும் வலிமைமிக்கதாக்கினான். இவ்வாறு, ,யூதாவும் பென்யமினும் அவன் பக்கமாய் இருந்தன.
2 நாளாகமம் 11 : 13 (ECTA)
குருக்கள் மற்றும் லேவியர் வருகை இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த குருக்களும் லேவியரும் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்து அவனோடு சேர்ந்து கொண்டனர்.
2 நாளாகமம் 11 : 14 (ECTA)
இவர்கள் ஆண்டவருக்குக் குருத்துவப் பணி செய்யாதவாறு எரொபவாமும் அவன் புதல்வரும் இவர்களை விலக்கி வைத்தனர். எனவே, இவர்கள் தங்கள் மேய்ச்சல் நிலத்தையும் உடைமைகளையும் விட்டுவிட்டு, யூதாவுக்கும் எருசலேமுக்கும் திரும்பிச் சென்றனர்.
2 நாளாகமம் 11 : 15 (ECTA)
ஏனெனில், எரொபவாம் தன் தொழுகை மேடுகளுக்கும், தான் செய்திருந்த ஆட்டு, கன்றுக்குட்டிச் சிலைகளுக்கும் தானே குருக்களை நியமித்தான். * 1 அர 12:31..
2 நாளாகமம் 11 : 16 (ECTA)
அந்த லேவியரைத் தொடர்ந்து, இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தம் கடவுளாம் ஆண்டவரை முழு இதயத்தோடு வழிபட விரும்பியோர் தம் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குப் பலி செலுத்த எருசலேமுக்கு வந்தனர்.
2 நாளாகமம் 11 : 17 (ECTA)
இவ்வாறு, அவர்கள் யூதாஅரசையும் சாலமோன் மகன் ரெகபெயாம் ஆட்சியையும் மூன்றாண்டுகள் உறுதிப்படுத்தினர்; ஏனெனில், அவர்கள் தாவீது, சாலமோன் நடந்த வழியில் மூன்றாண்டுகளே வாழ்ந்தனர்.
2 நாளாகமம் 11 : 18 (ECTA)
ரெகபெயாமின் குடும்பம் பின்பு, ரெகபெயாம் தாவீதின் மகன் எரிமோத்துக்கும், ஈசாயின் பேத்தியும் எலியாபின் மகளுமான அபிகயிலுக்கும் பிறந்த மகலாத்து என்பவளை மணந்து கொண்டான்.
2 நாளாகமம் 11 : 19 (ECTA)
அவள் அவனுக்கு எயூசு, செமரியா, சாகாம் என்ற புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.
2 நாளாகமம் 11 : 20 (ECTA)
அடுத்து, அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
2 நாளாகமம் 11 : 21 (ECTA)
ரெகபெயாம் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டியரையும் கொண்டிருந்தான்; இவர்கள் மூலம் இருபத்தெட்டுப் புதல்வரையும் அறுபது புதல்வியரையும் பெற்றான். ஆனால், மற்ற எல்லா மனைவியர், வைப்பாட்டியரையும் விட அப்சலோம் மகள் மாக்காவிடம் அவன் மிகுதியாக அன்பு பாராட்டினான்.
2 நாளாகமம் 11 : 22 (ECTA)
அதனால், ரெகபெயாம் மாக்காவின் மகன் அபியாவை அவன் சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தியிருந்தான்; இவனையே அரசனாக்கவும் அவன் எண்ணியிருந்தான்.
2 நாளாகமம் 11 : 23 (ECTA)
அவன் முன்மதியோடு தன் மற்றெல்லாப் புதல்வரையும், யூதா, பென்யமின் நாடுகள் முழுவதிலுமுள்ள அரண்சூழ் நகர்களுக்குப் பிரித்தனுப்பினான். அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருள்களையும், பல மனைவியரையும் ஏற்பாடு செய்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23