1 சாமுவேல் 7 : 1 (ECTA)
சாமுவேல் இஸ்ரயேலரை ஆளுதல் கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவரின் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.
1 சாமுவேல் 7 : 2 (ECTA)
பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது; இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.
1 சாமுவேல் 7 : 3 (ECTA)
இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: “நீங்கள் முழுஉள்ளத்தோடு ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காகத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.
1 சாமுவேல் 7 : 4 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.
1 சாமுவேல் 7 : 5 (ECTA)
மேலும் சாமுவேல், “இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன்” என்றார்.
1 சாமுவேல் 7 : 6 (ECTA)
ஆகவே, அவர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ‘ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம்’ என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.
1 சாமுவேல் 7 : 7 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராகப் புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.
1 சாமுவேல் 7 : 8 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: “நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடும்”.
1 சாமுவேல் 7 : 9 (ECTA)
ஆகவே, பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவருக்கு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர்தம் மன்றாட்டை கேட்டார்.
1 சாமுவேல் 7 : 10 (ECTA)
சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினர். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேலர் முன்பாகத் தோல்லியுற்றனர்.
1 சாமுவேல் 7 : 11 (ECTA)
இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் துரத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
1 சாமுவேல் 7 : 12 (ECTA)
சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில் நிறுத்தி, “ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார்” என்று கூறி அதற்கு ‘எபனேசர்’* என்று பெயரிட்டார். [* சாமு 6:2-4; 1 குறி 13:5- 7 ; எபிரேயத்தில், ‘உதவியின் கல்’ என்பது பொருள்.. ]
1 சாமுவேல் 7 : 13 (ECTA)
பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் கரம் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.
1 சாமுவேல் 7 : 14 (ECTA)
எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும், இஸ்ரயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.
1 சாமுவேல் 7 : 15 (ECTA)
சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.
1 சாமுவேல் 7 : 16 (ECTA)
அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, பெத்தேல், கில்கால், மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார்.
1 சாமுவேல் 7 : 17 (ECTA)
பின்பு, அவர் தம் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்; அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17