1 சாமுவேல் 4 : 1 (ECTA)
உடன்படிக்கைப் பேழை கைப்பற்றப்பட்டது அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார். பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர்.
1 சாமுவேல் 4 : 2 (ECTA)
பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுக்குள் நாலாயிரம் பேரைப் போர்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.
1 சாமுவேல் 4 : 3 (ECTA)
வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பிய போது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: “இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்.”
1 சாமுவேல் 4 : 4 (ECTA)
ஆகவே, வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்புனியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். [* விப 25: 22 ]
1 சாமுவேல் 4 : 5 (ECTA)
ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.
1 சாமுவேல் 4 : 6 (ECTA)
இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டனர்.
1 சாமுவேல் 4 : 7 (ECTA)
அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு; “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!
1 சாமுவேல் 4 : 8 (ECTA)
நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்!
1 சாமுவேல் 4 : 9 (ECTA)
பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!” என்றனர்.
1 சாமுவேல் 4 : 10 (ECTA)
பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்கு தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.
1 சாமுவேல் 4 : 11 (ECTA)
கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.
1 சாமுவேல் 4 : 12 (ECTA)
ஏலியின் இறப்பு போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன; தலையோ புழுதிபடிந்திருந்தன.
1 சாமுவேல் 4 : 13 (ECTA)
அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,
1 சாமுவேல் 4 : 14 (ECTA)
அழுகையின் குரல் கேட்ட ஏலி, “ஏன் இந்தக் கூக்குரல்?” என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.
1 சாமுவேல் 4 : 15 (ECTA)
அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததினால் அவரால் பார்க்க முடியவில்லை.
1 சாமுவேல் 4 : 16 (ECTA)
அம்மனிதன் ஏலியை நோக்கி, “நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன்” என்று சொல்ல, அதற்கு ஏலி, “மகனே! செய்தி என்ன?” என்று வினவினார்.
1 சாமுவேல் 4 : 17 (ECTA)
அதற்கு அத்தூதன், “இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும், மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னான்.
1 சாமுவேல் 4 : 18 (ECTA)
கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இறந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.
1 சாமுவேல் 4 : 19 (ECTA)
பினகாசு மனைவியின் இறப்பு அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.
1 சாமுவேல் 4 : 20 (ECTA)
அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, “அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய்” என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை; அதைப் பொருட்படுத்தவுமில்லை.
1 சாமுவேல் 4 : 21 (ECTA)
கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு ‘இக்க போது’* என்று பெயரிட்டாள். * எபிரேயத்தில், ‘மாட்சியின்மை’ என்பது பொருள்..
1 சாமுவேல் 4 : 22 (ECTA)
அவள் கூறியது: “இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில், கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது” என்றாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22